(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, December 17, 2011

காரைக்கால் -நாகூர் ரயில் போக்குவரத்து துவங்கியது..!


காரைக்கால்-நாகூர் இடையே பயணிகள் ரயில்சேவையை  மத்திய ரயில்வே அமைச்சர் துவக்கி வைத்தார்

காரைக்கால்-நாகூர் இடையே சுமார் 11 கி.மீ தூரத்தில் ரூ.110 கோடியில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்தன. இப்பணியின் முதல் கட்டமாக, நாகூர் முதல் காரைக்கால் வாஞ்சூர் கப்பல் துறைமுகம் வரையிலான 2 கி.மீட்டர் தூரமுள்ள பணிகள் முடிவடைந்து, சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து.


வாஞ்சூர் கப்பல் துறைமுகத்திலிருந்து 9 கி.மீட்டர் தூரமுள்ள ரயில்வே பாதையிலான பணிகள் கடந்த மார்ச் 27 -ந் தேதி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மார்ச் 28 -ந் தேதி மாலை வாஞ்சூர் கப்பல் துறைமுகத்திலிருந்து, காரைக்கால் தலைமை ரயில்வே நிலையம் வரையில் ரயில் இன்ஜின் சோதனையோட்டமும், கடந்த நவம்பர் 22 -ந் தேதி, இறுதிகட்ட அதிவேக பேக்கிங் இன்ஜின் சோதனையோட்டமும், 30 -ந் தேதி கூட்ஸ் ரயில் சோதனையோட்டமும் டிசமபர் 6 -ந் தேதி மாலை நாகூர் வெட்டாறு பாலத்தில் இருந்து காரைக்கால் தலைமை ரயில்வே நிலையம் வரை, பேக்கிங் இன்ஜின் சோதனையோட்டமும், தொடர்ந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் இன்ஜின் சோதனையோட்டம், இறுதிகட்டமாக கடந்த 11 -ந் தேதி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் ஆய்வு செய்தார். தொடர்ந்து 120 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் சோதனையோட்டம் நடைபெற்றது. முடிவில், விரைவில் நாகூர்-காரைக்கால் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறும் என மிட்டல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (17 .12 .2011 ) மாலை காரைக்கால்-நாகூர் அகல ரயில் பாதையில், புதிய ரயில் சேவையை, மத்திய ரயில்வே அமைசர் முனியப்பா துவக்கிவைத்தார்..

அதன்படி இன்று மாலை காரைக்கால்-நாகூர் ரயில் போக்குவரத்து இனிதே தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்காலிருந்து நாகூருக்கு ஒரு நபருக்கு 5.00/- ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

குறிப்பு :கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்கால் மக்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு நாள் கடைசி ரயில் நிறுத்தம் என்ற ரீதியில் அனுபவித்து வந்த வசதிகள் தற்போது நாகூர் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது சற்று வருத்தமான செய்தி.  

2 comments:

  1. நாகூரிலிருந்து காரைக்கால் (அ) காரைக்காலிலிருந்து நாகூருக்கு பேருந்தில் சென்று வர குறிப்பாக பெண்கள் பெரிதும் கஷ்ட்டப்படுகிறார்கள் இதில் குடிமகன்களின் தொல்லை, பேருந்தில் எப்பொழுதும் கூட்ட நெரிச்சல், குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் பேருந்து செல்வது, பேருந்தில் பெண்கள் ஏற போதுமான அவகாசம் கொடுக்காமல் பாதியில் ஏறிக்கொண்டிருக்கும் போதே பேருந்தை நகர்த்துவது இது போன்ற பல வேதனைகளை பெண்கள் அனுபவித்து வந்ததை கண்கூடாக பார்த்தது உண்டு. ஆகையால் இந்த ரயில் போக்குவரத்து மிகப்பெரும் வசதியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அதே நேரம் மகளிர் மட்டும் பயணிக்க தனி கோச் வசதி அமைந்தால் குடிமகன், பெண்களை கேளி பொருளாக கருதும் மாணவ விடலைகளிடமிருந்து பாதுகாப்பாக அமையும், 100% மக்கள் இந்த பயனை அனுபவிக்க முடியும்.

    ReplyDelete
  2. I like your comments. It is very much accepted because you told true. It is good for our woman generation. Thank you very much to your best comment and appreciated.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...