(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, March 29, 2010

வீதியில் கிடந்த குழந்தையை வளர்க்க போராடிய தாயும் - பிரித்த சட்டமும்

வீதியில் கிடந்த பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தையொன்றை வளர்க்கத் துடிக்கும் தாயிடமிருந்து சட்ட விதிமுறைகளைக் கூறிப் பிரித்த சம்பவம் நாகை மாவட்டத்தில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகையிலுள்ள திட்டச்சேரி, கட்டுமாவடியைச் சேர்ந்தவர் மொய்தின் அப்துல் காதர். உணவகத்தில் பணிபுரியும் இவருக்கு ரஜபு நிஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி 13 மற்றும் 12 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த மார்ச் 23ம் தேதி இரவு 8 மணியளவில், இவர்களின் வீட்டின் அருகே இருக்கும் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு இவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளர்.

அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் தொப்புள் கொடி மற்றும் ரத்தக் கறையுடன் ஆண் குழந்தை ஒன்று துணிப்பையில் கிடந்தது. யாராலோ இரக்கமின்றி கைவிடப்பட்ட அக்குழந்தையை அவர்கள் வீட்டிற்கு தூக்கி வந்து, அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் முதலுதவி செய்துள்ளனர்.

ஆண் குழந்தை இல்லாமல் தவித்த தங்களுக்குக் கடவுள் அருளியதாக நினைத்து, குழந்தைக்கு முகமது தாரிஸ் என்று பெயரிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கவனித்து வந்தனர். அக்கம்பக்கத்தில் இச்செய்தி பரவிய கையோடு, தகவல் திட்டச்சேரி காவல்துறையினருக்கும் கிடைத்துள்ளது.

அவர்கள் இத்தம்பதியினரைச் சந்தித்துக் குழந்தையைச் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்க கூறியுள்ளனர். அவர்களோ குழந்தையைத் தாங்களே தத்தெடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கூறி குழந்தையை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

எதுவாக இருந்தாலும் மாவட்ட சமூக நல அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவெடுக்கலாம் என்று கூறி அவர்களையும் குழந்தையையும் கடந்த வெள்ளிக்கிழமை நாகை கலெக்டர் அலுவலகத்திற்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, குழந்தையை அரசிடம் ஒப்படைக்க கூறினார்.



குழந்தையை ஒப்படைக்க மனமில்லாத தம்பதிகள், அக்குழந்தையைத் தாங்களே வளர்த்துக் கொள்கிறோம்; தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கலெக்டர் அலுவலத்தில் அழுது புரண்டனர். ஆனால், அவ்வாறு அனாதையான குழந்தையை ஒருவரிடம் ஒப்படைக்க முடியாது என அரசு விதிகளை அலுவலர்கள் எடுத்துக் கூறினர். நீண்ட போராட்டத் திற்கு பிறகு அத்தம்பதியினர், சமூக நல அலுவலர் அன்பழகியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

கையில் கிடைத்த குழந்தையைச் சட்டத்தின் பெயர் கூறி, அதிகாரிகள் பிரித்தெடுப்பதற்கு எதிராக அத்தம்பதியினர் நடத்திய பாசப் போராட்டம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனினும், எதுவும் செய்ய இயலாத நிலையில் அத்தம்பதியினர் அழுது கொண்டே திரும்பிச் சென்றது கல் நெஞ்சையும் கரைய வைக்கும்படியாக இருந்தது.



சில சகோதர்களின் குமுறல்கள் :


என்ன கொடுமை இது? குழந்தை அனாதையாக வளர்வதை விட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் பண்புள்ளதாக வளருமே? மனசாட்சியில்லா அதிகாரிகளால் நாட்டுக்கே அவமானம்!


எழுதியவர்: அப்துல், March 28, 2010

சட்டம் ஒரு வழியில் செல்லும்; மக்கள் ஒரு வழியில் செல்வார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை!

சட்டம் என்பதே மக்களின் அமைதியான வாழ்வுக்காகத் தான். அந்த வாழ்வையே பறிக்கும் சட்டங்கள் நமக்குத் தேவையில்லை.

ஒரு தாயின், குழந்தையின் வலி உணரா அதிகாரிகள்! இதில் குழந்தையைப் பறித்துக் கொண்டதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.

அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் பயன்படுத்தப்படாத சட்டம், இது போன்ற தருணங்களில் மட்டும் இது போன்ற சாக்கடை அதிகாரிகளால் பயன்படுத்தப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது!

உடனடியாக அந்தக் குழந்தையை இத்தாயிடம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும்.

எழுதியவர்: jana..,

அன்பரசியும் ஒரு தாய்க்குத்தானே பிறந்திருப்பார்.. சட்ட விதிகளோடு அந்தத் தாய்க்கு குழந்தையைத் திருப்பிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம்தானே..


எழுதியவர்: moni,

சட்டப்படி தத்தெடுப்பது குற்றம் ஒன்றும் இல்லையே? பின்னர் ஏன் அக்குழந்தையை அத்தாயிடமிருந்து அதிகாரிகள் பறித்தனர்?

எழுதியவர்: Abdullah,

குழந்தையை வேறு யாரிடமும் விற்றால் நல்ல ஒரு பெரிய்யயயயய தொகை கிடைக்குமே என்பதற்காக இருக்குமோ – எதற்கெல்லாமோ வளைந்து கொடுக்கும் சட்டம் நல்லகாரியத்திற்காக தான் வளர்த்துக்கொள்ளுவதாக கதறும் தாயிடம் வளைந்து போக மறுத்துள்ளது – ஆஹா என்ன அற்புதம் - சுவிஸ் வங்கியில் கள்ள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வளைந்து கொடுக்கும் சட்டங்கள். தாயின் பாசத்தை குப்பையில் எறிந்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கும் சமூக நல பெண்ணிற்கும் அந்த குழந்தையை இத்தனை நாள் வளர்த்த தாயிடம் ஒப்படைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க மனம் இல்லை. கல் நெஞ்சக்காரர்கள். மனிதனை வாழ வைக்காத சட்டம் ???????????? தேவையா???????? மாற்றுங்கள் உங்கள் சட்டங்களை நல்ல காரியத்திற்காக. அரசியல் வியாதிகளுக்கு சட்டங்கள் மாறிக்கொண்டுதானே இருக்கிறது.

நன்றி : இந்நேரம் . காம்

NAGOREFLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...