(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, March 3, 2010

நாகூர் - நாகை சாலையில் ஷேர் ஆட்டோக்களின் அட்டகாசங்களும் - ஆபத்துகளும் !!

சீனியில் எறும்பு ஊர்வது போல் நாகூர் - நாகை சாலையில் ஷேர் ஆட்டோக்கள் சென்ற வண்ணம் உள்ளது .நாளுக்கு நாள் இந்த ஆட்டோக்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை ..

எப்படி வந்தது ஷேர் ஆட்டோக்கள் :

நாகூர் - நாகை தூரம் சராசரி 5 km இடைவெளி பஸ்சில் போனால் 10 நிமிடங்கள் ஆகும் தூரம் தான். ஆனாலும் ஷேர் ஆட்டோக்கள் இங்கே முக்கியத்துவம் பெற அடிப்படை கரணங்கள் உண்டு

பஸ்கள் முறையாக வருவது இல்லை , எப்ப பஸ் வரும் , எவ்ளோ நேரம் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது . வந்தா ரெண்டு மூணு வண்டி ஒன்னா வரும் இல்லேன்னா வண்டியே வராது.. அப்டியே வந்தாலும் கூட்டம் தாங்காது....இதுபோக அப்டியே வண்டிய புடுச்சு போனாலும் நாகை புது பஸ் ஸ்டாண்டில் எரங்கிடனும். கடை தெருவிற்கு நடந்து தான் போகணும் .. பழைய பஸ் ஸ்டாண்டுக்கு போவனும்னா இன்னொரு பஸ் ஏறி தான் போகணும் .

நம்ம உள்ளூர் மக்களை பொறுத்த வரை பெரும்பாலும் கடை தெருவுக்கு தான் போறாங்க , அதவிட்ட ஹாஸ்பிடல் போவாங்க இவை எல்லாமே நாகை கடை தெருவு லைன்ல தான் இருக்கு , ஆனா இங்க வர நேரடி பஸ் கிடையாது ...

இதை பயன்படுத்தி தான் முதலில் வேன் சவாரி ஆரம்பிக்கபட்டது . அப்போது கட்டணம் 5 ருபாய் நாகூரில் இருந்து நாகை பழைய பேருந்து நிலையம் வரை எங்கு வேணாலும் எரங்கிடலாம்..

இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது இருப்பினும் அரசு போக்குவரத்துக்கு இழப்பு , வேன் உரிமம் இல்லை என்று சொல்லி அவை தடை செய்யபட்டது.

இப்படியே கொஞ்ச நாள் போக ஷேர் ஆட்டோக்கள் களத்தில் இறங்கினர் .
இது மேலும் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றது காரணம் பஸ்க்கு காத்துகடக்க வேண்டியதில்லை , மெயின் ரோடு வந்து கையை நீட்டினால் ஷேர் ஆட்டோக்கள் போட்டி போட்டு கொண்டு வந்து நிற்கும் .

இது பெரும்பாலும் நம் ஊர் பெண்களுக்கு வசதியாக இருந்தது , நாகை சென்று வர மிக எளிதாக இருந்தது.


இப்படி எல்லோரும் ஷேர் ஆட்டோக்களில் செல்ல ஆரம்பித்த உடன் , ஷேர் ஆட்டோ பற்றாக்குறை என்ற நிலை வந்ததுடன் , பலர் இதில் குதித்தனர் குறிப்பாக மீனவர்கள் சுனாமிக்கு பிறகு மீன் பிடி தொழில் செய்ய முடியாதவர்கள் பேங்க் லோன் பெற்று சுலபமாக ஷேர் ஆட்டோ வாங்க முடிந்தது. விளைவு ஆட்டோக்கள் எக்கச்சக்கம் !!


ஷேர் ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசம் :

"அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பது போல் , நாகூர் -நாகை சாலையில் எங்கு பார்த்தாலும் ஆட்டோக்கள். பைக்கில் , காரில் செல்வோருக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது ..

இந்த ஷேர் ஆட்டோகளால் இதுவரை பல விபத்துகள் , உயிர் இழப்புகள் நிகழ்துள்ளன. ரோடில் போய் கொண்டு இருக்கும் பொது திடீர்னு கட் பண்ணி நிறுத்துகிறார்கள் , பின்னே வரும் வண்டியை பற்றி கவலைபடுவதில்லை... இதனால் வீண் விபத்துகள் , பிரச்சனைகள் நாள் தோரும் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது.


நாகூர் - நாகை சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணம் இவர்கள் தான். இப்போது நாகை போவது மிக கடினமாக இருக்கிறது கொஞ்சம் அசந்தா காலிதான்..நிச்சியமாக ஷேர் ஆட்டோ பயணம் ஆபத்தானது !!

இப்போது நாகை போக 10 ருபாய் வாங்கிறார்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது, இதனால் பயங்கர போட்டி , உள்ளே மக்களை ஏற்றி கொண்டு இவர்கள் RACE நடத்துகிறார்கள்..


