(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, January 29, 2010

செல்போன்கள் --அறிவியல் அதிசயம்

தொலைபேசிகள் இயக்கத்திற்கு வந்த பிறகும்கூட தொலைபேசியின் மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால் பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி. பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின் வளர்ச்சி.


செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின் எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை 1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும் அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும் பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை பற்றிப் பார்ப்போம்.

இன்றைய செல்போன்களில் கீழ் காணும் பலவிதமான நேர்த்தியான செயல்பாடுகள் கொண்டிருக்கிறது. அவைகள்.


1. அழைப்புப் பற்றிய விரிவான விவரங்களை பதிவு செய்யும் வசதி.

2. செய்ய வேண்டிய காரியங்கள் பற்றிய குறிப்பு.

3. சந்திப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் நினைவூட்டி ஏற்படுத்திக் கொள்ளும் வசதி.

4. எளிமையான கணக்குகளை போடுவதற்கு ஏற்ற உட்பொருத்தப்பட்ட கால்குலேட்டர்.

5. சிறு தகவல் சேவை (SMS)

6. மின் அஞ்சல் வசதி(email)

7. வலைத்தளங்களிலிருந்து தகவல்களை பெறும் வசதி.

8. வலைத்தளங்களை அலசும் வசதி. (Web Browsing)

9. சிறு விளையாட்டுகளை விளையாடும் வசதி.

10. Pனுயுளஇ ஆP3 மற்றும் புPளு அலை ஏற்பிகளை இணைக்கும் வசதி.

11. பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகள் கேட்கும் வசதி (FM Radio)

12. ஆச்சர்யதக்க வகையில் எண்ணற்ற MP3 பாடல்களை பதிவு செய்து கொண்டு தேவைப் படும்பொழுது கேட்கும் வசதி.

13. "புகைப்படம்" மற்றும் "வீடியோ" எடுக்கும் வசதி.

14. புகைப்பட தகவல் சேவை (Multi-Media Massaging Service - MMS)


சிறு தகவல் சேவை

இலக்குமுறை மின்தளங்கள் வசதி கொண்டிருக்கும். இச்சேவையில் 160 வரியுருக்களை மின்தள இயக்க சேவை மையம் மூலமாக செல்போன்களுக்கு அனுப்பவும் பெறவும் முடியும். இணையதளங்களில் நஙந நுழைவு வாயில் மூலமாகவும் சிறு தகவல் சேவை பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. செல்போன்கள் இயக்கத்தில் இல்லாதபோதும், அலை வீச்சுக்கு அப்பாற்பட்ட இடத்தில் உள்ளபோதும் இத்தகவல்கள் பதிவு செய்யப்பட்டு செல் போன்கள் இயக்கத்தில் வந்தவுடன் கிடைக்கப்பெறுகிறது. விளம்பரம் முதல், உலக செய்திகள், ஓட்டு வேட்டை முடிவுகள், கிரிக்கெட் இப்படி எல்லாமே நஙந தான்.உடனடித் தகவல் உரையாடல்:

உடனடித் தகவல் தேவை ஏற்கனவே இணையதளங்களில் இருப்பதை அறிந்திருப்பீர்கள். இச்சேவை பெறுவதற்கு கணினி மூலம் இணைய இணைப்பு பெற்ற வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது இணைய மையங்களிலோ தான் பெறமுடியும். ஆனால் செல்போனிலோ நீங்கள் பள்ளி, கல்லு}ரி செல்லும் போதோ அலுவலகம் செல்லும்போதோ எங்கிருந்தாலும் தொடரா இணைப்பில் உள்ள உங்கள் நண்பருடன் உரையாட முடியும். செல்போன் களில் உடனடித் தகவல் சேவை ஊர்தி ஆள்கலத்திற்கு ஆழடிடைந னழஅயin) மாற்றப்பட்டிருப்பதால் இவ்வசதி கிடைக்கப் பெறுகின்றன.

