(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, January 18, 2010

ஹதீஸ் - அடிப்படை விளக்கம்

ஹதீஸ் என்றால் என்ன?

ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்பொருள்படும்.

இஸ்லாமிய உலகில் ஹதீஸ: என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

ஹதீஸ் வகைகள்

ஸஹீஹ்

அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச்சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்பபட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ:கள் மவ்லூஉ எனப்படும்.



ஹதீஸ் தொகுப்புகள்:

என் சம்பந்தமாக எதையும் எழுதிவைக்காதீர்கள் என நபிகள் நாயகம் உத்தரவிட்டடிருந்தார்கள் .

குர்ஆன் எழுதிப்பதிவு செய்யப்படும் சுழ்நிலையில் ஹதீஸூம் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம் ? எது நபிகளாரின் பொன்மொழி? என்பதில் குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை நபிகள் நாயகம் சொன்னார்கள். ஆகவே நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

ஆயினும் அபூஹூரைரா போன்ற ஓரிரு நபித்தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று தெளிவுபெற்றிருந்தமையால் சில பொன்மொழிகளை ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்கள். எனினும் அவை பெரிய அளவிலோ தெகுப்பு வடிவிலோ இருக்கவில்லை.

நபித்தோழர்கள் அபரிமிதமான தங்களது நினைவாற்றலில் இருந்தே நபிகளாரின் பொன்மொழிகளை வாய்வழியாக உலகுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அக்காலங்களில் நபிகளாரின் பொன்மொழிகளை மனனம்செய்வது சிறந்தமார்க்க சேவையாக கருதப்பட்டது. இன்றை காலத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்பவர் ஹாபிழ் என்று அழைக்கப்படுகிறார். அன்றோ ஒரு இலட்சம் பொன்மெழிகளை மனனம் செய்தவர் ஹாபிழ் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல மனனம் செய்யப்படும் பொன்மொழிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஹாகிம் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் ஆகிய சிறப்புபெயர்கள் வழங்கப்பட்டன.


முதல் தொகுப்பு
ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த உமைய்யா வம்ச ஆட்சியாளர் ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (61101ஹி 681717கி.பி.) ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பெருமளவில் நபித்தோழர்கள் மரணமடைந்த போது ஹதீஸ்கள் நூல் வடிவத்திவ் தொகுக்கப்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களது உத்தரவிற்கேற்ப இமாம் முஹம்மது பின் முஸ்லிம் பின் `ஹாப் அஸ்ஸூஹரீ ( ஹி 124 ) நபிகளாரின் பொன் மொழிகளின் முதல் தொகுப்பை திரட்டினார். அதற்குப்பின் பக்திசிரத்தையோடும் அக்கறையோடும் பலரும் நபிகளாரின் பொன்மெழிகளை திரட்டத்தொடங்கினார்கள்.

அந்த ஆர்வத்தின் முடிவில் சில பிரச்சினைகளும் எழுந்தன. நபிகளாரின் பொன்மொழிகள் அல்லாத பலவும் திரட்டுக்களில் இடம்பெற்றன . தவறான எண்ணத்தோடு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவுத் அரசியல் மற்றும் குழுஉணர்வின் தாக்கத்தாலும் பலர் பெய்யான செய்திகளை இட்டுக்கட்டடியி நபிமொழி என்ற பெயரில் உலாவ விட்டிருந்தனர். அவையும் திரட்டுக்களில் இடம் பெறத் தொடங்கின. இப்பொய்ச் செய்திகள் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் ஆபத்தாக அமைந்தன.

இந்நிலையில் தான் இமாம் முஹம்து பின் இஸ்மாயீல் புகாரி ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆதாரப்பூர்வமான பொன்மெழிகளை திரட்டித்தர முதன்மையான உறுதி பூண்டார். மார்க்கத்திற்கும் சமுதயத்திற்கும் மிகப்பொரிய சேவையாற்றுவதற்காக பிறப்பபெடுத்தது போல் 16 ஆண்டுகால பெரும் முயற்ச்சிக்குப்பின் தனக்கு மனனமாக இருந்த சுமார் 6 இலட்சம் பொன்மொழிகளிலிருந்து 7586 பொன்மொழிகளை தேர்வு ஆதரப்பூர்வமான பொன்மொழிகள் தொகுப்பை உலகுக்கு வழங்கினார். அதற்குப்பிறகு அவருடைய வழியை அடியொட்டி பலரும் ஆதராப்பூர்வ தொகுப்புகளை திரட்டித்தந்தனர். அவற்றுள் மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள் ஆறு .


