மீண்டும் தமிழகம் முழுவதும் பரவும் சிக்குன் குனியா
தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர்.
மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சில மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தனர்.ஆனால் மோசமான காலநிலை, மாசடைந்த நிலத்தடி நீர் , கொசு போன்றவை காரணமாக சிக்குன் குன்யா வைரஸ் வேகமாக பெருகி விட்டது .
இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் கூறுகையில், "தமிழகத்தின் பல பகுதிகளில் சிக்குன் குனியா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். இது வைரஸ் காய்ச்சல்தான். மோசமான சுற்றுச் சூழல் காரணமாகவே இந்த வகை வைரஸ்கள் வேகமாகப் பரவுகின்றன.
சிக்குன் குன்யா நோயைக் கட்டுப்படுத்த ரூ.3.6 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐந்து நவீன கொசு ஒழிப்பு இயந்திரங்கள், 45 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்க 9,000 ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
ஆனால் இந்த நடவடிக்கைகள் பரவலாக எடுக்கப்படுவதில்லை , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொசு மருந்து அடிக்கப்படுவதெல்லாம் வெறும் அறிவிப்புதான்.
நமதூரிலும் சிக்கன் குன்யா நோய் பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது.
இந்த நோயின் தாக்கம் கடுமையாக இருக்கிறது , காய்ச்சலில் ஆரம்பிக்கும் இந்த நோய் கடுமையான மூட்டு வலியில் வாட்டி எடுக்கிறது என்கிறார்கள் பாதிக்கபட்டவர்கள்.
உடல் முழுவதும் உள்ள ஆத்தனை மூட்டுக்களிலும் வலி பின்னி எடுக்கிறதாம். இதில் வேதனைக்கு உரிய செய்தி - சின்ன குழந்தைகளை கூட விட்டு வைக்க வில்லை , வலிக்குது என்று சொல்ல தெரியாத குழந்தைகள் கூட பாதிக்கபட்டுள்ளார்கள் ...
எப்படியாவது வலி குறையாத என்ற ஆவலில் அரசு மருத்துவமனை ,அலி டாக்டர் , கம்பவுண்டர் , மெடிக்கல் நோக்கி மக்கள் சென்றவண்ணம் உள்ளனர்.
“ஏடிஸ் வகை கொசுக்களால் தான் இந்த நோய் பரவுவது குறிப்பிடத்தக்கது”
இதை காய்ச்சல் வந்த உடனே கவனித்தால் இதன் பாதிப்பை குறைக்கலாம்,பலர் பழக்க தோஷத்தில் இதற்கு மெடிக்கல்லில் மருந்து கேட்கிறார்கள் ..
இதெற்கென உள்ள ஊசி போட்டுகொண்டால் தான் கொஞ்சமாவது (இன்ஷால்லாஹ் )கேட்கிறது என்கிறார்கள் .
நம்மை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும் இதை வராமல் தடுக்க சில யோசனைகள் :
>கொசு தான் இதற்கு முழு காரணம் . எனவே வீட்டில் கொசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
>கொசுக்கடியை தவிர்க்க, இரவு வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும்,கால் வெளியே தெரியாமல் போர்த்திக் கொள்ள வேண்டும்,
>காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் .
>மிக முக்கியமாக நோய் தாக்கபட்டவர்கள் வீட்டில் உள்ளவர்களை விட்டு
குறிப்பாக சிறு பிள்ளைகளை விட்டு சற்று விலகி இருப்பது நல்லது.
>கொதிக்க வய்த்த தண்ணீரை மட்டும் பருக வேண்டும்.உணவுகளை திறந்து போட கூடாது .
>நோய் தாக்கியவர்கள் கோழி கறியை தவிர்ப்பது நல்லது
>இநத நோய்க்கு கருவாடு சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்
>தூய்மை என்பது இஸ்லாத்தில் பாதி என்பது நபி மொழி ' ஆகையால் தூய்மை எங்கே இருக்கிறதோ அங்கே ஆரோக்கியம் இருக்கும் இன்ஷால்லாஹ் .
நம் ஊர் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் ஆனைவரும் பிரார்த்திப்போம் !
அல்லாஹ்தான் நோயையும் தருகிறான் , நிவாரணத்தையும் தருகிறான் ..
NAGOREFLASH
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Tuesday, January 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன