(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, December 18, 2011

கத்தார் : அப்துல் வஹ்ஹாப் பள்ளிவாசல் திறப்பு

கத்தார் நாடு தனது பெரிய பள்ளிவாசலுக்கு,  18 ஆம் நூற்றாண்டு  முஸ்லிம் மார்க்க அறிஞரான இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பெயரைச் சூட்டியுள்ளது.(தௌஹீத் – ஓரிறைகொள்கையை பற்றி பேசுபவரை விரும்பாத மக்கள் “வஹ்ஹாபி” என்று அன்போடு அழைப்பதற்கு காரணம் இவர்தான்)இவ்வாண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பள்ளியாகும் இது. 




கத்தரின் தேசிய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாகவும் அதன் நாகரிக மதிப்பீடுகளை உணர்த்துவதாகவும் இப்பெயரைச் சூட்டும்படி கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி கேட்டுக்கொண்டதாக, கத்தர் நியூஸ் ஏஜென்சி (QNA) தெரிவித்துள்ளது.


இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் போதித்தவரான இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள். அக்காலக் கட்டங்களில் சவூதி அரேபியாவில் வாழ்ந்தவர். தமது  காலத்தில்,  மத வழிபாடுகளில் காணப்பட்ட புனைவுகளை நீக்கி "இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இடைத்தரகர் இல்லை" என்றுரைத்து, இஸ்லாம் மதத்தை அதன் பழைய வடிவில் மீட்டெடுத்தவர்.


கத்தாரின் குவைர் ஏரியாவில் அமைந்துள்ள இப்புதிய; பெரிய பள்ளியில் 10 ,000 பேர் ஒரே சமயத்தில் தொழுகை நடத்தலாம். மூன்று அடுக்குகளாக, 19 ,550 ச.மீ பரப்பில் கட்டட அளவைக் கொண்டுள்ள இப்பள்ளி  மொத்தத்தில்175,000   ச.மீ பரப்பளவைக் கொண்டது.
இஸ்லாமிய பாரம்பரிய கட்டடக் கலை அமைப்பில் அழகுற கட்டப்பட்டுள்ள இப்பள்ளியின்  மேற்பகுதியில் 24 கும்பங்கள் (Domes) அமைக்கப்பட்டுள்ளன.





Source: inneram.com 
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=476213&version=1&template_id=57&parent_id=56

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் சுருக்கமான வரலாறு:


ஓரிறைக்கொள்கை தான் ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. இந்த அடிப்படைத் தத்துவத்தை மீளக் கட்டமைத்துக் கொண்டு வருவதில் ஷெய்க் அவர்களின் பங்கு மகத்தானது. 



அவர்களால் மீளக்கட்டியமைக்கப்பட்ட இந்தக் கொள்கையானது 250 வருடங்களான பின்பும், இன்றும் அதன் பொலிவு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கொள்கையானது இணைவைப்பின் பிடியிலும், மௌட்டீகத்தின் பிடியிலும், இன்னும் நூதனக் கலாச்சாரங்களின் பிடியிலும் சிக்குண்டு சீரழிந்து கிடந்த மத்திய மற்றும் கிழக்கு அரேபியாவை மேற்கண்ட ஓரிறைக் கொள்கையின்பால் கொண்டு வந்து, இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். 

மேலும், இந்தக் கொள்கையை இந்தளவு வெற்றிகரமான இயக்கமாகக் கொண்டு வந்ததில் அன்றைய அரேபியத் தீபகற்பத்தின் இதயப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர் சௌது அவர்களின் பங்கு மகத்தானது, இந்த மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதியைத் தான் இன்றைக்கு நாம் சௌதி அரேபியா என்றழைத்துக் கொண்டிருக்கின்றோம். 



