(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, January 15, 2010

தொடர் கிரகணங்களும்-இறைவனின் எச்சரிக்கையும்

இஸ்லாத்தின் பார்வையில் கிரகணங்கள் :

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.
(புஹாரி பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1059 )


(புஹாரி பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1053)
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு சூரிய கிரகணத்தின்போது ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். 'ஆம்' என்பது போல் சைகை செய்தார்கள்.

எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு 'நான் இதுவரை காணாத அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன் செர்க்கம், நரகம் உட்பட, மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் சோதனை போல் அல்லது அதுற்கு நெருக்கமான அளவுக்கு நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் ஒருவரிடம் வானவர் வந்து 'இம்மனிதரைப் பற்றி உம்முடைய முடிவு என்ன? என்று கேட்பார்.

நம்பிக்கையாளர் உறுதியுடனிருந்தவர் 'அவர்கள் முஹம்மது நபியாவார்கள். எங்களிடம் தெளிவான மார்ககத்தையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று, நம்பிப் பின் பற்றினோம்' என்று கூறுவார். அவரிடம், நல்லவராக நீர் உறங்குவீராக! நிர் நம்பிக்கையாளராக இருந்ததை நாம் நிச்சயமாக அறிவோம்' என்று கூறப்படும். நயவஞ்சகர் சந்தேகத்திலிருந்தவர் (இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் போது) 'மக்கள் எதையோ சொன்னார்கள்; நானும் சொன்னேன். எனக்கு எதுவும் தெரியாது' என்று விடையளிப்பார்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


கிரகணங்கள் சொல்வது என்ன ?


கடந்த வருடம் இரண்டும் கிரகணங்கள் நிகழ்தன,பொதுவாக வருடத்திற்கு அதிகபட்சம் 2 கிரகணங்கள்தான் நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இன்றைய கங்கண சூரியகிரகணத்தையும் சேர்த்து மொத்தம் நான்கு கிரகணங்கள் வருகின்றன என்கிறார்கள்.
உலகில் நடக்கும் கொடுமைகளும் , அக்கிரமங்களும்மே இதற்கு காரணம் என்பதை நபி மொழியில் இருந்து காண முடிகிறது .

நபி(ஸல்)அவர்கள் கிரகணத்தை பற்றி குறிப்பிடும்போது "தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான்" என்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களை அவர்களின் உலக சிந்தனையை இந்த கிரகணத்தின் மூலம் தடுத்து மறுமையையும் , அவனின் வல்லமையையும் நினைஊட்டுகிறான்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளை உலகமே வியந்து பார்க்கிறது. ஒரு மணி துளியாவது ஒவ்வொரு மனிதனும் இந்த நிகழ்வை பற்றி அவனவன் புத்திக்கு தகுந்தாற்போல் யோசிக்கிறான் .ஆனால் இதை செய்விப்பவனை பற்றி யோசிப்பதில்லை -இவர்களுக்கும்

இதை செய்விப்பவனின் ஆற்றலை தெரிந்தும் அலட்சியமாக இருக்கும்-முஸ்லிம்களுக்கும் !! என ஒட்டு மொத்த உலக ஜீவராசிகளுக்கும் - பொதுவான எச்சரிக்கையே இது போன்ற கிரகணங்கள் என்பதை மறக்க கூடாது.

சமீபத்தில் நடந்த ஹைத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் நினைவிருக்கலாம் - நாமும் இதே உலகத்தில் தான் இருக்கிறோம் என்பதை மறவாதிர்கள். அங்கே ஆடிய பூமி இங்கே ஆட எவ்வளோ நேரமாகும் ..??

மரணம் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது - நம்மிடம் மறுமைக்காக தயாரிப்பு என்ன இருக்கிறது உங்களிடம் நீங்களே கேட்டுகொல்லுங்கள்...


NAGOREFLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...