(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 9, 2011

யஹூதிகளே ஓடிவிடு, முஹம்மதுடைய படை வந்துகொண்டிருக்கிறது


குவைத்: தங்களுடைய சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல்கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினமான (Solidarity for Palestine) நவம்பர் 29-யை முன்னிட்டு டிசம்பர் 2 அன்று, 'ஜம்மியத்துல் இஸ்லாஹி அல்இஜ்திமாயி ரவ்தா' ஹாலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சர்வதேச அளவில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உணர்வுபூர்வமான கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சி சரியாக இரவு 7:15 மணிக்கு ஆரம்பமானது.

ஏமன் நாட்டு சகோதரர். ஷேய்க் சாத் திருக்குர்ஆனை ஓதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஜம்மியத்துல் இஸ்லாஹி சார்பாக டாக்டர். சுலைமான் சேட் உரை நிகழ்த்தினர். அவர் தமது உரையில் பாலஸ்தீனின் வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை மக்களிடையே நினைவூட்டினர். அதில், நபி (ஸல்) அவர்கள் "மறுமை நாள், இஸ்லாமிய எழுச்சி ஏற்படாமல் வராது" என்ற ஹதீஸையும் கூறினார். மேலும் "மஸ்ஜிதுல் அக்சாதான் நமது முதல் கிப்லா அது என்றும் நம் நினைவில் இருக்கும் அதற்காக அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு தொழுகையிலும் மஸ்ஜிதுல் அக்சாவைப் பாதுகாக்க வேண்டிய துவாவை செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.


அதைத் தொடர்ந்து பாலஸ்தீன தேசத்து இளைஞர்கள் தாங்கள் படும் துன்பங்களைப் பற்றி தங்களது எழுச்சி கீதத்தின் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தினர். அதற்கு மக்களிடமிருந்து வந்த தக்பீர் முழக்கங்களும், ஆதரவும் "நாங்களும் பாலஸ்தீன மக்களோடுதான் உள்ளோம்" என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக, இந்தியாவின் சார்பாக குவைத்தில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வரும் 'குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம்' (KIFF) பிரதிநிதி, சகோதரர் அப்துர் ரசாக் அவர்கள் தமது கருத்துகளைப் பதிவு செய்தார். அதில் அவர் தற்போது நிகழும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார். "உலகிலேயே பாலஸ்த்தீனில் உள்ள காஸா என்ற பகுதியில் தான் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமான சதவிகிதத்தில் உள்ளது; மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெறக் கூடிய நாடும் பாலஸ்தீன் தான்; குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் அதிகமாக இஸ்ரலியப் படைகளால் மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.

மேலும் பாலஸ்தீனியர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழக்கூடிய அவலமும் காணப்படுகிறது" என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக IMA-ன் சார்பாக முஸ்லீம்களின் முதல் கிப்லாவை மீட்டே தீருவோம் என்று சிறுவர்களின் சார்பாக மேடை நாடகமும் அரங்கேறியது. அதற்கு அங்குக் குழுமியிருந்த மக்கள், "யஹூதிகளே ஓடிவிடு, முஹம்மதுடைய படை வந்துகொண்டிருக்கிறது" என்று எழுச்சி மிகுந்த கோஷங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து சூடான் நாட்டின் சார்பாக சகோதரர் முஹமது மசூத் உரை நிகழ்த்தினர். அதில் பாலஸ்தீனின் பிரச்சினை முஸ்லிம்களுடைய பிரச்சினை என்று தமது எழுச்சி மிகுந்த உரையைத் தொடர்ந்தார், "அல்லாஹ்வுடைய வழியில் போராடி, யூதர்களை விரட்டி அடித்து, பாலஸ்தீன மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் வாழ வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை அதற்காக அல்லாஹ்விடம் அழகான நற்கூலி காத்துகொண்டிருக்கிறது" என்று ஆணித்தரமான கருத்துகளைப் பதிவு செய்தார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரிட்டன் நாட்டுப் பிரதிநிதி சகோதரர் ஷேக் முஹம்மது அமீன், ஏமன் நாட்டுச் சகோதரர் அப்துல்லாஹ் கொலனி, சோமாலிய நாட்டுச் சகோதரர் டாக்டர் முஹம்மது யூசுப், ஆப்கானிஸ்தான் நாட்டுச் சகோதரர் ஷேய்க் அன்வருல்லாஹ், எகிப்து நாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெளிவாகவும் ஆழமாகவும் பதிவு செய்தனர்.

அதில் இஸ்ரேலைப் பின்பற்ற கூடிய அனைவரும் அனைத்துத் துறைகளிலும் தோல்வியை தழுவுவது உறுதி என்றும் பைத்துல் முகத்தஸை மீட்டே தீருவோம் என்றும் பிரகடனப் படுத்தினர்.

தொடர்ந்து ஸ்ரீலங்கா நாட்டுச் சகோதரர் முனாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினர். "இந்த வருடம் தான் நாம் எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுக்கிறோம், இது ஒரு முன்மாதிரி என்றும் பாலஸ்தீன மக்களுக்காக இலங்கை மக்களும், இலங்கை அரசாங்கமும் உதவக் காத்துகொண்டிருக்கிறது" என்று பாலஸ்தீன மக்களுக்கு உத்வேகமூடினார். அதன் பிறகு ஸ்ரீலங்கா சார்பாக ஒரு காணொளி கண்பிக்கபட்டது.


இறுதியாக, குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம் (KIFF)-இன் சார்பாக அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது அதில் அனைவரும் ஆர்வமுடன் தங்களுடைய கையெழுத்தை இட்டனர். 

மேலும், அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் மேடையில் ஒன்றாக இணைந்து, தங்களுக்காகவும் பாலஸ்தீன மக்களுக்காகவும் தங்களுடைய முதல் கிப்லவை மீட்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். அங்கிருந்து கலைந்து சென்ற மக்கள், 'பைத்துல் முகத்தசில் பாங்கு ஒலி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, யஹூதிகளை முழுவதும் துடைத்தெறியும் நாளும் அன்று தான்' என்ற எண்ண ஓட்டத்தோடு கலைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டது பாலஸ்தீனியர்களின் போரட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

Courtesy: www.satyamargam.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...