(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, March 30, 2010

அல்லாஹ்வுடன் ஓர் அழகிய வர்த்தகம்.

அஸ்ஸலாமு அழைக்கும்...

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அர்-ரஹ்மான் பைத்துல்மால் சமுதாய பணிசெய்து வருவது தாங்கள் அறிந்ததே ! தற்போது சதகத்துல் ஜாரியாவில் ஒன்றான மரம் வளர்ப்பை
" பசுமை பாதை " என்ற திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்கிறோம் , இதன் மூலம் நம் அனைவரும் இம்மை மற்றும் மறுமை பயனை அடையலாம் இன்ஷால்லாஹ் .

பசுமை பாதை திட்டத்தின் அம்சங்கள் :

1. கிராமப்புற / நகர்ப்புற மக்களை வீடுவீடாக சந்தித்து மரக்கன்றுகளை கொடுத்து வளர்க்க ஆர்வமூட்டுவது .

2. மரம் வளர்க்க உதவி செய்வது

3. மரம் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது

மரக்கன்றுகளை கொடுக்க விருப்பமுடைய நபர்களிடமிருந்து பெற்று விநியோகிப்பது .


நன்மை யாருக்காக ? எதற்காக ? :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் , ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ( மற்ற ) உயிரினமோ உண்டால் ( அதன் காரணத்தால் ) ஒரு தர்மம் செய்யததற்கான பிரதி பலன் அவருக்கு கிடைக்காமல் இல்லை . ( புஹாரி - 6012 )

1.இத்திட்டத்தினால் இறந்துவிட்ட நம் முன்நூர்களுக்காக நிலையான தர்மத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு .

2.இவ்வுலகில் நாம் செய்யும் குறைந்த கால உழைப்பு , மறுமையில் நமக்கு இலாபகரமான பலனை தரும் .

3.மரம் வளர்க்க விருப்பமுள்ளவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து உதவுவது .



மரம் வளர்ப்பால் ஏற்படும் நன்மைகள் :

1.அதிகமான மரம் வளர்த்த பகுதிகளில் மழைபெய்யும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான்.

2.அடர்ந்த மரம் வளர்ந்த பகுதிகளில் குளிர்ச்சியும் ,சுகாதாரமும் அடைகிறது . தூயமையான காற்று கிடைக்கிறது.

3.உலகம் வெப்பமடைதல் என்ற அபாய குரல் எழுந்துள்ள இவ்வேளையில் மரம் வளர்ப்பு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே அன்பார்களே ! இந்த சிறந்த வார்தகத்தில் இம்மை , மறுமை இரண்டின் இலாபத்தை பெற இப்பணியில் உங்களையும் இணைத்து கொள்ளலாமே !

மரம் வளர்க்க விரும்புவோர் / மர கன்றுகளை தர்மமாக கொடுக்க விரும்புவோர்
அர் - ரஹ்மான் பைதுல்மாலை தொடர்பு கொள்ளவும்

CALL : 9842064606

NAGOREFLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...