(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, September 1, 2010

தௌஹீத்தின் பெயரால் பிளவுகளும், இயக்கவேறிகளும்– விமர்சனங்களும்...!!!

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பார்ந்த சகோதர்களே !

முன்பு எங்கு பார்த்தாலும் , தௌஹீத் - சுன்னத் ஜமாஅத் ஒருவரை ஒருவர் விமர்சிக்கிறார்கள் என்ற கதை மாறி.. இப்போது தௌஹீத் தலைவர்களே ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்கள்.

““ நான்கு மதஹபுகள் கூடாது என்றவர்கள் இன்று நாற்பதாய் பிரிந்து நிற்கிறார்கள் இது தான் தவ்ஹீதின் லட்சணமா ?””
இது தான் உங்கள் கொள்கை பிடிப்பா ?.....
தற்போது எங்கும் சுன்னத் ஜாமத்தினரின் hot talk இது தான்..
உண்மையிலையே இது விமர்சிக்க படவேண்டிய ஒன்று தான்.


அண்மைகாலமாக தௌஹீத் கொள்கையை முன்னிறுத்தி பேசி
வந்தவர்களுக்குள் ஏற்பட்டுவரும் பிளவுகள் இன்று பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது.

ஒரு கொள்கையின் பக்கம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த தௌஹீத் குள்ளாகவே பல பிரிவுகள் இன்று , ஊழல் , நேருக்கு நேர் விவாத அறிக்கூவல் , ஒழுக்க நடவடிக்கை, தனி நபர் துதி பாடுவது , பித்துரா மோசடி என்றெல்லாம் பல விஷயங்களுக்கு இவர் அவருக்கு CD போடுகிறார் - அவர் இவருக்கு CD போடுகிறார். அலுக்காமல் CD போட்டு இருக்கிறார்.

இப்படி பேசிக்கொண்டு, நடந்து கொண்டு தூய இஸ்லாத்தை சொல்கிறோம் வாருங்கள் என்று மறு புறம் அழைப்பு விடுகிறார்கள். இவர்களிடம் எப்படி தூய இஸ்லாம் இருக்கும் என்று சுன்னத் ஜமாத்தினர் கேள்வியை தொடுகிறார்கள்.

( இந்த கேள்வியை கேட்க சுன்னத் ஜமாத்தினர் தகுதி அற்றவர்கள் என்பது வேறு விஷயம் )

>> இந்த விஷயத்தை நடுநிலையோடு பார்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.


தமிழகத்தை பொறுத்தவரை 1980 ம் ஆண்டுல் இருந்து தான் தௌஹீத் ( ஓர் இறை) கொள்கை என்ற பெயரோடு இஸ்லாமிய பிரச்சாரம் ஆரம்பமானது . இதற்க்கு முக்கிய காரணம் 1980 ல் தான் முதல் முதலில் திருக்குர்ஆன் பல எதிர்பிற்கு இடையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டது .ஜான் டிரஸ்ட் அதை வெளியிட்டது .

இந்த மொழி பெயர்ப்பின் வருகை தான் தமிழகத்தில் இஸ்லாமிய சிந்தனை தலை தூக்கியதற்கு முக்கிய காரணம். பல காலமாக வெறும் வார்த்தைகளாலும் , வர்ணனைகளாலும் , அனுமானங்களாலும் இஸ்லாத்தை பின்பற்றி வந்த நமக்கு, குரானின் மொழி பெயர்ப்பு நாம் வாழும் காலத்தில் கிடைத்தது
ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான்.

இப்போது தான் பிரச்சனை உருவெடுக்கிறது .., நாம் இவ்வுளது நாட்களாக மார்க்கம் என்ற பெயரில் செய்து வந்த மார்க்க விஷயங்களில் பல மார்கத்திற்கு முரணானது என்பது தெரியவருகிறது..

