(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, January 11, 2012

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் ஆப்ப்?!


இந்த பதிவின் தலைப்பை நீங்கள் சரியாக படிக்கலைன்னா, அதுக்கு நான் பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக்கொண்டு பதிவை தொடருகிறேன். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இப்பொழுது தங்களது வங்கி கணக்கை கையாளுவதற்க்கு அவர்களது ஃபேஸ்புக் கணக்கையும் பயன்படுத்தும் சேவையை ஐசிஐசிஐ வங்கி தொடங்கவுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் ஃபேஸ்புக் பக்கத்தில் புதிதாக வெளியிடவுள்ள அப்ளிகேசன் ஆன “Your Bank Account” ஐ உபயோகித்து ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை கையாளமுடியும் என IBN செய்தி குறிப்பிடுகிறது.

புது வருட செய்தியாக இவ்வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சிறந்த சேவைகளை தரும் பொருட்டு வங்கி ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளதாக இந்நிறுவன அதிகாரி திரு Rajiv Sabharwal தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய ஃபேஸ்புக் ஆப்ப் (app) மூலமாக வங்கியின் சமீபத்திய தகவல்கள் (updates), சிறப்பு சலுகைகள் (special offers) மற்றும் சேவைகள் (New services) தொடர்பான விவரங்கள் போன்றவற்றை அறிய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனா இப்போ சந்தேகம் என்னான்னா?. எவ்வளவு ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்த விரும்புவார்கள் என்பது தான்?. ஃபேஸ்புக்கில் இருக்கும் பாதுக்காப்பு தொடர்பான (security loopholes) பிரச்சனைகளை பார்த்தால், மக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை இந்த மாதிரி சமூகவலை தளங்களில் அளித்து பயன்படுத்த விரும்புவார்களா?. வங்கி தொடர்பான சமீபத்திய தகவல்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் சேவைகள் தொடர்பான விவரங்கள் போன்றவற்றை அறிய வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு விவரங்களை கொடுத்து ஐசிஐசிஐ யின் ஃபேஸ்புக் பக்கத்திற்க்கு தான் செல்லவேண்டுமா என்ன?. (அதான் கைபேசிக்கு தொடர்ந்து SMS வந்துக்கிட்டே இருக்கே?)..

என்னை பொருத்தமட்டில், வங்கி கணக்கு போன்றவற்றை பயன்படுத்த சிறப்பு நடைமுறை வேண்டும். சமூக வலைதளங்களில் வங்கி கணக்கின் விவரங்களை கொடுத்து அதை பயன்படுத்துவதென்பது, இந்த பதிவின் தலைப்பை படிக்கும் போது கடைசி சொல்லை மட்டும் அழுத்தி படிப்பதை போல் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது.

நீங்கள் உங்கள் வங்கி கணக்கை கையாள சமூக வலைதளங்களை பயன்படுத்துவீர்களா?… உங்களது கருத்துக்களை comment செய்யவும்

நன்றி : SARANAR.IN

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...