(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 9, 2011

வேற்று கிரகவாசிகள்! அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்


உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.

வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அப்படி வாழ்ந்தால் அவற்றின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?அவைகளும் மனிதர்களைப் போன்றனவா?அல்லது வித்தியாச குணங்கள் கொண்டவையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குத்தான் யார் இருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள்.

முதலில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாக சொல்லப் படும் கதைகள் என்ன?கற்பனைகள் என்ன?விஞ்ஞானத் தகவல்கள் என்ன? என்பவற்றைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இதன் உண்மை நிலையை புரிந்து கொள்வது மிக எழிதானதாகி விடும்.


பூமியில் இறங்குவதாக சித்தரிக்கப்பட்ட பறக்கும் தட்டு (வரைபடம்)

 வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கதைகள்.

இது தொடர்பாக நிறையக் கதைகள் இருந்தாலும் மக்கள் பெறுமளவுக்கு நம்பக் கூடிய  கிட்டத்தட்ட 5அல்லது 6 கதைகள் உள்ளன.அதில் முதலாவது: 1254ம் ஆண்டு இங்கிலாந்தின் எல்பன்ஸ் தேவாலயத்திற்கு மேலால் புதுமையான பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும்,அது வேற்றுக்கிரக வாசிகள் வருகை தரக்கூடிய பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது.

Aliens எனப்படும் வேற்று கிரகவாசிகள் (கிராபிக்ஸ் படம்)

அதே போல் 1741ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதிக்கு மேலாக வட்ட வடிவத்தை விட சற்று சரிவான மர்மப் பொருள் ஒன்று பறந்து வின்னில் மறைந்ததாக போசெப் பிரபு என்பவர் கூறியிருந்தார்.அதுபோன்றே மின்குமிழ் வடிவத்தில் பறக்கும் பொருள் ஒன்று சுவிற்ச்சர்லாந்திற்கு மேலால் பறந்ததாக 1762ம் ஆண்டு கூறப்பட்டது.பிரான்சின் எம்பிரம் பகுதிக்கு மேலாக வட்ட வடிவில் பறக்கும் தட்டுக்கள் பல பறந்ததாக 1820ம் ஆண்டு தெரிவிக்கப் பட்டது.

Aliens எனப்படும் வேற்று கிரகவாசி (கிராபிக்ஸ் படம்)

1947ம் ஆண்டு பறக்கும் தட்டொன்ரைப் பார்த்ததாக விமான ஓட்டி ஒருவர் கூறிய தகவலும் இருக்கிறது.தாம் பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப் பட்டதாக 1971ம் ஆண்டு இரண்டு அமெரிக்கர்கள் கூறியிருந்தனர்.அதில் இருந்த உயிரினங்கள் அதிக உயரமும்,மெல்லிய உடம்பையும் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.இவ்வாரான ஏராலமான கதைகள் காணப்படுகின்றன.எல்லாம் கதைகள்தானே தவிர நிஜங்கள் அல்ல.
பறக்கும் தட்டுகள் பற்றிய விளக்கம் என்ன?

பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்துபோவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது. ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.

மில்லியன் கணக்கில் பறக்கும் தட்டுக்கள்(?)

கடந்த 40 வருட காலப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேற்றுக் கிரகங்களில் இருந்து வருவதாக நம்பப் படும் மர்மப் பொருட்களை,பறக்கும் தட்டுக்களை தாம் கண்டதாக கூறியுள்ளனர்.1974ம் ஆண்டு அமெரிக்காவில் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது.அதில் அநேகர் இத்தகைய மர்மப் பொருட்களை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.(இதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப் படவில்லை)

1952ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாரான 1500 பறக்கும் தட்டுக்கள் வரை தெரிந்ததாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.அநேகமானோர் பறக்கும் தட்டுக்களாகக் கருதியவை வித்தியாசமான உரு அமைப்பை உடைய விமானங்கள்,முகிற்கூட்டங்கள்,நட்சத்திரங்கள்,செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது.

ராடார் எனும் கருவியில் சிக்காத நவீனரக போர் விமானம் (இதைத்தான் பறக்கும் தட்டு என நினைத்து விட்டார்களோ)

அதே போன்றுதான் 1964ம் ஆண்டு சுவீடனுக்கு மேலாக பறக்கும் தட்டுக்களை அவதானித்ததாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் தெரிவித்தனர்.ஆனால் அத்தனை பேரும் அதை ஒரு ராக்கட் வடிவத்திற்குத்தான் ஒப்புக் காட்டினார்கள்.இதுவும் இது வரைக்கும் உண்மையென்று யாராலும் நிரூபிக்கப் படவில்லை.

அது போன்றே ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம் மிக்க மோய் உருவச்சிலை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடனேயே நிர்மானிக்கப் பட்டதாக சிலர் நம்புகின்றனர்.ஆனாலும் இவைகள் பொய்யான தகவல்கள் என விஞ்ஞானிகள் உருதியாக கூறிவிட்டனர்.

மனிதன் விண்ணில் வாழ முடியுமா?

இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.

இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

பூமியில் தான் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள்இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளனஎன்றும் நாம்கூறினோம்.(2:36)

(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.(7:24)

'அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)

அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)

இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்துகூறப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக்குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின்துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது.

மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.

முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.

அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.

வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம்நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.

மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது.சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ளகாற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகிதஅளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. 

இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரிசென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால்இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில்உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. 

மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.

பறக்கும் தட்டு (கிராபிக்ஸ் படம்)

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில்உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரிசென்டிகிரேட் வெப்பமே உள்ளது.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன்கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம்சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில்கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.

சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமேஉள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கிவிடும்.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடைகுளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.

நவீனரக போர் விமானம் -  இதர போர் விமானங்களுடன்
இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான்கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.

ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் (இவ்வுலக படைப்பை ஆராயவும்,இதிலிருந்து படிப்பினை பெறவும்)அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.

விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?

பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம்தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.

பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)

மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.

துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.

இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.

உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.

எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்  தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.விண்வெளியில் ஆயிரகணக்கான செயற்கைகோள்கள் உலாவந்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏற்படும் மாற்றங்களை பூமிக்கு அனுப்பிகொண்டிருகிறது. எதிலுமே இதுவரை வேற்று கிரகவாசிகளின் புகைப்படமோ , அவர்கள் பயன்படுத்தும் வாகனமோ சிக்கவில்லை(!)

இந்த வெள்ளை நிறத்தில் வந்து போவதை வேற்றுகிரக வாசி என்று எப்படி சொல்கிறீர்கள் ?

ஜசாகல்லாஹ் : தொகுப்பு : ரஸ்மின் M.I.Sc

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...