இதை எல்லோருக்கும் எத்திவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் களத்தில் இறங்குகிறார்கள். முதலாவதாக மொவ்லவிகள் , தலைமை இமாம்களை சந்தித்து . நாம் செய்து வரும் பல விஷயங்கள் மார்கத்திற்கு முரணானது , நபி ( ஸல் ) அவர்களின் கூற்றுக்கு மாற்றமானது ஆதலால் நாம் தூய இஸ்லாத்தை மக்களிடம் எத்திவைக்க வேண்டும் என்று முன்வைக்கபடுகிறது.
உண்மையை அறிந்தால் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எடுத்து வைக்க பட்ட விஷயங்கள் மார்க்கத்தை போதிக்க வேண்டிய மொவ்லவிகள் மூலமாகவே தூக்கி ஏறியபடுகின்றன.

சொன்னவர்கள் வஞ்சிக்க படுகிறார்கள் ,அடித்து விரட்ட படுகின்றார்கள். இதுதான் இந்த தூய கொள்கையை எத்திவைக்க உந்துதல்களை கொடுத்து பல மார்க்க அறிஞர்களை களத்தில் இறக்கி விட்டது.

சத்தியத்தை நாமே மக்களிடம் கொண்டு செல்வோம் என்று உறுதியாக அழைப்பு பணிக்கு அவர்களை தயார்படுத்தி கொண்டார்கள். விளைவு 1980 ல் இருந்து ஒன்றன் பின் ஒருவராக இந்த இஸ்லாத்தின் தூய கொள்கையான தௌஹீத் பக்கம் வந்தார்கள். ஆனாலும் தினம் தினம் எதிர்ப்புகள் கடுமையாக தான் இருந்தது இந்நிலைமையிலும் மிக கடுமையாக எதிர்த்தவர்கள் கூட சிலர் சத்தியத்தை புரிந்து கொண்டு .., நபி வழி படிவாழ்வோம் என்று உறுதி பூண்டார்கள்.

பல எதிர்ப்புக்களை மீறி பலரை இந்த சத்திய இஸ்லாத்தின் கொள்கை வென்றெடுத்தது.

பெரிய இயக்கமாக உருவெடுத்தது. பத்து , இருபது நபர்கள் தொழுத பள்ளிவாசலில் கூட்டம் குவிய ஆரம்பித்தது.

மார்க்கம் சம்மந்தமான விஷயங்களையும் தாண்டி அரசியல் விழிப்புணர்வு , சமுதாய சேவைகள் , தொண்டு நிறுவனகள் என பல நிலைகளை இந்த தௌஹீத் கொள்கை ஏற்படுத்தியது (அல்ஹம்துலில்லாஹ்)

இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள் இஸ்லாத்தின் பெயரால் தமிழகத்தில் அதிகம் ஊடுருவி உள்ளது என்ற கருத்தை முதல் முதலில் மக்கள் மன்றத்தில் முன்வைத்தவர்கள் இந்த தௌஹீத் தலைவர்கள..

எல்லோருக்கும் தெரிந்த தௌஹீத் சிந்தனை பேச்சாளர்களை விட பலர் இந்த சத்திய கொள்கையை கொண்டு மக்களிடம் செல்ல நேரடியாகவும் , மறை முகமாகவும் உதவி செய்து இருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

பல இடத்தில் அடித்து துரத்தபட்டார்கள் ,ஊர் நீக்கம் செய்யபட்டார்கள் , சில இடங்களில் கொலை வெறி தங்குதல் கூட நடந்தன.

இது தான் பலருக்கு ஏன் ? எப்படி ? என்ற சிந்தனையை தூண்டியது.., இப்படி ஆரம்பத்தில் கடுமையாக விமர்சிக்கபட்ட இவர்கள் அடி உதைக்கு உட்பட்டும் கொள்கை பிடிப்பை விடாது செயல்பட்டது பலரை யோசிக்க வைத்தது.