ஷெய்க் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1115 ல் இஸ்லாமிய மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தார்கள்.  இவரது தந்தை அந்தக் காலத்தில், இன்றைய சௌதி அரேபியத் தலைநகருக்கும் வட கிழக்கே அமைந்துள்ள உயைனா என்ற கிராமப் புறத்தில், மார்க்கத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகத் திகழ்ந்தார்கள். ஷெய்க் அவர்கள் இளமைப் பருவத்தில் நல்ல மனனம், மற்றும் ஞாபக சக்திமிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். 

தனது மகனைப் பற்றி ஷெய்க் அவர்களின் தந்தை கூறும் பொழுது, ‘இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான பல சட்ட விளக்கங்களை சிறுபிராயத்திலிருந்த எனது மகனிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்’, என்று பெருமையுடன் தனது மகனைப் பற்றிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். 
இதன் காரணமாக, சிறு வயதுடையவர்களாக இருந்த போதிலும் தொழுகைக்குத் தலைமை தாங்கக் கூடிய இமாமாக இவர்களை நிற்க அனுமதித்தார்கள். இந்த நிலையில், மக்காவிற்கு ஹஜ் செய்யச் செல்வதற்காக தனது தந்தையிடம் அனுமதி பெற்றுக் கொண்டு சென்ற இமாமவர்கள், பின் மதீனாவில் ஒரு மாத கால அளவு தங்கினார்கள். 



இதன் பின்பு, மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்த இமாமவர்கள், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தலானார்கள், பின்பு திருமணமும் நடந்தேறியது. இதன் பின்பு, மீண்டும் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்தவற்காக மக்காவிற்கும், மதீனாவிற்கும் பயணமானார்கள். அறிவுத் தாகத்தின் மிகுதியினால், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்தவற்காக ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தார்கள். 

இதன் பின்பு, மீண்டும் தனது ஊருக்குத் திரும்பி வந்த இமாமவர்கள் அங்கேயே ஒரு வருட காலத்தைக் கழித்து விட்டு, மீண்டும் கல்வியைத் தேடி ஈராக் நாட்டில் அமைந்துள்ள பஷரா என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். இஸ்லாத்திற்குப் புறம்பான செயல்முறைகளை இமாமவர்கள் வெளிப்படையாக விமர்சித்ததன் காரணமாக, அந்த ஊரை விட்டே மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டார்கள். 


மீண்டும் இமாமவர்கள் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்தவுடன், இவர்களது குடும்பத்தவர்கள் ஹுரைமிளா என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விட்டதை அறிந்தார்கள். பின் தனது குடும்பத்தவர்களுடன் வந்து இணைந்து கொண்ட இமாமவர்கள், தனது தந்தையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளலானார்கள். 


இருப்பினும், இமாமவர்கள் தனது சுயதேடலின் அடிப்படையில், குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவையும் மிகவும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கற்றுக் கொள்ளலானார்கள். மேலும், அவர்கள் வாழ்ந்த காலங்களில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களான ஷெய்க் இப்னு தைமிய்யா (ரஹ்) மறறும் இமாம் இப்னு கைய்யிம் ஜவ்ஸிய்யா (ரஹ்) ஆகியோர்களது மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நூற்களை ஆர்வத்துடன் படிக்கலானார்கள். 


ஹிஜ்ரி 1153 ல், இமாம் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தந்தையின் மரணத்தினை அடுத்து, தான் வாழ்ந்த பகுதியில் தன்னைச் சுற்றி நடக்கும் இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து, வெளிப்படையாகவே விமர்ச்சித்துப் பேசலானார்கள். 


மிக நீண்ட காலமாக மக்களால் மறந்து விடப்பட்ட மற்றும் அறியாமையினால் பின்பற்றாமல் விடப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ‘தௌஹீத்’ என்றழைக்கக் கூடிய ‘ஓரிறைக் கொள்கை’யின்பால் மக்களை அழைத்தும், இன்னும் இஸ்லாத்திற்கு முரணான பல தெய்வ வணக்க வழிபாடு, நூதனங்கள், மூடப்பழக்க வழக்கங்களை கை விட்டு விட்டு, முழுக்க முழுக்க இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களை கடைபிடித்தொழுகுவதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கலனார்கள். 


