(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, March 22, 2010

செய்யது பள்ளிகுளம் தூர்வாரபடுகிறது ...


செய்யது பள்ளி குளத்தின் இன்றைய நிலைமை குறித்தும் , அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் நமது நாகூர் ப்ளாஷில் சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தோம் .. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலாமாக குளத்தில் இருக்கும் செடிகளை நீக்கி தூர்வாரும் பனி தொடர்ந்து நடந்து வருகிறது ...என்ன செய்ய போறாங்களாம் என்று விசாரித்ததில் குட்டி தகவல் கிடைத்தது அதாவது : நாகூரின் செல்ல பிள்ளை சச்சா முபாரக் அவர்கள் சத்தமில்லாமல் 10 லட்சத்திற்கு குத்தகைக்கு குளத்தை எடுத்துள்ளாராம் ,

முழுவதும் தூர்வாரி , மண்ணடித்து , குளிப்பதற்கு பயன்படுத்த போகிறார்களாம் ... ஆலங்கார விளக்கு எல்லாம் போட்டு ஜொலிக்க விட போகிறார் என்பது கூடுதல் செய்தி .

ஏய் சும்மா விடாதப்பா ..!!! இதெல்லாம் நடக்குற காரியமா என்கிறீர்களா ? எனக்கும் அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்து " பாப்போம் ரியால ரீலானு " ...NAGOREFLASH // புகைப்படம் அனுப்பி தந்த சகோதரர் ஏ.கே அவர்களுக்கு நன்றி .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...