இவர்களின் இந்த வேகம் சத்தியத்தின் பின்பலத்தில் உருவானதா ? அல்லது மற்றவர்கள் சொல்வது போல் " யூத , நசாரக்களின் " பின்பலத்தில் உருவானதா ? என்பதை யோசித்து - உண்மை என்றால் ஏற்று கொள்வாம் என்ற சிந்தனை துளியில் குரான் - ஹதிதை முடிந்த அளவிற்கு ஆய்வு செய்து சத்தியத்தை அறிந்து கொள்ள முடிந்தது -அல்ஹம்துலில்லாஹ் .

தர்கா , தாயத்து ,தகடு . தட்டு , செய்வினை, ஒடுக்கத்து புதன் , மௌவில்து , கந்தூரி , சந்தனம் பூசுவது என்று பல விஷயங்கள் இஸ்லாத்தின் பெயரால் நுழைந்து நம்மை ஆட்டி படைத்ததை கண்டு வியந்தோம் !!
இதில் இருந்து தூய இஸ்லாத்தின் பக்கம் திரும்பியது பெரும் மனநிறைவைதந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இதற்க்கு வித்திட்ட இந்த தௌஹீத் பிரசாரர்களை மிகவும் பாராட்டபடவேண்டியவர்கள் ஆனால் கொஞ்சம் ,கொஞ்சமாக இவர்களுக்கு இயக்க வெறி தலைக்கு ஏறி விட்டது அதன் விளைவு விட்டு கொடுத்தல் , சகிப்பு தன்மை , சகோதரத்துவம் சரி வர பேணப்படாமல் ஒருவரை ஒருவர் கடுமையாக ,தகாத வார்த்தைகளால் விமர்சிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் ..

திருக்குரானும் , நபி (ஸல் ) அவர்களின் வாழ்வியல் நெறிகளுமே இஸ்லாத்தின் அடித்தளம் என்ற தௌஹீத் முழக்கம் உறுதியாக வளர ஆரம்பித்ததும்..


இந்த மார்க்க போதிப்பவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தன.


இந்த பிளவுகளை பொறுத்தவரை இரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .


1. மார்க்க விஷயத்தில் கருத்து மோதல் ஏற்பட்டு பிரிவது.( பிறை , அரசியல் , ஜகாத் etc..)

2. தனி பட்ட முறையில் அல்லது இயக்க காழ்புணர்ச்சியின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பிரிவது. ( தனிப்பட்ட விரோதம் , பித்ரா மோசடி , பள்ளிவாசல் அபகரிப்பு ETC..)

(ஆய்வு வின் அடிப்படையில் ஏற்படும் பிரச்சனையை பொருத்தவரை :

மனிதனின் அறிவு , ஆராய்ச்சி முறை , அனுபவம் ,புரிந்து கொள்ளும் தன்மை அல்லாஹ்வின் நாட்டத்தின் அடிப்படையில் ஒவ்வருவரும் முடிவு எடுக்கிறார்கள்.

இதில் ஒத்த கருத்தும் ஏற்படலாம் , எதிர் கருத்தும் ஏற்படலாம் – இதில் சமரசம் செய்து கொள்வதில் தவறில்லை.

சரியான ஆய்விற்கும் , தவறான ஆய்விற்கும் கூலி உண்டு என்று நபி ( ஸல் ) அவர்களே கூறி இருகிறார்கள். அது இங்கே கவனத்தில் கொள்ளபடுவதில்லை.

தனி பள்ளிவாசல்களை ஏற்படுத்தும் அளவிற்கு இவர்களின் கருத்து வேறுபாடு சென்றுள்ளது.

தனி மனித பிரச்சனையை பொருத்தவரை :

இதை வீதிக்கு கொண்டு வர கூடாது , இயக்கம் சார்பாக உள்ள விஷயங்களை இயக்கத்திற்கு குள்ளாக வைத்து கொள்ள வேண்டும் .
தனி மனிதனின் ( முஸ்லிமின் ) மான மரியாதை காக்க பட வேண்டும்.

தனி மனிதன் அல்லது இயக்கம் செய்யும் தவறுகளை சுட்டி காட்ட media வை கையில் எடுக்க கூடாது . இது தவறை திருத்தி கொள்வோம் என்ற நிலையை அடைய விடமால் , கோபத்தையும் எதிர்ப்பையும் வரவழைக்கும்.)