செல்போன்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் உள்ளிடும் உரையாடல்களை உடனடியாக பெறும் வசதி கொண்ட அனைவரையும் அழைத்து உரையாடல் நிகழ்த்தலாம். இதற்காக உடனடித் தகவல் சேவை பயன் படுத்துபவர்களுக்கு உரையாடு அறை ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கிறது. நண்பர்களும், நண்பி களும் மற்றும் தோழர்கள் இன்று கம்ப்யூட்டர் மையம் செல்லாமல் வகுப்புகளிலேயே செல்போன் மூலம் உரையாடுவது செய்வது இப்போது சாதாரணமாக உள்ளது.

ஜாவா மிதக்கும் செயல்நிரல்:செல்போன்கள் உபயோகிக்கும் பெரும் பாலானோர் தங்கள் விருப்பத் திற்கேற்றவாறு வளைத்தொனி ஃமணியோசை மற்றும் திரைக்காப்பிகளை இணையத்தளத்திலிருந்து செல் போன்களுக்கு இறக்கம் செய்து கொள்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது ஜாவாவின் தொழில்நுட்பம். அன்றாட வாழ்க்கையின் நிர்வாக சாதனங்கள், பயண சம்பந்தமான பயனூறுகள், தகவல் சேவைகள் மற்றும் ஒளிக்கற்றை விளையாட்டுக்கள் போன்றவற்றையும் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெறலாம். மேற்கூறிய அம்சங்களையெல்லாம் செல்போனில் ஏற்றிக் கொள்வதும், தேவையில்லாதபோது அதை அகற்றி விடுவதும் மிக எளிது.

ஜாவாவின் தொழில் நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பயனூறுகளை தேர்வு செய்வதோடு முடிவதில்லை, அவற்றைப் பார்த்து மகிழ்ந்து அது முழுமையாக உணர்வதற்கும்தான். இதன் வடிவமைப்பாளர்கள், வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பத்திற்கேற்ப பல டிசைன்களில் ருஐ எனப்படும் பயனீட்டாளர்கள் இடைமுகத்தை ஏற் படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வித பயனூற்றங்களை கம்பியில்லா பயனூறு வழிமுறை மேம்பாடுகளை பயன்படுத்தி தேடிக் கொள்ளலாம். நவீன நோக்கியா கைச் சாதனத்தில் உள்ள பயனூறு உறையைப் பயன்படுத்தி இவ்வித பயனூற்றங்களை நேரடியாக இறக்கம் செய்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பல பயனூற்று வடிவமைப்பாளர்கள் தங்களின் கற்பனை மற்றும் படைக்கும் திறமைகளைக் கொண்டும் எல்லையில்லா ஜாவாவின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் கம்பியில்லா தகவல் தொடர்பு உலகத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மொபைல் வீடியோ:


ஊர்தி ஒளித்தோற்றம் செல்போன்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலவிதமான வழிகளில் வீடியோக்களை அனுப்பவும் பெறவும் வசதி உண்டாக்கப்பட்டிருக்கின்றது. இந்த வசதி ஒளித்தோற்றங்களை பார்ப்பதற்கும், அனுப்புவதற்கும், தங்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவும் மற்றும் இவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகிறது.

ஊர்தி ஒளித்தோற்றத்தில் இறக்க உள்ளடக்கம் தொடரோட்ட உள்ளடக்கம் என இரண்டு வகைகள் உள்ளன. இறக்க உள்ளடக்க வகையில் ஒளித்தோற்றங்கள் சிறு ஆயத்தப் படமாக இருக்கும். இவைகள் செல்போன்களில் உள்ள நினைவகத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.

பல் ஊடக தகவல் சேவையும் இதே முறையில்தான் தேக்கிவைக் கப்படுகிறது. இரண்டாவது வகையான தொடரோட்ட உள்ளடக்கம் செயலாற்றும் விதம் ஏறக்குறைய தொலைக்காட்சி பெட்டியைபோல் இருக்கும். இவ்வசதி கொண்ட செல்போன்கள் காட்சியமைப்பு போல் செயலாற்றும். இருந்தாலும் இவற்றில் எந்தவொரு தகவலையும் தேக்கி வைக்க முடியாது. இதனால் அதிக அளவில் உள்ள உள்ளடக்கங்களை காண்பதற்கு மிகவும் ஏதுவாக திகழ்கிறது இந்த தொழில் நுட்பம்.

