(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, September 26, 2010

நமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...!! முடிவிற்கு வருமா ?

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)..


அன்பு சகோதர்களே !

சமீபகாலமாக நமதூரிலே எப்போதும் இல்லாத அளவிற்கு திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன..

முன்பெல்லாம் எப்போதாவது அங்கொன்றும் , இங்கொன்றுமாக அரிதாக நடக்கும் PART TIME JOB ஆக இருந்த திருட்டு தொழில் இப்போது FULL TIME JOB ஆக மாறி இருக்கிறது...வாரம் வாரம் திருட்டு வாரம் என்று சொல்லும் அளவிற்கு வாரம் ஒரு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

திருடர்களின் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றால் முழுமூச்சாக நின்று முயற்சி எடுத்து திருடர்களை பிடிப்பதில்லை..

இன்னும் சிலர் பணம்-காசு ஒன்னும் போகல.. சும்மா வீட்ல இருந்த சாமான தான் எடுத்துட்டு போய்கிறான் கள்ளபைய என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொள்கிறார்கள். அதிகபச்சம் பார்த்தல் திருட்டு நடந்தால் போலீஸ்ட கம்பிளைன்ட் பண்ணியாச்சு என்று சொல்லி விட்டு சும்மா இருந்து விடுகிறார்கள்.

சிலர் அதுவும் செய்வதில்லை, இன்னும் சிலர் தங்கள் வீட்டில் திருட்டு போன பொருளை கூட சொல்ல மாறுகிறார்கள் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற நோக்கத்தில்..
திருடனுக்கு தெரிந்தாலும் பரவாயில்லை அடுத்த வீட்டுக்கு தெரிய கூடாது என்று நினைகிரார்களோ என்னவோ ...

போலீசை பொருத்தவரை பெரும்பாலும் நம்ம ஏரியா திருடர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் தான். கம்பிளைன்ட் கொடுத்ததோட சேரி ரெண்டுநாள் ENQUIRY செய்துவிட்டு அடுத்த கேசுக்கு போய்டுவாங்க.. அதிகபச்சம் பாத்தா எப்பயாவது ஒருத்தன புடுச்சி பெருமைபட்டு கொள்வார்கள்.

இதுல ஊர் பாதுகாபிற்கு " குர்கா" வேறு இவர் ஒரு தெருவுக்கு உள்ளே போகும்போதே நான் வரேன் திருடா ஓடு என்று சொல்வது போல் விசிலடித்து கொண்டே போறாரு.. திருடனை பொறுத்தவரை டைமாச்சுALERT அ வேலைய முடிச்சிட்டு கெளம்பு என்பதை போன்று தான் இந்த விசுலு என்று என்ன தோன்றுகிறது.

இவ்வாறு போலீசும், குர்கா ஏதும் செய்யவில்லை என்பதனால் திருடர்களுக்கு நமதூரில் நல்ல தீனி கிடைக்கிறது எந்த பயமும் இல்லாமல்..


இப்போது நடந்து வரும் இந்த திருட்டு சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு - திருடப்பட்ட அணைத்து வீடும் பூட்டி கடந்த வீடுகள்.. ஒவ்வொரு வீட்டையும் நன்கு நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு பதட்டம் இல்லாமல் ரூம் போட்டு தங்குறமாதிரி தங்கி இருந்து திருடுகிறார்கள்.

இந்த திருட்டில் ஒருவரோ , இருவரோ இல்லை நிச்சயம் ஒரு திருட்டு கும்பலுக்கே இதில் பங்கு இருக்கிறது என்பது நடந்த நிகழ்வுகள் பிரதிபலிகின்றன.