இவர் தான் வாழ்ந்த பகுதியான நஜ்துப் பகுதியில் இருந்தே இந்த அழைப்பை விடுக்கலானார்கள். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற பகுதியான ஹுரைமிளா மக்கள் தந்த மானசீகமான ஆதரவை அடுத்து, இஸ்லாத்திற்கு எதிராகக் கடைபிடிக்கப்பட்ட்னெடுத்துச் செல்வதில் இமாமவர்கள் மிகவும் ஊக்கம் பெற்றார்கள். 
இன்னும் பலர் நேரடியாக இமாமவர்களைச் சந்தித்து, மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு, , தங்களது இஸ்லாத்திற்கு முரணான செய்கைகளுக்கு இவரது இந்தப் பணி இடையூறாக அல்லவா இருந்து கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கலானார்கள். 


இதன் காரணமாக இமாமவர்களைக் கொலை செய்யவும் துணிந்தார்கள். இதன் பிறகு உயைனா நகருக்குப் பயணமான இமாமவர்கள், உயைனாவின் இளவரசருக்கு ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுவத�Dறு சந்தித்த ஓரிறைக் கொள்கையின் எதிரிகள்AF�கள். இமாமவர்களது விளக்கத்தின் மூலம் கவரப்பட்ட உயைனா இளவரசரவர்கள், இஸ்லாத்திற்கு எதிராகக் கடைபிடிக்கப்பட்டு வந்த மூடப்பழக்கவழக்கங்களான, மண்ணறைக்கு மேலாக கட்டிடங்களை எழுப்பி புனிதமாகக் கருதி வந்தவைகளை இடித்தார்கள், இன்னும் புனிதமானவை என மக்களால் நம்பப்பட்டு கண்ணியமளிக்கப்பட்டு வந்த மரங்களையும் வெட்டினார்கள். 


மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு, விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கல்லெறிந்து கொல்லும் தண்டனையை, இந்த இளவரசரின் உதவியுடன் இமாமவர்கள் மீண்டும் கொண்டு வந்தார்கள். இந்த மறுமலர்ச்சியானது, நூதன பழக்கங்களின் வழியே பிழைத்துக் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பையே உடைத்துப் போட்டது போலிருந்தது. 


இதன் காரணமாக, அல் அஹ்ஸா பகுதியின் ஆளுநரைச் சென்று சந்தித்த ஓரிறைக் கொள்கையின் எதிரிகள், உயைய்னா வின் ஆட்சியாளரை நிர்ப்பந்தப்படுத்தி, அதன் மூலம் இமாமவர்களை அந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று முடிவு கட்டினார்கள். 


இதன் பின் ஹிஜ்ரி 1158 ல் இமாமவர்கள் திரைய்யா என்றழைக்கப்படக் கூடிய இன்றைய ரியாத் நகரின் புறப்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இடத்திற்கு வருகை தருகின்றார்கள். 


இந்தப் பகுதி அப்பொழுது இன்றைய சௌதி அரேபியாவினை உருவாக்கிய மன்னர் முஹம்மது இப்னு சௌத் இப்னு முஹம்மது முக்ரின் அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. இந்தப் பகுதியில் நுழைந்ததும், மன்னர் சௌத் அவர்களிடம் இமாமவர்கள் சில நிபந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.


அதன்படி, அவரது பகுதிக்குத் தேவையான ஆன்மீக மற்றும் மத விவகாரங்களில் மன்னருக்கு இமாமவர்கள் வழிகாட்டுவது, அதற்குப் பிரதியீடாக மன்னரவர்கள் இமாமவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் உதவிகளை வழங்குவது என்று முடிவாகியது. 