1. ஸஹீஹூல் புகாரீ

நூலின் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (புகாரீ)

முழுப் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்முஸனத் அல்முக்தஸர் மின் உமூரி ரசூலில்லாஹி வ சுனனிஹி வ அய்யாமிஹி)

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்பபுகாரீ (ரஹ்)

பிறப்பு :ஹிஜ்ரீ 194 (கி.பி. 810) `வ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு

இறப்பு :ஹிஜ்ரீ 256 (கி.பி. 870) `வ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு


இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஸஹீஹூல் புகாரீ ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதத் துவங்கினார்கள். தமது முப்பத்து நான்காம் வயதில் ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால அயராத உழைப்பிற்குப் பிறகு அதனை எழுதி முடித்தார்கள். அன்னார் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். இந்நூலில் 7563 (ஃபத்ஹூல் பாரீயின் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்ததாக அபூதாவூத் எனும் நூல்தான் இயற்றப்பட்டது.


2. சுனன் அபூதாவூத்

நூலின் பெயர் :சுனன் அபூதாவூத்
ஆசிரியர் பெயர் :அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 202
இறப்பு :ஹிஜ்ரீ 275 (கி.பி. 889) ஹவ்வால் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை



Eரானிலுள்ள ஸிஜிஸ்தான் நகரில் பிறந்த அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் (சஜிஸ்தானீ) (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். ஹதீஸ்களுக்காகவே இவ்வுலகில் பிறந்து வாழ்ந்தவர் என்று இவரைக் குறித்துப் பெருமையாகக் கூறுவர். இவர் தம்முடைய பிரசித்தி பெற்ற சுனன் அபூதாவூத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலை இயற்றி தம்முடைய ஆசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அவர்கள் தமது மாணவரை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலில் 5274 (முஹ்யித்தீன் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து ஸஹீஹ் முஸ்லிம் இயற்றப்பட்டது.


3. ஸஹீஹ் முஸ்லிம்
நூலின் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்
ஆசிரியர் பெயர் :அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அந்நைசாப+ரீ அல்குi~ரீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 204 (கி.பி. 819)
இறப்பு :ஹிஜ்ரீ 261 (கி.பி. 875) ரஜப் மாதம் 25ஆம் நாள் ஞாயிறு மாலை


இன்றைய மேற்கு ஈரான் நாட்டிலுள்ள நைசாபூர் நகரில் பிறந்த அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அல்குi~ரீ அன்நைசாபூரீ (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். பிற்காலத்தில் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்துள்ளார்கள்.ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹ_ல் புகாரிக்கு அடுத்ததாக ஸஹீஹ் முஸ்லிம் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் அமைக்கப்பட்டள்ள முறையையும் அதில் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒழுங்கையும் கவனித்து

இது ஸஹீஹ_ல் புகாரீயைவிட மேம்பட்டதாகும் என மொராக்கோ போன்ற மேற்கத்திய நாட்டினர் சிலர் கூறியுள்ளனர். இந்நூலில் 7345 (நவவீ இமாம் இலக்கம்) ஹதீஸ்கள் உள்ளன.

4. ஜாமிஉத் திர்மிதீ

நூலின் பெயர்:அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்
ஆசிரியர் பெயர்:அபூரூடவ்சா முஹம்மத் பின் ரூடவ்சா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்)
பிறப்பு ஹிஜ்ரீ 209
இறப்பு ஹிஜ்ரீ 279 (கி.பி. 892)


இன்றைய உஸ்பிகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் நகரத்தில் பிறந்த அபூஈசா முஹம்மத் பின் ஈசா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். புகாரீ (ரஹ்) அவர்களின் பிரதிநிதி (கலீஃபா) என்று இவரைக் குறித்துக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் 3891 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

5. இப்னுமாஜா

நூலின் பெயர் :சுனன் இப்னுமாஜா
ஆசிரியர் பெயர்:அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ருப்ஈ (ரஹ்)
பிறப்பு:ஹிஜ்ரீ 209
இறப்ப:ஹிஜ்ரீ 273 (கி.பி. 887)

காஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் பிறந்த அப+ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் தமது சுனன் இப்னு மாஜா நூலை ஹாஃபிழ் அப+ ஜர்ஆ அர்ராஜீ (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அன்னார் ஆராய்ந்து இந்நூலில் சுமார் முப்பது பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்கள். இதில் 4341 (அப்துல் பாகீயின் இலக்கம்) ஹதீஸ்கள்.


6. சுனன் நஸயீ
நூலின் பெயர் :சுனன் நஸயீ
ஆசிரியர் பெயர் :அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ~_ஐப் அந்நஸயீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 215
இறப்பு :ஹிஜ்ரீ 303 (கி.பி. 915)


கிழக்கு ஈரானிலுள்ள நசா எனும் நகரத்தில் பிறந்த அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ~_ஐப் அன்னஸயீ (ரஹ்) அவர்கள் முஸ்லிம் (ரஹ்) அவர்களைவிட அதிகமாக ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள். இந்நூலில் 5769 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர இன்னும் ஏராளமான ஆதாரப்பூர்வமான பொன்மொழித் தொகுப்புகள் உண்டு.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...