இப்படியாக சைத்தானின் சூழ்ச்சியில் விழுந்து பிளவை ஏற்படுத்தினார்கள்.. இவர்கள் மற்றுமல்ல இவர்களின் ஆதரவாளர்களும் (அரசியல் கட்சி போல) தங்கள் தங்கள் தலைவர்களுடன் தனியே பிரிந்ததின் விளைவு இன்று தொடர்ந்து பல இயக்க பிரிவுகளை தமிழகம் சந்தித்து இருக்கிறது.

கொடுமை என்ன வென்றால் ஒரு சகோதரனின் தவறை நிருபிக்கிறோம் என்று சொல்லி கொண்டு பொது மேடை போட்டு அந்த சகோதரனின் மானத்தோடு விளையாடுகிறார்கள். இப்படி போகுது தமிழகத்தின் மார்க்க கூட்டங்கள்... தூய இஸ்லாத்தை சொல்லிவந்த தௌஹீத் மார்க்க மேடைகள் - இன்று இயக்கம் வளர்க்க தனி நபர் தாக்குதலுக்கு உட்பட்டு விட்டது என்பது வெட்ட வெளுச்சம்..

இயக்க வெறி கொண்டுள்ள சகோதர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆரம்பத்தில் சத்தியத்தை சொல்லும்போது இருந்த உறுதி , அடிபட்டும் , துன்பப்பட்டு தூய மார்க்கத்தை எடுத்து மக்கள் முன் சமர்ப்பித்த இவர்களா ? இப்படி பேசுகிறார்கள் என்று என்ன தோன்றுகிறது ..

இந்த தலைவர்களை பின்பற்ற கூடியவர்களும் இதற்கு வக்காலத்து வாங்கி கொண்டு , சொந்த ஊரில் பலரை பகைத்து கொண்டு திரிகிறார்கள். இது பரிதாபத்திற்கு உரியது. இவர்களை சார்ந்து வாழக்கூடிய மக்கள் மாறவேண்டும் , எந்த தலைவரையும் குருட்டு தனமாக நம்பகூடாது .

அவர் சத்திய மார்க்கத்தை சொல்கிறாரா ? அதை ஏற்று நடப்போம் , இல்லையா அதை பபுறக்கணிப்போம்.

அதை விடுத்து அவரின் தனிபட்ட கோபவார்த்தை , பேச்சுக்கு வக்காலத்து வாங்குவது தேவை அற்றது அரசியல் வாதிக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லையா ? .. அல்லாஹ் நம் அனைவர்க்கும் சகோதரத்துவ பாசத்தை அதிகரிப்பானாக ! நற்கிருபை செய்வானாக !

இப்போது விஷயத்திற்கு வருவோம் :

சுன்னத் ஜமாஅதினருக்கு இவர்கள் செய்யும் சச்சரவுகள், அவர்களின் கொள்கையை வளர்க்க பேருதவி புரிந்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை.

எங்கள எப்படி எல்லாம் பேசுநீங்க இப்ப பாரு உன் முன்னாள் சகாக்களே உன்ன பத்தி புட்டு புட்டு வைக்கிறான் என்று வயிறு குலுங்க சிரிகிறார்கள் தர்கா விசுவாசிகள்.

இவர்களிடம் போய் மார்க்கத்தை பேசினால்
““ நான்கு மதஹபுகள் கூடாது என்றவர்கள் இன்று நாற்பதாய் பிரிந்து நிற்கிறார்கள் இது தான் தவ்ஹீதின் லட்சணமா ?””
இது தான் உங்கள் கொள்கை பிடிப்பா ?.....
நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமா ? என்று ஏளனம் செயவதுண்டு.

இவர்களின் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களை பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தனி நபரை குறிவைத்து பேசுவதே இவர்களின் வேலை. அவரிடம் இத்தனை கோடி இருக்கு , அங்க பங்களா இருக்கு .. என்று என்னவோ இவர்கள் தான் வாங்கி கொடுத்தது போல் பேசுவார்கள்.