இந்த வகையில், சௌதி அரசானது ஓரிறைக் கொள்கையினை பின்பற்றி நடத்தப்படக் கூடிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்பட்டதோடு, இன்னும் மிக நீண்ட காலமாக இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை விட்டும் வெகு தூரம் சென்று விட்ட நஜ்துப் பகுதியின் மக்களின் மத்தியில் இந்தக் கொள்கையை பிரச்சாரம் செய்யும் பணியை இமாமவர்கள் முடுக்கி விட்டார்கள். 


இமாமவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக மிகப் பெரிய பிரச்சார யுத்தம் ஒன்றை மன்னர் முஹம்மது இப்னு சௌத் அவர்களும், அவர்களது மகனான அப்துல் அஜீஸ் அவர்களும் தொடங்கினார்கள். இதன் காரணமாக, மத்திய, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் யாவும் மன்னர் முஹம்மது இப்னு சௌத் அவர்களின் வசம் வந்தது. 


உண்மையில், இமாமவர்கள் இணைவைப்புக் கொள்கைக்கு எதிராக மிகவும் அறிவார்ந்த முறையில் இஸ்லாமிய விளக்கங்களை மக்களுக்கு அளித்தார்கள். இன்னும், இணை வைப்புக் கொள்கையில் ஊறித் திளைத்து வந்த பூசாரி வர்க்கத்தினரையும் அறிவார்ந்த முறையில் தெளிவான விளக்கங்களின் அடிப்படையில் எதிர்கொண்டு, அன்பான கனிவான பிரச்சார முறைகள் மூலம் ஓரிறைக் கொள்கையை விளக்கி, அவர்களை முழுமையான இஸ்லாமிய வாழ்வியலின் பக்கம் அழைத்தார்கள்.


இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் புனிதமானவைகளாகக் கருதப்பட்டு வந்த பல்வேறு மகான்களின் வணக்கத்தளங்களுக்கு மேலாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இத்தகைய அழைப்புப் பணியின் மூலமாக இமாமவர்கள் தரை மட்டமாக்கினார்கள். 


இமாமவர்கள் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் எழுத்துக்களின் மூலமாகக் கவரப்பட்டிருந்த போதிலும், இன்னும் இவரையும் இவரைப் போன்ற ஏனைய இமாம்களையும், இவர்களில் எவருடைய கொள்கையையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் வழக்கத்தை முறியடித்து, குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா வழி இஸ்லாத்தைப் பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்கள். 


இந்த அடிப்படையினை வலியுறுத்தித் தான் இமாமவர்கள் அனைத்து எழுத்துக்களும் அமைந்திருந்தன. இமாமவர்கள் தனது 91 வது வயதில், ஹிஜ்ரி 1206 ம் ஆண்டு மரணமடைந்தார்கள். இமாமவர்கள் மரணமடைந்த போதிலும், மிக நீண்ட காலமாக மக்களால் கைவிடப்பட்டதொரு கொள்கையை மீளக் கட்டியமைத்து, அரேபியா மட்டுமல்லாது கிழக்கே இந்தியத் துணைக்கண்டத்தையும் இன்னும் மேற்கே வட ஆப்ரிக்கா வரைக்கும் இன்னும் அதனையும் தாண்டி இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை பரவித் தளைப்பதற்கு இமாமவர்கள் மிகத் தெளிவான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். அதன் மூலமாக இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் அவர் நிலைத்து நிற்கக் கூடியவராக இமாமவர்கள் திகழ்கின்றார்கள்.


இன்னும் சொல்லபோனால் இன்று தௌஹீத் ஓரிறைகொள்கை என்று யாரும் பேசினால் வஹ்ஹாபிகள்,வஹ்ஹாபிகள் என்று ஏதோ அவர்களை கொச்சைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு சிலர் சொல்வதுண்டு உண்மையில் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை இவர்களே நம்மை நினைவுகூற வைக்கிறார்கள் என்பதே உண்மை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...