(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, November 5, 2009

மெக்காவில் 6.5 பில்லியன் செலவில் மோனோரயில் திட்டம்

மெக்காவையும் மற்ற புனித இடங்களான மினா, அரஃபாத், முஜ்தலிபா இவற்றையும் இணைக்கும் மக்கா மோனோரயில் திட்டம் 6.5 பில்லியன் ரியால் செலவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது இத்திட்டத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட சீன தொழிலாளர்கள் பொறியாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள் பணி புரிந்து வருகின்றனர்.




இத்திட்ட வேலைகள் 35 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த வருடம் ஹஜ்ஜுக்கு முழு பயன்பாட்டிற்கு விடப்படும் என்று தெரிகிறது 18 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ரயில்பாதை மக்காவில் தொடங்கி புனித இடங்களின் வழியாக முஜ்தலிபா சென்றடையும் இந்த ரயிலின் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 72,000 பயணிகளை மெக்காவிலிருந்து புனித இடங்களுக்கு கொண்டு செல்லமுடியும் இதனால் சவூதி மற்றும் அரபு நாடுகளில் இருந்து புனித ஹஜ்ஜுக்காக தரை மார்க்கமாக மக்கா வரும் 53,000 பஸ்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கமுடியும் என்று சவூதி உயர்மட்ட ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் வேகமும் மக்கள் நெருக்கடியான இடங்களிலும் பாதுகாப்பானதாக இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் மினாவில் உள்ள கூடாரங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. சைனாவை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் அமைத்துள்ள கான்கிரீட்டினால் ஆன தொங்குபாலங்கள் மக்களுக்கு எந்த வித இடையூறுமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. இதன் மூலம் ஹஜ் பயணிகள் மட்டுமன்றி உம்ரா செல்லும் பயணிகளும் மெக்காவில் வசிப்பவர்களும் இதனை உபயோகப்படுத்தி கொள்ளாலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடித்தந்தவர்: மதீன் முஹம்மது

1 comment:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...