(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, April 14, 2013

களத்தில் இறங்குவோம் வாருங்கள்.. வழிவகைகளை சொல்லுங்கள்... போராடுவோம்..



காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதால் வரும் வாழ்வாதாரத்தை பாதிக்ககூடிய சுகாதார கேடுகளை எண்ணத்தில் கொண்டு கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்கள், எதிர்ப்புகள், தெருமுனை கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு...
ஜி.அர்.கே.ரெட்டியின் காந்திதாத்தா நோட்டிற்கு அடிமையாகி போன புண்ணியவான்களை இந்நேரத்தில் வாழ்த்த வார்தையில்லை...

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் ""மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று ஏற்றப்படும். அவனது மோசடி அளவுக்கு அது உயரமாக ஏற்றப்படும். அறிவீர். பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று அதில் மோசடி செய்தவனைவிட மிகப் பெரும் மோசடிக்காரன் வேறெவனுமில்லை'' (புகாரி 31 86, முஸ்லிம் 35 79).


நாகூர் மக்களே..

விபரம் தெரிந்து தான் நாம் அமைதியாக இருக்கிறோமா? இல்லை .. ஒன்னும் விளங்காமல் இருக்கிறோமா என்று தெரியவில்லை...

நம் ஊரை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதற்கான அஸ்திவாரம் தான் இந்த நிலக்கரி இறக்குமதி துறைமுகம் என்பது உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? விளங்கவில்லையா.....

நமக்கு, நம் பிள்ளைகளுக்கு , நம் பேரப் பிள்ளைகளுக்கு, நம் ஊர் மக்களுக்கு இதை விட ஒரு மாபாதக செயலை யாரும் செய்ய முடியாது... நாமே நம் தலையில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம் மக்களே....

எப்படி பட்ட சிக்கலில் நாம் மாட்டிகொண்டிருக்கிறோம் தெரியுமா..? புரியும்படி சொல்கிறோம் கேளுங்கள்..

வழக்கத்திற்கு மாறாக உங்களுக்கோ ,உங்கள் பிள்ளைகளுக்கோ சளி தொந்தரவு அடிக்கடி வருகிறதா ? அப்படியானால் நீங்கள் நிலக்கரி துகள்களின் நச்சு தன்மைக்கு ஆளாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். இது தொடக்கம் தான் .. வர வர ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு ஏற்ப 

நாள்பட்ட சளி தொந்தரவு,

தொண்டை வலி , எரிச்சல்,

சுவாசக்கோளாறு # ஆஸ்த்மா ,

நுரையீரலில், கிட்னியில் கல் உருவாவது,

பலதரப்பட்ட தொல் வியாதிகள் # அலர்ஜி,

புற்றுநோய்

என்று வரிசையாக நோய் தொற்றிகொள்வதற்கான வாசலை நாம் திறந்துவிட்டு விட்டோம். (மேற்கண்ட விஷயங்கள் மிகைபடுத்தி சொல்லவில்லை .. அத்தனையும் எதார்த்தமான உண்மை.)

நம் சமூகத்தை நாமே அழித்து கொள்ள ஆயத்தம் ஆகிவிட்டோம். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஏற்கனவே நோய் நொடிகளுக்கு பஞ்சமில்லை லட்சம் ,லட்சமாக மருத்தவமனைகளில் செலவு செய்து கொண்டிருப்பது போதாதா ? இதுல தெரிந்தே நோய்களை முன்வந்து பெற்றுகொள்ள ரெடி ஆகிவிட்டோமே என்ன கொடுமை...

ரயில் தண்டவாளங்களில் கொட்டிக்கிடக்கும் மனிதகழிவிற்கு மூக்கை பொத்தும் நாம் .. அதே தண்டவாளங்களில் தற்போது கொட்டிகிடக்கும் நிலக்கரி துகள்களை கண்டுகொள்வதில்லை..ஆபத்தை உணர்வதில்லை..

தண்டவாளங்களின் அருகில் இருக்கும் மண் கூட கருப்பாக மாறிவிட்டது, ரயில்மூலம் எடுத்து செல்லும் நிலக்கரி பத்தாது என்று லாரிகளிலும் எடுத்து சென்றதன் விளைவு காரைக்கால்,திட்டச்சேரி,நாகூர் சாலைகளிலும் நிலக்கரி துகள்கள் படர்ந்துள்ளது...

எவனுக்கோ பிரச்சனை என்று நாம் உண்டு , நம் வேலை உண்டு என்று போய்வந்து இருக்கிறோம்.. ஆனால் பலவிதமான சுற்றுசூழல் பிரச்சனையில் நம் ஊர் மக்கள் அனைவரும் மாட்டிகொண்டு விட்டோம் என்பதே உண்மை.. விளைவு போகப்போக கடுமையாக இருக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லையா ?

நிலக்கரி இறக்குமதியால் சுமார் 6 கி.மீ. சுற்றுவட்டார சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசுபட்டு வருகிறது. ஊர் மக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்றதாக துறைமுகத்தின் செயல்பாடுகள் உள்ளன.

இதை மனதில் கொண்டு தான் ஆரம்பத்தில் இந்த நிலக்கரி இறக்குமதி எதிர்க்கபட்டது .. ஆனால் அதன் வீரியம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது துறைமுகத்திற்கு ஆதரவு கொடுக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் நம்மவர்கள்.