இவர்களுக்கு சங்கமே இருக்கிறது மேலும் நாகை R.T.O விற்கு மாதம் மாதம் செட்டில்மென்ட் கரெக்டாக செய்வதால் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்.. அப்படியே எதாவது விபத்து என்றால் ரெண்டு நாளைக்கு சும்மா புடிக்கிற மாதிரி பாவலா காமித்து விட்டு சென்று விடுகிறார்கள் போலி போலீஸ்கள்.

கவனிக்க படாத ஆபத்துகள் !

முன்பெல்லாம் ஷேர் ஆட்டோகள் மெயின் ரோடு வரை தான் வரும் ஊருக்கு உள்ளே வருவதில்லை ஆனால் இப்போது ஊரில் உள்ள அத்தனை மூல முடுகிற்கும் வருகிறது .., நம் ஊர் பெண்கள் வசதியாக இறங்க வேண்டும் என்று விரும்பி வீட்டு வாசலில் வந்து இறங்குகிறார்கள் சரி ஆனால் இது இத்துடன் போகும் விஷயமில்லை...

ஷேர் ஆட்டோ ஓட்டும் பெரும்பாலானவர்கள் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் மற்றும் மது அருந்த கூடியவர்கள் இவர்களிடம் நியாயத்தை , நன்னடத்தையை எதிர்பாக்க முடியாது..

நம் ஊர் பெண்கள் அவர்கள் வீட்டில் வந்து இறங்கும் போது "இவர்கள் எங்கு சென்றுவிட்டு வருகிறார்கள்" "எத்தனை பேர்இருகிறார்கள் ஆண்கள் இருகிறார்களா" "வரும்போது போனில் என்ன பேசினார்கள்" என்றெல்லாம் கவனிக்கபடுகிறார்கள் இது நம் பெண்களுக்கு தெரிவதில்லை… வீடு திருடு போவதுக்கு கூட இது வழி வகுக்கிறது.. இன்றும் கூட நள்ளிரவில் ஊருக்கு உள்ளே ஷேர் ஆட்டோக்கள் வலம் வந்தவண்ணம் இருக்கிறது.

இதை விட ஹை லைட் என்ன வென்றால் " தம்பி போன் அடுச்சா வந்து ஏத்திகிட்டு போவிங்களா என்று கேட்டு போன் நம்பரை வாங்குவோரும் சிலர் இருகின்றனர்"
அதை போல் நாகை செல்ல வேண்டும் என்று போன் செய்ய இவர்களின் நம்பர்கள் ஆட்டோ டிரைவரிடம் கைமாறுகிறது , மற்றதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் .

.
என்ன தான் செய்வது இதற்க்கு ???

1 . மிக மிக அத்தியாவசிய விஷயங்களுக்கு தவிர ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்த கூடாது

2 . பெண்கள் ஷேர் ஆட்டோவில் வந்தாலும் மெயின் ரோட்டில் இறங்கி விட வேண்டும் , வீடு வரைக்கும் வரக்கூடாது. உங்களின் வசதியை விட பாதுகாப்பு முக்கியம் .

3 . நாகூர் - நாகை செல்ல ஒருவருக்கு 10 ருபாய் , போயிட்டு வர 20 ருபாய் ஆகிறது ஒருவருக்கு.மூன்று பேர் சேர்ந்து ஷேர் ஆட்டோவில் போயிட்டுவர 60 ருபாய் ஆகும் - அதே மூன்று பேர் சேர்ந்து நமதூர் கேப்ஸ் ஆட்டோக்களில் நாகை போயிட்டு வர 90 ருபாய் வாங்குகிறார்கள்( ஒரு மணி நேர வைடிங் உள்பட )

30 ருபாய் தான் வித்தியாசம் இருப்பினும் ஒரு மணி நேர வைடிங் , வாங்கும் பொருளையும் சிரமமில்லாமல் கொண்டுவரலாம்,வீட்டு வாசலில் வந்தும் இறங்கி கொள்ளலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஆதலால் ஊரில் உள்ள கேப்ஸ் ஆட்டோக்களை பயன்படுத்துவது நல்லது

4. பைக்கில் , காரில் செல்வோர் ஷேர் ஆட்டோவை பின்தொடர்வது ஆபத்தில் தான் முடியும் , ஒன்று முந்தி சென்று விட வேண்டும் இல்லை என்றால் மெதுவாக செல்வது நல்லது .

5.மிக முக்கியமாக இரவில் அது 8 மணி ஆனாலும் சரி பெண்கள் ஷேர் ஆட்டோக்களில் ஆண் துணை இல்லாமல் பயணிக்க கூடாது , வீட்டில் ஆண்கள் இல்லாத பெண்கள் ஷேர் ஆட்டோக்களில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் .


( வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆண்கள் இதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி
எடுத்து சொல்ல வேண்டும்)

NAGORE FLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...