(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, September 22, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும் - நாம் செய்ய வேண்டியதும் !!

அன்பு சகோதரர்களே....

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

இந்தியா முழுவதும் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.. டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத் , பாம்பே என முக்கிய நகரங்கள் பீதியில் இருந்தன.காரணம் பாப்ரி மஸ்ஜித் விவகாரம் இறுதி தீர்ப்பு சென்ற  வெள்ளிகிழமை வெளியாக இருந்தது.

இந்நிலையில் வெள்ளிகிழமை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பின் நிலை செப்டம்பர் 28 ல் முடிவு எடுக்கபடும் என்று    உத்தரவிட்டது  உச்சநீதிமன்றம்.
செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் இருந்தது. அதன் படி  இன்று அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.


60 வருடங்களாக நடந்து வரும் இவ்வழக்கு இப்போதாவது முடிவை எட்டும் என்று பார்த்தல் தள்ளி கொண்டே போகிறது...

நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் முடிவு எட்டுமா அல்லது மீண்டும் பதட்டத்தை கருத்தில் கொண்டு இழுத்தடிக்க படுமா என்று தெரியவில்லை..

எப்போது தீர்ப்பு வந்தாலும் , எப்படி தீர்ப்பு வந்தாலும் முஸ்லிம் சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க முடியாத உண்மையாகும் .ஆதலால் தீர்ப்புகளின் எதிர் விளைவுகளை நாம் எதிர் கொள்ள ஆயத்தமாகவேண்டும்.

தீர்ப்பை பொறுத்தவரை கீழ்காணும் மூன்று வகைகளில் ஏதாவது ஒரு வகையில் தீர்ப்பு அமையும் என்று எதிர்பாக்கபடுகின்றது

தீர்ப்பு 1 : முஸ்லிகளுக்கு சாதகமான தீர்ப்பு - (மீண்டும் மஸ்ஜித் கட்டலாம் )
தீர்ப்பு 2 : ஹிந்துத்துவ ஆர் .எஸ் .எஸ் போன்ற இயக்கங்களுக்கு சாதகமான தீர்ப்பு. (கோவில் கட்டலாம்)-பெரும்பாலான நடுநிலையான ஹிந்து சகோதர்கள்
இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாவே சாட்சியம் அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தீர்ப்பு 3 : இது அரசு சொத்து யாரும் உரிமம் கொண்டாட முடியாது
என நடுநிலையாக பிரச்சனையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் தீர்ப்பு


இந்த தீர்ப்பு நமக்கு சாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பின் ஒருக்கால் பிரச்சனை என்று வருமேயானால் வரக்ககுடிய விளைவுகளை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

நாம் செய்ய வேண்டியது என்ன :

1 . தீர்ப்பு சத்தியத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்றும் ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வலிமையை முஸ்லிம்களுக்கு தரவேண்டும் என்றும் அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டும்.தீர்ப்பு வெளியான நிமிடத்தில் இருந்து இதன் பதட்டம் குறையும் வரை நாம் மிக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

2.தீர்ப்பு அன்று வெளியூருக்கு செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். நமது பிள்ளைகள் வெளியூருக்கு போய்-வந்து படிப்பவர்களாக இருந்தால் அன்று விடுமுறை எடுத்துகொள்வது சிறந்தது. முக்கியமாக பெண்கள் அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவசர தேவை இருந்தால் உரிய ஆண் துணையோடு செல்ல வேண்டும்.

3.இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இது போன்ற சந்தர்ப்பங்கள் கலவரகாரர்களால் எதிர்பாக்கபடுகின்றன அல்லது ஏற்படுத்தப்படுகின்றன.

4.ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பிரச்சனையை தூண்டும் முகமாக செய்யல்பட்டால் அதை உடனே காவல் துறைக்கு தெரியபடுத்தி முறியடிக்க வேண்டும்.

5 . ஒரு வேலை இதையும் தாண்டி நமக்கு , நம் உடைமைக்கு ஆபத்து நேர்ந்தால்.. தற்காப்பு நடவடிக்கையில் இறங்குவதை தவிர வேறு வழி இல்லை நமக்கு... நம் உயிரை கொடுத்தாவது நம்மை, நம் உடமையை காக்க வேண்டும். ஆனால் ஒருகாலும் நாம் வரம்பு மீறக்கூடாது. இன்ஷால்லாஹ்.

(9:51: ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!)

நாம் செய்ய கூடாதது என்ன :


1 . இரவு நேரங்களில் வீதியில் கூட்டம் போட்டு பேசிகொண்டிருக்க கூடாது. ஏனெனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறை கைது நடவடிக்கையும் நடக்கும்.

2 . தீர்ப்பு எப்படி வந்தாலும் - நம் சகோதர்கள் யாரும் பிரச்சனையை தூண்டும் முகமாக நடந்து கொள்ள கூடாது. முஸ்லிம் அல்லாதவர்களும் நம் சகோதர்களே ! ஹிந்து என்று சொல்லிக்கொண்டு ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி ஹிந்துக்கள் பொறுப்பாளிகள் அல்ல..

ஒரு முஸ்லிமான நாம் எந்த நிலையிலும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். யாருக்காகவும் , எதற்காகவும் கலங்க கூடாது.

அல்லாஹ்வே நமக்கு போதுமானவன் இல்லையா ?

நாம் இஸ்லாத்தை கொண்டு செல்ல வேண்டிய மக்கள் நிறைய இருகிறார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களே இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ் நிகழ்த்தி காட்டி இருக்கிறான். ஆதலால் தீர்ப்பு எப்படி வந்தாலும் சகிப்பு தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.


(விசுவாசிகளே!) உங்களுக்கிடையிலும்,இன்னும் நீங்கள் எவர்களிருந்து விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.(60:7)

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.( 60:8)


இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது.தீர்ப்பு எப்படி வந்தாலும் , யாருக்கு சார்பாக வந்தாலும் மீண்டும் அது எந்த தரப்பிலாவது மேல் முறைஈடு செய்வார்கள் ஆதலால் இன்னொரு அரை நூற்றாண்டுகளுக்கு கூட இந்த வழக்கை இழுத்தடிப்பு செய்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்;
(ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (திருக்குர்ஆன் 3:200)

சூழ்ச்சிகாரனக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்..
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


NAGOREFLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...