(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, September 16, 2010

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர் (The Origin of Creation: Clay&Water)

அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே நினைவு கூறுவீராக!) "நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில் ;(71) நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்" (72) (அல்-குரான் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய மூலக்கூறுகளை பெற்றுள்ளன. மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. நாம் மேலே கூறியது போன்று இன்னொரு இறை வசனம் கூறுகின்றது:

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். (அல்-குரான் 23:12).

அரபிக் வார்த்தையான 'சுளால' (sulala) என்பதன் பொருள் 'தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (Extract) ' என்பதாகும். அதாவது 'திரவசாறு' (Essence) என்பதனைக் குறிக்கும். இதற்கு அல்லாஹ் 'களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்' என்று தனது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இதனை நாம் சற்று சிந்திப்போமானால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமான குரானில் கூறப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை இன்றைய நவீன அறிவியல் (வளர்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட) 'மனித உடலில் மண்ணின் தாதுக்கள்' இருப்பதை உறுதிசெய்கிறது.

சுமார் 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் கீழ்க்கண்ட மூலக்கூறுகள் அமையப்பெற்றுள்ளன:


நாம் மேலே கண்ட காரணிகளை உற்று நோக்கும் போது, மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது என்பதை அறிகின்றோம். அல்லாஹ் தான் திருமறை குரானிலே கூறுகின்றான்:

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குரான் 21:45)

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்-குரான் 21:30)

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குரான் 25:54)

மனிதனும் மற்ற உயிரினங்களும் படைக்கப் பட்ட விதத்தினை விவரிக்கும் இவ்வசனங்களைக் காணும்போது ஒரு தலை சிறந்த இன்னும் பல அற்புதத்திற்கான சான்றுகள் குர்ஆனில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றில் ஒரு அற்புதம்தான் மனிதனும் மற்ற உயிரினங்களும் நீரிலிருந்தும் படைக்கப் பட்டதாக கூறும் இறை வசனங்கள். மனிதர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதுவும் மைக்ரோஸ்கோப்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னால் அதன் உதவிகொண்டு இவ்வசனங்கள் கூறும் உண்மையான தகவல்களை இன்று நாம் அறிகின்றோம்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கின்றது. பாலைவன மற்றும் வரட்சியான பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரின் பற்றாக்குறையை தாங்கும் வகையில் தங்களது உடலில் ஜீவத்துவ பரிணாம வளர்ச்சியைப் (metabolism) பெற்றிருக்கின்றன. மேலும் தண்ணீர் கிடைக்கும் போது அப்பிராணிகள் அவற்றிலிருந்து தமக்கு தேவையான பலன்களையும் பெறுகின்றன.

ஒரு சராசரி மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். சில காரணங்களினால் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அககுறைவினை சரியான தருணத்தில் ஈடு செய்யவில்லையெனில் நாம் உயிருடன் வாழ முடியாது என்பதை அறிவோம். 17-ம் நூற்றாண்டு வாழ்ந்த அறிவியலறிஞர் ஜான் பப்டிச்டா வான் ஹெல்மொன்ட் (Jan Baptista van Helmont) என்பவர் 1640-ம் ஆண்டுதான் தாவர வளர்ச்சிக்கு மண்ணிலிருக்கும் தண்ணீர் சத்து மிகவும் அவசியம் என்பதனை கண்டறிந்தார்.
http://alaipupani.blogspot.com/2010/07/blog-post_26.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...