ஆனால் தர்காவைவைத்து இவர்கள் செய்யும் ஆயோக்கி தனத்தையும் , அந்த பாத்திஹா , இந்த பாத்திஹா என்று இவர்கள் கணக்கில்லாமல் வாங்கும் கூலியை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

இது இப்படி இருக்க இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால். இவ்வாறு பிளவை உண்டு பண்ணும் இந்த தௌஹீத் வாதிகள் சொன்னது எப்படி சத்தியமாக இருக்கும் ? இவர்கள் சொல்வதில் உண்மையில்லை என்பது தான்.

ஒரு கணக்கு பாட ஆசிரியர் மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்துகிறார் என்று வைத்துகொள்வோம் .., அவரிடம் பல மாணவர்கள் கணக்கு பாடத்தை படிகிறார்கள். இப்போது எதிர்பாராதவகையில் அந்த ஆசிரியர் ஒரு பெரிய தவறு ஒன்று செய்கிறார் .

உடனே " நமக்கு கணக்கு சொல்லி கொடுத்த ஆசிரியரே பெரிய செய்து விட்டார் - ஆகையால் அவர் சொல்லிகொடுத்தவந்த கணக்கும் தவறு என்று நாம் சொல்வோமா ? " அல்லது ஆசிரியர் தனிப்பட்ட முறையில் தவறு செய்து விட்டார் என்று பரிதாபடுவோமா ?

கணக்கின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கபட்டது பொதுவானது அந்த விதியை மாற்ற முடியாது .. ஆனால் அதை விதியை ( formula ) பயன்படுத்தி விடை காணும் முறையை அந்த கணக்கு ஆசிரியர் சொல்லி சொல்லிகொடுத்தார் அவளவு தான்.


ஆகையால் சொல்லும் நபரிடம் தவறு நிகழலாம் அது நமக்கு தேவை இல்லை , சொல்லும் விஷயத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது சரி என்றால் ஏற்று கொள்ள வேண்டும் இல்லை என்றால் விட்டு விட வேண்டும்.


அதை விடுத்து சொல்லும் நபரை குறை சொல்வதில் அர்த்தமில்லை. மனிதன் தவறு செய்ய கூடியவன். உலகில் தவறு செய்யாத ஒரு ஆளை காட்ட முடியுமா ?

இந்த விதியை இவர்களுக்கு பொருத்தினால் ஆனேக பாதகமான தவறுகளை இவர்கள் சுன்னத் என்ற பெயரிலே செய்து வருகிறார்கள்.

ஆகையால் தௌஹீத் பேசக்கூடிய இவர்களின் தனிப்பட்ட நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் ,தௌஹீத் - இஸ்லாத்தின் ஓர் இறை கொள்கையில் ஏற்பட போவதில்லை அது இறைவனால் பாதுகாக்கபட்டுள்ளது.

இவர்கள் எத்துனை கூறாக பிரிந்தாலும்,சத்தியமார்க்கம்-தௌஹீத் கொள்கை பிரியாது,முடங்காது இன்ஷால்லாஹ் அல்லாஹ்வை முற்றிலும் சார்ந்த மக்களாக நம்மை ஆக்கி வைப்பானாக !

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குரான் நம்மிடம் இருக்கிறது-
நபி(ஸல் ) அவர்களின் வழிமுறை நம்மிடம் இருக்கிறது இதுபோதும் இன்ஷால்லாஹ் நம்மை நேரான வழியில் அல்லாஹ் செலுத்துவானாக !

நமக்கு முஸ்லிம் என்ற அடையாளமே போதும்... வேறு பெயர்கள் வேண்டாம்.

நாங்கள் முஸ்லிம்கள்:
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக் கூறுகிறாரோ, அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்? (உலகப்பொதுமறை 
41:33 )

NAGOREFLASH.

1 comment:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...