மொபைல் வீடியோ மூலம் கீழ்காணும் சேவைகளைப் பெறலாம்.

* மனதிற்கு உடன் சந்தோஷத் தினை தந்திட

* நண்பர்கள் மற்றும் குடும்பத்தி னருக்கான தனிப்பட்ட ஒளித்தோற்ற வாழ்த்துக்கள்

* பல்ஊடக தகவல் சேவை மூலம் பொழுது போக்கு அம்சங்கள், கார்ட்டூன்கள், திரைப்பட முன் னோட்டங்கள், இசை ஒளித் தோற்றங்கள்

* பயிற்சி வகுப்புகள்.

* தொடர் செய்திகள், வானிலை அறிக்கைகள் மற்றும் விளையாட்டு சிறப்புச் செய்திகள்.

* உங்களின் கற்பனை மற்றும் படைப்புத் திறனுக்கு தீனி.

GSM (Global System for Mobile communication):செல்போன் பூகோள தகவல் தொடர்பு அமைப்பு GSM' என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. முதல் ஐரோப்பிய இலக்க நிர்ணய முறை மேம்படுத்தப்பட்டு செல்போன்கள் சேவை முறைகள் ஐரோப்பியா முழுவதும் நிறுவப்பட்டது. இதன் வெற்றியின் எதிரொலியால் இன்று உலகம் முழுவதும் சுமார் 80 எநங மின் தளங்கள் பரவி இயக்கத்தில் உள்ளன. இது 900GSM அதிர்வெண் கொண்டவை ஆகும்.

செல்போன் தொழில்நுட்பத்தில் புதிய சேவைகள்:


MMS செல்போன்கள் தொழில் நுட்பத்தால் வளர்ந்த பலவிதமான சேவைகளில் மிக நேர்த்தியாக விளங்குகிறது மிக அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்ட பல் ஊடக தகவல் சேவை
(. செல்போன்களின் ஆரம்பகாலத்திலிருந்து அனுப்பப்படும், SMS சேவையை போலவே MMS மூலம் தகவல்கள் தானியங்கு முறையிலும் துரிதமாகவும், அனுப்பப்படுகிறது. இருந்தாலும் MMS-ல் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் SMS-ஐ விட பல மைல்கள் கடந்து முன்னேறி நிற்கிறது. MMS மூலம் தகவல் அனுப்புபவர்கள் தகவல்களுடன் படம், ஒலி மற்றும் பல மேம்பட்ட உள்ளடக்கங்களை வைத்து தங்களது விருப்பத்திற் கேற்றவாறு ஒலி மற்றும் படத் தகவல்களை அமைத்து அனுப்பலாம்.

ஆஆளு-ன் தொழில் நுட்பம் உள்ளடக்கத் தகவல்களை அகலப்படுத்துவது மற்றும் ஒரு செல்போனிலிருந்து மற்ற செல்போனுக்கு MMS தகவல் அனுப்புவதோடு முடிந்து விடவில்லை இதன் பணி. ஒரு செல் போனிலிருந்து மின் அஞ்சல் அனுப்பு வதற்கும் மற்றும் பெறுவதற்குண்டான வசதியையும் உள்ளடக்கியிருக் கிறது என்பது இதன் சிறப்பு. மேற் கூறிய சிறம்பம்சங்கள் அனைத்தும் செல் தகவல் தொடர்பு, தனி உபயோகம் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களிலும் மிக உன்னதமான பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

பல்ஊடக தகவல் சேவைகள் , செல் தகவல் தொடர்பை முற்றிலுமாக மாற்றி அமைத்து தனி உபயோக, நம்பகத்தன்மை கொண்ட மற்றும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்த MMSு-ன் சிறப்பம்சம் இக்கால சந்ததியினருக்கு ஏற்றதாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

தகவல் தொகுப்பு:
எம்.ஜே.எம்.இக்பால்,
துபாய்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...