(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, September 6, 2010

இரண்டு உயிர் போதுமா...?

ஒரு சுன்னத்தை நிறைவேற்ற இரண்டு உயிர்களை பரிகொடுத்திருக்கிறது திருவிடைசேரி...

தௌஹீத் - சுன்னத் ஜமாஅத் இவர்களுக்கு பிடித்திருந்த வெறி முத்திபோசோ என்னவோ கொலை செய்யவும் துணிந்து விட்டனர்.. (அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும் )

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர்.

இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவ்ஹித் ஜமாத்தாருக்கும் இடையே தொழுகை முறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதனால் பொது இடத்தில் தனியாக தொழுகை நடத்துவதற்கு தவ்ஹித் ஜமாத்தார் ஏற்பாடு செய்துவந்தனர்.அதன் படி அப்துர்ரஹ்மான் என்பவர் வீட்டில் தௌஹீத் ஜமாத்தினர் தொழுகை நடத்துவது வழக்கம். நேற்றைய தினம்(5/09/10) துணை செயலாளர் சலாஹுதீன் உடன் குத்துபுதீன் என்பவரும் தொழுகைக்கு வந்து இருகிறார்கள்.

குத்துபுதீன் TNTJ வை சார்ந்தவர் இல்லை என்பதால் அப்துர்ரஹ்மான் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் சுன்னத் ஜாமத்தை சேர்ந்த ஜெபாருல்லாஹ் அவரிடம் நீ ஏன் இங்கு தொழுக வர என்று கேட்க வாக்கு வாதம் முற்றியதாம்.
இறுதியில் பலர் சேர்ந்து கொண்டு குதுபுதீனை தாக்கி இருகிறார்கள்.

குத்புதீனுக்கும் ஜெபாருல்லாஹ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வந்தது.

இதற்க்கு நியாயம் கேட்க தனது அக்காவின் கணவர் ஹாஜி முஹம்மது வை நாடி இருக்கிறார் குதுபுதீன்.

குத்புதீனின் உறவினர் ஹாஜி முகமது (40). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சிமலையில் வசித்து வருகிறார்.

தன்னிடம் இதயதுல்லா மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்வது தொடர்பாக ஹாஜி முகமதுவிடம் குத்புதீன் கூறினார். இதனால் ஹாஜி முகமது மற்றும் அவரது தரப்பினர் 15 பேர் நேற்று இரவு 3 கார்களில் திருவிடைச்சேரி சென்றனர்.

பள்ளிவாசலில் இருந்த இமாம் முகமது இஸ்மாயிலிடம் ஹாஜி முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இமாமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். சற்று நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கை கலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இந்த கைகளப்பு இரவு வரை நீடித்துள்ளது. தொடர்ந்து குத்துபுதீன் ஆதரவாக வந்த திருமங்களக்குடி ஹாஜி முகம்மது, பிரச்சனை பெரிதானதும் தனது இரு கைத்துப்பாக்கியை எடுத்து எதிரில் நின்ற கிராம ஜமாத்தார் மீது 12 முறை சுட்டிருக்கிறார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கிராம ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் பலியானார்கள்.

சம்பவத்தின்போது அங்கிருந்த காஜா மைதீன் (41), பால்ராஜ் (55), ராமதாஸ் (45), சந்தியாகு (26) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் இருதரப்பினருக்கும் இடையே மேலும் மோதல் முற்றியுள்ளது. இந்த மோதலால் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் இநத பிரச்சனையில் சம்மந்த பட்ட அனைவரும் இரத்த உறவுகாரர்கள்.

ஹாஜி முஹம்மத்,குத்துபுதீன் தௌஹீத் ஜாமத்தை சார்ந்தவர் இல்லை என்று TNTJ மறுத்துள்ளது.

யாராக இருந்தாலும் இந்த செயலை செய்தவர்கள் கண்டிப்பாக குற்றம் செய்து இருகிறார்கள்.

இந்த சம்பவம் பெரும் அதிருப்தியையும் ,தலைகுனிவையும் ஏற்படுதிள்ளது.
புனித ரமலான் மாதம் என்று பாராமல் இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.
இதை யார் செய்தாலும் அது கண்டிக்க படவேண்டிய ஒன்று.

அநியாயமாக இரு உயிரை பரித்திருகிறார்கள்..

இதுபோல் சண்டை சச்சரவுகளால் என்னத்தை தான் கண்டார்களோ இவர்கள் !!
இதற்க்கு யார் பொறுபேற்பது ?? இறந்த சகோதர்களின் குடுபத்திற்கு யார் ஆறுதல் சொல்வது...

தற்போது ஹாஜி முஹமது கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

ஒவ்வொரு முஸ்லிமின் உயிரும் புனிதமானவை என்று சொன்னார்கள் நபி (ஸல் ) அவர்கள்.
அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும்.
தனக்கு விரும்பியதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக முடியாது.(நபி மொழி)
யார் சொர்க்கவாசி யார் நரகவாசி என்பதை படைத்த அல்லாஹ் தான் முடிவு செய்வான். இவ்வுலகில் எவருக்கும் அந்த அதிகாரமில்லை. நம் சமுதாயத்தில் உள்ளவர்கள் பித் அத், ஸிர்க் போன்ற பாவங்களில் ஈடுப்பட்டால் நம்மால் முடிந்தவரை அவர்கள் ஹக்கை உணரும் வரை நிதானமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர தனித் தனியாக பிரிந்துப் போவதால் பித் அத், ஸிர்க் போன்ற பாவங்களில் ஈடுபடும் மக்களை திருத்துவதற்கான வாய்ப்பு குறைந்துக் கொண்டேதான் போகும். நம் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் சமூக அவலங்களை தூக்கி எறிய இன்னும் நிறைய சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு மிக மிக முக்கிய தேவை சமூக ஒற்றுமையை தவிர வேறு எதுவும் இல்லை.

தமிழகத்தில் அனைத்து முஸ்லீம் ஊர்களிலும் தொழுகை நடத்துவதில் பிரச்சினைகள் இருந்து வருகிறது. கவுரவத்தையும், பிடிவாதத்தையும் விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்தை பேணி வாழ இப்புனித ரமழானின் கடைசி நாட்களின் அல்லாஹ்விடம் அழுது அழுது துஆ செய்வோமாக.


இயக்க பேதம் அறவே மறப்போம், நாம் எல்லோரும் முஸ்லீம்கள் என்ற சிந்தனையுடன் இனிய உறவு வளர்ப்போம்....

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

1 comment:

  1. KAIDU SEIYAPATTA 16 SAGODHARAGALIN NILAI??? AVARGALIN FUTURE?????? VALAKAM POL TNTJ'KUM SAMBAVATHIRKUM THODARBILLAI ENDRU PETTI KODUTHU VITTAR??????

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...