(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 2, 2009

நாகூர போல வருமா?

என் நண்பர் ஒருவர் சென்னையில் தனது கல்லூரியில் அனுபவித்த சுவாரசியமான அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார் ..




ஒரு நாள் கல்லுரியின் முதல்வரை சந்திக்கும்போது , கல்லூரி முதல்வர் தற்செயலாக உங்கள் ஊரு என்ன என்று கேட்க... என் நண்பர் நாகூர் சார் என்று சொல்ல - சட்டென்று அவர் சொன்னாராம் – தம்பி பரகத்தான ஊரு தம்பி , டெய்லி எங்கயாவது ஒரு சாப்பாடு , தூக்கம் , வேலைவெட்டி செய்யவே தேவ இல்ல என்று நாகூரை பத்தி புட்டு புட்டு வைத்திருக்கிறார்... அரெண்டு பொய்விட்டாராம் என் நண்பர் , பொங்கிவந்த சிரிப்பை கட்டு படுத்தி கொண்டு எஸ்கேப் அகலாமானு நினைக்க.. முதல்வர் நண்பனிடம் – தம்பி உங்க ஊரு தர்காவுல ஒரு சில்வர் காது அல்லது காலு (சரியாக தெரியவில்லை ) உண்டியல்ல போட்டுடுங்கன்னு சொல்லி இருக்கிறார் .. என்ன டா படிச்சவரு இப்படி பேசுறாருன்னு திகைத்து பொய் நண்பர் நிற்க ..
எவ்ளோ காசுன்னு முதல்வர் கேக்க, சார் நான் வாங்கி போட்டுட்டு காசு வங்கி கிறேன்னு சொல்லிட்டு ... ஆளவிடுங்க எஸ்கேப் ஆகிவிட்டாராம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...