இதுபோன்ற திருட்டை தடுக்க இன்ஷால்லாஹ் நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

"அஹ ஊட்ல தானே திருட்டு போனுசி நம்ம ஊட்ல இல்லைல" என்று சுய நலத்தோடு இருபது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.. தனக்கு விரும்பியதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை வருமாறு :


1 . வீட்டை பூட்டி விட்டு வெளியவோ , வெளி ஊருக்கோ சென்றால் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் சொல்லிவிட்டு போக வேண்டும். இங்கே போறோம்  , இத்துண நாளுல வருவோம் என்று சொல்லி விட்டு போகும் பழக்கம் வேண்டும். தேவைபட்டால் வீட்டு சாவியை கூட கொடுத்து கவனித்து கொள்ள சொல்லலாம்.

2 . அது போன்று நாம் வீட்டில் இருக்கும்போதோ இரவு படுத்திருக்கும் போதோ அக்கம் பக்கம் ஏதும் சப்தம் கேட்டால் என்ன , ஏதுனு பாக்கணும் எனகென்ன என்று இருக்க கூடாது.குறைந்தபச்சம் போனிலாவது தொடர்பு கொண்டு விசாரிக்கணும்..

3. ஊரில் இருக்க கூடிய சகோதர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தெருவுல தேவ இல்லாம சுத்திகிட்டு இருப்பானுங்க மூஞ்ச பாத்தாவே தெரியும்.. இவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும் இதை இங்கே குறிப்பிட காரணம்.. பீரோடும் தெரு , பொறையாதா கடைதெரு, வாணகார தெரு ,தெற்கு தெரு,சாமுதம்பி மரைக்காயர் தெரு போன்ற பகுதிகளில் தான் அதிக திருட்டு சம்பங்கள் நடக்கின்றன.

இந்த ஏரியாக்களில் இரவு நேரங்களில் கவனித்து பார்த்தால் சம்மந்தமில்லாத ஆசாமிகள் சிலர் நடந்தும் , வண்டியிலும் , ஷேர் ஆட்டோவிலும் வலம் வருகிறார்கள்.. இவர்கள் மேல் தான் பலத்த சந்தேகம் வருகிறது.

4 . இரவு நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் சகோதர்கள் தமது பகுதியில் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் இரவு நேரங்களில் பாதுகாப்பு சூழல் ஏற்படலாம்.

5 . திருட்டு நடந்தால் அதை செய்தவர்களை பிடிக்க எடுக்கும் முயற்சியை தளர்த்த கூடாது.காவல் துறைக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். நம்முடைய பேச்சு எடுபடவில்லை என்றால் யாராவது ஊர் பிரபலங்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மூலமாவது நெருக்கடி கொடுத்து திருடர்களை பிடிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் நாகையில் ஒரு டாக்டர் வீட்டில் திருடிய குப்பலை  காவல் துறை கைது செய்துள்ளது. டாக்டர் வீட்டில் திருட்டு போனதால் நெருக்கடியால் காவல் துறை துரிதமாக செயல்பட்டுள்ளது.

6 . பின்தங்கிய கிராமங்களில் கூட திருட்டு சம்பவங்கள் நடப்பதில்லை காரணம் பஞ்சாயத்து - கட்டுப்பாடு என கட்டுகோப்பாக இருக்கிறது.
இதுபோன்ற ஒரு பிரச்சன என்றால் எடுத்து செல்ல நாகூர்ல ஒரு பொதுவான ஜமாஅத் இல்ல.. மார்க்க விஷயத்தில தான் தனி தனியா இருக்கிறோம். பொது பிரச்சனையிலாவது ஒற்றுமையா இருக்கலாம்னு பாத்தா அதுவும் முடிய மாட்டேங்குது.இதை வளரும் தலைமுறை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு எச்சரிக்கை :


ஒரு கும்பல் வியுகம் அமைத்து , அமைதியாக ஒவ்வொரு வீடாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆட்டைய போட்டுக்கிட்டு இருக்கு... போலீஸ் புடிகிறோம், நெருங்கிட்டோம் என்று சொல்லி கொண்டு இருகிறார்கள்..

இதுவரை அந்த திருடர்களை பிடித்தபாடில்லை அவர்களும்
திருட்டை நிறுத்தியபாடும்மில்லை..

என்ன செய்ய போகிறோம் ??

NAGOREFLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...