(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, December 16, 2009

பாபரி மஸ்ஜித் இடிப்பு: 68 குற்றவாளிகள் பிரிட்டனுக்குள் நுழைய தடை?

இந்தியாவின் மாண்பை குலைத்து சர்வதேச அளவில் இந்தியர்கள் அனைவரையும் வெட்கித்தலைகுனிய வைத்த அந்த 68 குற்றவாளிகளின் மீதான பிடி இறுகுகிறது.

இந்தியாவின் இறையாண்மை நீதிபரிபாலனம், மதசார்பின்மை, ஹிந்து மக்களின் பெருந்தன்மை அனைத்தின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம்களை வேதனைப்படுத்திய அந்த கடப்பாரை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரிட்டன் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் கோரிக்கை விடுத்து வருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிப்புசதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பரான் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றவாளிகளை மட்டுமின்றி மேலும் பலரை குற்றவாளிப்பட்டியல் சேர்க்க வேண்டுமென்று கோப கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


லிபரான் சுட்டிக்காட்டிய அந்த அறுபத்தெட்டு அயோக்கியர்களையும் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என பிரிட்டனின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பாப்ரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் பிரிட்டனில் நுழைய அனுமதிக்கப்பட்டால் அது அந்த நாட்டின் கவுரவத்திற்கே இழுக்காகும் என பிரிட்டனின் முன்னணி சமூக நல அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் இன்டியன் முஸ்லிம்ஸ் அறிவித்துள்ளது.

லிபரான் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட குற்றவாளிகளை பிரிட்டனில் நுழைய ஒரு போதும் அனு மதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பாப்ரி மஸ்ஜித் இடித்தசதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குற்றவாளிகள் என்பதை பரான் அறிக்கை மூலம் உலகம் கண்டது. பரான் கூறிய குற்றவாளிகள் மஸ்ஜித் இடிப்பிற்காக மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து கலவரங்களையும் நடத்தி ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்ம் களை படுகொலை செய்வதற்கும் மூலகாரணமாக விளங்கிய அவர்களை பிரிட்டிஷ் மண்ணில் வரவேற்க வேண்டாம். அவ்வாறு வரவேற்றால் அது மதவாதத்தை வரவேற்பதாக அமையும் என பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் கவுன்சின் தலைவர் முஹம்மது முனஃப்ஷீகா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசும் வேக நடவடிக்கை கள் வாயிலாக உடனடியாக தகர்ப்புக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் அறிக்கையினைத் தொடர்ந்து பிரிட்டனில் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன. மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளை பிரிட்டனுக்குள் நுழைய விடக்கூடாது என்ற போர்க்குரல் எழத் தொடங்கியதைத் தொடர்ந்து கடப்பாரைக்கும்பல் உச்ச கட்டபீதியில் இருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் மனித குலவிரோதிகள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது இது முதல்முறையல்ல 2006-ஆம் ஆண்டே குஜராத் படுகொலைகளின் சூத்ரதாரியான நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதல் மோடிக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பல தடவை மோடியின் சார்பில் அனுமதிக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் படுகேவலமாக மோடி தரப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதே ஆண்டில் பிரிட்டனும் மோடிக்கு அனுமதி இல்லை என அறைந்து சாத்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டில் மீண்டும் அமெரிக்கா செல்ல மோடி தரப்பினரால் விசாவிற்கு விண்ணப்பம் கோரிய போதும் அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் ஓமனிருந்தும் மோடிக்கு மூக்கறுப்பு அறிவிப்புகள் வெளிவந்தன. இந்நிலையில் பரான் கூறிய குற்றவாளிகளை பிரிட்டனில் நுழையத்தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழத் தொடங்கியிருப்பதால் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பயங்கரவாதிகள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாப்ரி மஸ்ஜித் உடனடியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இடிப்புக் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என அமெரிக்காவின் முன்னணி சமூகநல அமைப்பான இண்டியன் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் யு.எஸ்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர். ஹைதர்கான் இது குறித்து விடுத்த அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் மீது தங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாகவும் குற்றவாளிகள் நிச்ச யம் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை கடப்பாரை கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஹபிபா பாலன்//tmmk.in//

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...