(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, January 7, 2012

பாகிஸ்தான் கொடியேற்றிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் !

கலவரத்தை உண்டாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் சங்பரிவார் கூட்டத்தின் உள்ளடிவேலைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் தீடீர் என்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி விட்டு சென்றனர் சில தீவிரவாத எண்ணம் கொண்ட மர்ம ஆசாமிகள். உடனே இது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

யார் இதை செய்தது என்று போலீசார் விசாரிப்பதற்குள். முன்னரே திட்டமிட்டபடி ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின. பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

போலிசாரின் தீவிர விசாரணையில் இதை செய்தது ஹிந்துதீவிரவாதிகளான ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர்கள் பிரிவை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனே அந்த இயக்கத்தை சேர்ந்த ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.


இவர்களே பாகிஸ்தான் கோடியை ஏற்றிவிட்டு – பார்த்தீர்களா முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று முஸ்லீம்கள் மேல் பழியை போட்டுவிட்டு பிரச்சனையில் குளிர்காயலாம் என்ற அவர்களின் நினைப்பு மண்ணாகிபோய்விட்டது.
இது ஒன்றும் புதிதானது அல்ல. பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், அப்போது குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முஸ்லீம்கள் மேல் பழியை போட்டுவிட்டு மூடப்பட்ட பல குண்டுவெடிப்பு ,கலவர வழக்குகளை உரியமுறையில் மறுவிசாரணை செய்தால் நிச்சயம் பல உண்மைகள் வெளிவரும்.

செய்வார்களா ?..????

2 comments:

  1. அதெல்லாம் விடுங்கப்பா...குண்டு வைக்கிறது எப்படின்னு சொல்லி குடுங்கப்பா

    ReplyDelete
  2. தீவிரவாதிகளுக்கு குருவே நீங்க தானே பாஸ்...

    மொட்டை பையனாக இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம் ஒத்துகிறேன் ..

    மாலேகான்ல பெரிய குண்டா வைச்சு மாட்டிகிட்டு தவிக்கிராங்கலே உங்க சகாக்கள் .. எப்படி இருக்காங்க இப்போ ..?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...