(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, September 10, 2010

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

நாகூர் மார்க்கெட்-காய்கறி கடை கௌது அவர்கள் இன்று காலை தெற்கு தெருவில் நடந்த விபத்து ஒன்றில் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

பெருநாள் அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தால் ஊரே அதிர்ச்சியில் உள்ளது..
இந்த சகோதருக்காகவும் , இவரின் பிரிவில் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த சகோதரரின் குடும்பத்திற்கும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே.

மேலும் மற்றுமொரு இழப்பாக சாஹா மாலிம் அவர்களின் மகள் உடல் நலம் சரி இல்லாமல் மௌத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

இந்த இருவரின் நல்லடக்கம் இன்ஷால்லாஹ் நாளை (11/9/10)நடக்கும்.
இவர்களின் குடும்பத்தாருக்கு மன அமைதியை கொடுக்க வேண்டியும் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே !

அல்லாஹ் இவர்களுடைய பாவத்தை நீக்கி மறுமையில் உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக !

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...