(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, January 14, 2012

கியூபா + ஈரான் = பீதியில் அமெரிக்கா ...!!



எது நடக்க கூடாது என்று அமெரிக்கா நினைத்ததோ அது தற்போது நடந்துவிட்டது.

ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும்,

அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாதுக்கும் இடையிலான சந்திப்பே அது. அமெரிக்காவின் இரண்டு பெரிய பகைவர்களின் சந்திப்பு அமெரிக்காவை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு சிங்கங்களின் சந்திப்பும் இந்த வாரம் கரிபியன் நாட்டில் தான் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானில் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து வரும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாத் கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ரோ உடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,




இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஈரான் மற்றும் கியூபா உடனான நட்புறவு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக உள்ளன.

உண்மையில் நாங்கள் ஒரே நோக்கத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம். நாங்கள் ஏராளமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எப்போதும் அதே நட்புணர்வுடன் இருப்போம்.
கியூபாவின் தற்போதைய அதிபரான பிடல் கஸ்ரோவின் சகோதரரான ராகுல் காஸ்ரோவையும் ஈரான் அதிபர் சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களின் சந்திப்பு அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள தடைகளை ஆதரிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



குறிப்பு : கடந்த வருடம் சீனாவில் நடத்தப்பட்ட கண்காட்சிக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக, ஈரானிய கலாசார நிலையம், அதேபோன்ற மற்றொரு குர்ஆன் கண்காட்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.


உதவியவை: amanushyam.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...