வெளிநாட்டில் வேலை செய்பவரா நீங்கள்..? கொஞ்சம் நேரம் ஒதிக்கி இத படிங்க..
இது உங்களை பற்றியது
இஸ்லாமியர்களில் பலர் பொருளாதார தேவைக்காக வெளிநாடு சென்று, அங்கேயே பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்பவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் பார்வையில் இதுபோன்ற பயணம் கூடுமா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இஸ்லாத்தில் பொருளாதாரத்தை அதிகளவில் திரட்டுவது தவறோ, பாவகாரியமோ அல்ல.ஆனால் அதை மட்டும் காரணம் காட்டி மற்ற கடமைகளை புறக்கணிப்பது, உதாசீனப்படுத்துவது மிகவும் தவறாகும்.
இஸ்லாத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை காரணம் காட்டி கூட நம் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விடமுடியாது.
அவ்வாறு ஒருவர் செய்வாரானால் அவர் இறைவனிடத்தில் இறை நேசராக கருதப்படமாட்டார். மாறாக குற்றவாளியாகவே கருதப்படுவார்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சமயங்களில் தெளிவு பட உணர்த்தியிருக்கின்றார்கள்..
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ”அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப் படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் ;ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ;இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்(சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில் உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன .
உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச்செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்றபத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம்
சுமத்தப்பட்டுவிட்டது! ;
அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்; “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன் ; ”வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 1975)
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்
சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இரு வரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை' என்று விடையளித்தார்.
(சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள்
அபுத்தர்தா விடம், உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன்...' என்றார். சல்மான் ;நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்'' என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள்.. அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக!' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப் போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.
பிறகு அபுத்தர் தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள்,“*நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன* உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன அவரவருக்குரிய கடமைகளை.,நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சல்மான் உண்மையையே கூறினார்*!'' என்றார்கள்.
(நூல்: புகாரி 1968)
இந்த செய்திகளும் இதுபோன்ற பல செய்திகளும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை காரணம் காட்டி, மனைவிக்கு செய்ய வேண்டிய தாம்பத்தியம் எனும் கடமையை புறக்கணிப்பதையோ பெற்றோரை பராமரித்தல் எனும் கடமையை நிறைவேற்றத் தவறுவதையோ மிகவும் வன்மையாக கண்டிப்பதை காணலாம். இந்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொண்டு வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேளை செய்பவர்களின் நிலையை பார்த்தோம் என்றால்..,
இன்று வெளிநாடுகளில் தங்கி வேளை பார்ப்பவர்களில் பலர் திருமணம் முடித்தவர்களாக, பிள்ளைகளை பெற்றவர்களாக, வயதான பெற்றோரை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் திருமணம் முடித்துவிட்டு புது மனைவியை விட்டு
வந்தவர்களும் இருக்கின்றார்கள்அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மிகவும் சாதாரணமாக புறக்கணிக்கின்றார்கள்.
தொழுகையை காரணம் காட்டியே மற்ற கடமைகளை புறக்கணிக்கக் கூடாது எனும்போது, பொருளா தாரத்தை காரணம் காட்டி இதர கடமைகளை புறக்கணிப்பது இறைவனிடத்திலும், இறைத் தூதரிடத்திலும் எவ்வளவு பாரதூரமான பாவகாரியம் என்பதை இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கித்தவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனையை காரணம் காட்டி தான் வெளிநாடு செல்கிறார்கள் , ஆனால் வெளிநாட்டில் சென்று எந்த வேலையாவது செஞ்சி குடும்பத்த காப்பாத்தலாம் என்று உறுதியோடு செல்லும் நம் சகோதரர்களுக்கு நமது சொந்த நாட்டில சம்பாதிக்க முடியும் என்ற உறுதி இல்லாமல் போய்விட்டது .
இதையல்லாம் வேண்டும் என்று நாங்கள் செய்யவில்லை , குடும்ப , கால சூழ்நிலைகள் எங்களை இப்படி செய்ய வைக்கிறது என்கிறார்கள் உண்மைதான் ஆனால் அதற்காக காலமெல்லாம் ஆங்கேயே இருக்கிறது நாயமா ? அதற்க்கான மாற்று ஏற்பாடு செய்ய மாடீர்களா ?
வெளிநாட்டில் வேலை செய்வது தான் பெருமை , சந்தோஷம் என்று நீங்கள் இருந்தால் நீங்கள் தான் ஏமாளி ... எத்தனை பேர் மனைவியின் பிரசவத்திற்கு ஊரில் இருகிறார்கள் ?
எத்தனை பேர் பெற்றோரின் உடல் நல குறைவிற்கு கூட இருந்து கவனித்து கொள்கிறார்கள் ?
எல்லாத்தையும் போனில் சரி செய்து விடுவார்களா ?
31:14 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
இதில் கொடுமை என்ன வென்றால் சில மனைவி மார்களே வலுகட்டாயமாக கணவன்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைகிறார்கள் என்ன கொடும..
எத்தன பேர் தன் இளமையை வீனடிகிறார்கள் தெரியுமா? எல்லாம் அற்ப சந்தோசத்திற்கு , வருடத்திற்கு ஒரு முறை ஊர் வருபவர்கள் ரொம்ப குறைவு அப்படியே வந்தாலும் ஒரு மாசம் அவ்ளோது தான் உடனே ஸ்டைலா கேளபிடுரங்க .. சிலர் இரண்டு வருத்திற்கு ஒரு முறை , இன்னும் சிலர் ஐந்து , பத்து வருடம் கழித்து வருபவர்களும் இருகிறார்கள் (ஏதோ சும்மா சொல்லணும் என்பதேக்காக இங்கே சொல்லவில்லை இது நம் ஊரில் நடக்கும் உண்மை நிலை )
எத்தனை பேர் தன் குழந்தையுடன் அமர்ந்து பேசி இருப்பீர்கள் ? குழந்தை பிறந்து நான்கு , ஐந்து ஆண்டுகள் கழித்து வரும் வாப்பாவை பார்த்து யாரும்மா இது என்கிறது பெற்ற பிள்ளை என்ன கொடும பாத்திங்களா ? வாழ்கையை எப்படி வாழ்வது என்றே நமக்கு தெரியவில்லை ...
ஒரு பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி நிறைவேற்றமுடியும்? வாரந்தோறும் போன் செய்து விசாரிப்பதின் மூலமோ, மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பதினாலோ தங்களது கடமை நிறைவேறிவிட்டது என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது.
இதையும் தாண்டி இங்கிருந்து கொண்டு நிறைவேற்ற முடியாத பல கடமைகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.
17:23 அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24 இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
நமது பிள்ளைகளையும், பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும் என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும்? மணிக் கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.? இதனால் கணவன் மனைவிகளுக்கு இடையே வீண் சந்தேகங்களும் ஏற்படுகின்றன என்பது எதார்த்தமான உண்மை
நீங்கள் இங்கயே சம்பாரிதாலும் , அங்கே போய் சம்பாரிதாலும் எல்லாம் ஒன்று தான் , நீங்கள் அங்கே செலவழிப்பதும் , பிரயாண செலவையும் கூட்டி கழிச்சு பாருங்க , சரியா வரும் ..
குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு
கிடைத்தால் அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது. ஆனால் அந்த நிலை பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டிலேயே கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்வது நம்முடைய கையில் தான் இருக்கிறது , மாற்றதிற்கு முயற்சி செய்யுங்கள் இன்ஷால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு துணைபுரிவான்.
NAGOREFLASH
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Wednesday, January 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன