மாற்றி ஒருவர் சமைத்தாலும்
வரவில்லை உன் கை ருசி!!
அறையினில் களைப்புடன் வருவதால்
எரிச்சலுடன் சமையல் ;
காணாமல் போகும் பாசம்!!
கொதிகலனில் இருக்கும் என் இதயமோ
கொதித்துக் கொண்டிருக்க
உன்னை நினைத்துக் கொண்டிருக்க!!
மணமாகி மூன்று வருடத்தில்
இரண்டு மாதம் மட்டுமே நாம் இருவராக!!

எத்தனையோ முறை
உறக்கத்தில் உளறல்
உன் பெயரினை!!
தெரிந்தாலும் நகைப்பதில்லை என் நண்பர்கள்...
ஒவ்வொருவரின் மனதிலும்; ;
நாமும் உரைத்திருப்போமோ மறந்து!!
புதியதாய் கற்றுள்ளேன்
போர்வைக்குள் புகுந்து அழ!!
கசங்கிய இதயமும்
கசக்கிய கண்ணீருடன்
தண்ணீருக்காக எழுந்தேன்;
அத்துனை நண்பர்களின் முகமும் போர்வைக்குள்; <

குலுங்கிய போர்வைக் கண்டு
எண்ணிக்கொள்வேன் நான்,
அவர்கள் இத்யம் மட்டும் என்ன
இரும்பினாலா உள்ளது!!!
THANKS RIYAZ: FACEBOOK
NAGOREFLASH
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன