(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, November 4, 2009

மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி? இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் part-2

மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டது எப்படி?
இம்ரான்கானின் ஒப்புதல் வாக்குமுலம் part-2




பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மேற்கத்திய கலாச்சாரத்தில் முற்றிலும் முழ்கியவர். தற்போது அவர் முழு நேர அரசியல்வாதியாகவும் உள்ளார். சமீபத்தில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் தனது கடந்த கால மேற்கத்திய கலாச்சார வாழ்வின் பின்னணி குறித்தும் அதி­லிருந்து தான் விடுபட்டது குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். இன்றைய பாகிஸ்தானில் நிலவும் குழப்பங்களை அறியவும் இந்த கட்டுரை உதவுகின்றது. அவரது கட்டுரையை மக்கள் உரிமையில் ஒரு குறுந்தொடராக தமிழில் தருகிறார் -ஜன்னா மைந்தன்.





முத­லில் எனது தலைமுறை சுவீகரித்துக் கொண்ட தாழ்வு மனப்பான்மை நான் ஒரு உலக தரம் வாய்ந்த விளையாட்டு வீரனாக ஆகிய போது எனது மனதை விட்டு வெளியேறியது. அடுத்து இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையில் வாழும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் காரணமாக இரண்டு சமூகங்ககளின் நன்மை மற்றும் தீமைகளை எடைபோடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மேற்கத்திய உலகில் நிறுவன அமைப்பு கள் வலுவாக இருந்தன. ஆனால் நமது நாடுகளில் அவை வலுவிழந்து வந்தன. ஆனால் ஒரு அம்சத்தில் மட்டும் நாம் அன்றும் இன்றும் வலுவாக இருக்கின்றோம். அது நமது குடும்ப வாழ்வியல் ஆகும். மேற்கத்திய உலகின் மிகப்பெரும் இழப்பு இந்த துறையில் உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். மதக்குருமார்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயன்ற அவர்கள் தங்கள் வாழ்வில் இருந்து இறைவனையும், மதத்தையும் அப்புறப்படுத்தி, விட்டார்கள்.

அறிவியல் துறையில் மிகப்பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அது பல கேள்விகளுக்கு பதில்களை அளித்தாலும் அதனால் இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. முதலாவது கேள்வி நமது படைப்பின் நோக்கம் என்ன? இரண்டாவது கேள்வி நாம் இறந்த பிறகு என்ன நடைபெறுகின்றது?

இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாதது ஏற்படுத்திய இடை வெளி தான் உலகா தாய மற் றும் சிற் றின் பத்தில் மூழ்கும் கலாச்சாரத்தை மேற்கத்திய உலகில் உருவாக்கியது என்று நான் கருதுகிறேன். இந்த உலக வாழ்க்கை மட்டுமே நிஜம் என்ற நம்பிக்கையின் காரணமாக காற்றுள்ள போதே துற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை ஏற் பட்டு இதற்காக பணத்தை நாடும் நிலை ஏற்பட்டது. இத்தகைய கலாச்சாரம் ஒரு மனிதனுக்கு மனோதத்துவப்பாதிப்பு களை ஏற்படுத்தும். இதன் காரணமாக அமெரிக்காவில் 60 சதவிகிதத்திற்கும் அதிக மானவர்கள் மனநல மருத்துவர் களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் அமெரிக்கா பொருளா தாரத்தில் மிகப்பெரும் முன்னேற்றத் தை கண்டுள்ள தனது குடிமக்களுக்கு எண் ணற்ற உரிமைகளை வழங்கிய நாடாக திகழ்கின்றது. இத்தகைய சூழல் ஏற்பட்ட போதிலும் நவீன மனோதத்துவ இய­ல் மனித ஆன்மா குறித்து எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. சுவீடனும், சுவிட்சர்லாந்தும் தங்கள் குடிமக்களுக்கு மிக அதிகமான நலத் திட்டங்களின் பலன்களை அளித்துள்ளன. இருப்பினும் இந்த இரு நாடுகளில் தான் மிக அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. மனிதனுக்கு செல்வம் மட்டும் திருப் தியை அளிக் காது. அதை விட மேலா ன ஒன் றை அவன் நாடுகிறான் என் பதை இது எடுத்துக் காட்டு கின்றது.

ஒழுக்க நலன்களுக்கு அடிப்படையாக மதம் விளங்குகின்றது. மதத்தை வாழ்வில் இருந்து நீக்கிய பிறகு 1970கள் முதற்கொண்டு ஒழுக்கக்கேடு வேகமாக வளர்ந்து வந்துள்ளது. இதன் நேரடி தாக்கம் குடும்ப வாழ்வின் மீதே ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் விவாகரத்து விகிதம் 60 சதவிகிதமாக உள்ளது. கணவர் இல்லாத தாய்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் என மதிப்படப்பட்டுள்ளது. அனைத்து மேற்கத்திய சமூகங்களிலும் குற்ற எண்ணிக்கை பெருகி வருகின்றது. இதில் திகில் அடைய செய்யும் நிகழ்வு என்னவெனில் இனவெறியும் இந்த சமூகங்களில் வேகமாக அதிகரித்து வருவது தான். மனிதர்கள் சமமானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் தகவல் களை அறிவியல் தந்த போதினும் (வெள்ளையர்களை விட கறுப்பர்கள் மரபு ரீதியாக அறிவாற்ற­ல் குறைவானவர்கள் என்று சமீபத்திய அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகின்றது) மதம் மட்டுமே மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதை போதிக்கின்றது.

1991லிக்கும், 1997லிக்கும் இடையே ஐரோப்பாவிற்குள் 5,20,000 நபர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து குடியமர்ந்து உள்ளார்கள். இச்சூழ­ல் பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி என பல மேலை நாடுகளில் இனவெறி தாக்குதல்கள் நடைபெற்றன. ஆப்கான் போர் நடைபெற்ற காலத்தில் பாகிஸ்தானில் 40 லட்சம் அகதிகள் வந் தனர். அந்த மக்கள் பரம ஏழைகளாக இருந்த போதினும் எவ்வித இன பதட்ட மும் அங்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1980 களில் தொடர்ச்சியாக நடைபெற்ற சில நிகழ்வுகள் என்னை இறைவனின் பால் அழைத்துச் சென்றது. திருக்குர்ஆன் கூறுவது போல்: சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமை யையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:165) இவற்றில் ஒன்று கிரிக்கெட் ஆகும். நான் அந்த விளையாட்டின் மாணவன் என்ற முறையில் அந்த விளையாட்டு நுட்பத்தை மென்மேலும் அறியும் போது ஒரு உண்மையை உணர்ந்தேன். நான் தற்செயலானது என கருதியவை அல்லாஹ்வின் நாட்டம் என்பதை உணர்ந்தேன். காலம் செல்ல, செல்ல இது மேலும் உறுதியானது. ஆனால் சல்மான் ருஷ்தியின் சாத்தானிக் வெர்சஸ் நூல் வெளிவந்த பிறகு தான் இஸ்லாத்தைப் பற்றிய எனது புரிதல் விரிவடைந்தது.

(அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...