அறிந்து கொள்வீர்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்'' (புகாரி, முஸ்லிம்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஊர் மக்களை விலைபேசி விற்றுவிட்டு என்னங்க நீங்க அவன் பல கோடியை போட்டு ஆரம்பிச்சு இருக்கான் நாம நிறுத்த சொன்னா உடனே நிறுத்திடுவானாஎன்று வியாக்கியானம் பேசும் நல் உள்ளங்கள் கேட்டுகொள்ளுங்கள்...

தடை செய்ய முடியும் இன்ஷாஅல்லாஹ்

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ஏன் தடை செய்ய முடியாது... இதே சுற்றுசூழல் பிரச்சனைக்காக சென்னை உயர்நீதிமன்றமே சென்னை துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்துள்ளது.. அதன் விபரம் வருமாறு:
 
சென்னை துறைமுகத்தில் நிலக்கரி, இரும்பு தாதுக்களை கையாள்வதால் பாரிமுனை பகுதி மாசு அடைவதாகவும், இதற்கு தடை விதிக்க கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நிலக்கரித்தூள்கள் ஐகோர்ட்டு உள்ளிட்ட கட்டிடங்களில் படிந்து மாசு அடைவதாகவும் இதனால் இப்பகுதி பொது மக்கள் சுவாச நோயால் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். சென்னை துறைமுகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் நிலக்கரி கையாளும் போது எற்படும் தூசு மாசுவை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதித்தால் மாநிலத்தில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்களின் நலன் கருதி சென்னை துறைமுகத்தில் நிலக்கரி, இரும்பு தாதுக்களை கையாளுவதற்கு தடை விதித்து அதை எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவை நாம் வாங்க முடியுமா ? -  முடியாதா ?

முடியும் என்றால் நாம் அதற்க்காக என்ன செய்ய வேண்டும்...

சட்டரீதியாக எதிர்கொள்ள என்ன என்ன வழிமுறைகளை கையாள வேண்டும்...அதற்க்கான பொருளாதாரம் எவ்வளவு ?..விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் , எங்களை வழிநடத்துங்கள்...வளரும் தலைமுறை ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகை செய்வோம்...

இல்லை அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது என்றால் ஏன் முடியாது... விபரத்தோடு விளக்கமளியுங்கள் ..

அதையும் பார்த்துவிடுவோம்...


( காரைக்கால் துறைமுகத்தில் பல வர்த்தகம் நடக்கிறது , நாம் துறைமுகத்தை மூட சொல்லவில்லை .நிலக்கரி இறக்குமதியை தான் நிறுத்த சொல்கிறோம் என்பதை கவனத்தில் கொள்க)

துறைமுகத்தில் பலவகையான ஏற்றுமதி ,இறக்குமதி செய்வதாக துறைமுக இணையத்தளம் அறிவித்துள்ளது. 


குறிப்பு : இந்த பிரச்சனையில் உண்மையாக நன்மையை நாடி செயல்பட்ட அமைப்புகள் ,தனிநபர்கள் அனைவருக்கும் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி உண்டு... ஆனால் கிடைத்த வரைக்கும் லாபம் என்று ரெட்டி போட்ட ரொட்டி துண்டை கவ்விகொண்டு ஓடிவந்தவர்கள் எவராக இருந்தாலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் ""மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று ஏற்றப்படும். அவனது மோசடி அளவுக்கு அது உயரமாக ஏற்றப்படும். அறிவீர். பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று அதில் மோசடி செய்தவனைவிட மிகப் பெரும் மோசடிக்காரன் வேறெவனுமில்லை'' (புகாரி 31 86, முஸ்லிம் 35 79).

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு இறைவன் சொர்க்கத்தைத் தடை செய்து விடுகிறான்...


சொற்ப காசுக்கு ஊர் மக்களின்.. ஏன் உங்கள் குடும்பத்தை கூட நினைத்து பார்க்காமல் விலைபேசி விட்டு வருகிறீர்கள் என்றால் உங்களை என்ன வென்று சொல்வது.. நீங்கள் வாங்கிய காசை பத்திரபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள் Hospital செலவிற்கு தேவைப்படலாம்.


தயவு செய்து உங்கள் விமர்சனத்தை பதிவு செய்யுங்கள்.

6 comments:

  1. நாகூர் பஞ்சாயத்து:

    நிச்சயமாக மிக ஆபத்தான விஷயம்..

    ஊரில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற பொருளாதாரத்தை கொடுப்போம்..

    வீட்டுக்கு வீடு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுப்போம்..

    தடை உத்தரவை பெறுவோம்..

    இதற்கு யார் பொறுப்பேற்பது...?

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே... மிக சரியாக சொன்னீர்கள் ///வீட்டுக்கு வீடு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுப்போம்../// இது போதும் இன்ஷால்லாஹ் நாம் தடை உத்தரவை பெற்று விடலாம் ...

      இன்ஷாஅல்லாஹ் இதற்க்கு பொறுப்பேற்று நடத்த கூடியவிரைவில் ஒரு நல்ல குழு அமையும்.. ஏற்கனவே சட்டரீதியாக போராட முனைந்து பொருளாதார பிரச்சனைகளை கருத்தில் கொண்டு முடங்கி போன விஷயங்களை வீறுகொண்டு ஆரம்பிக்க வேண்டும்...

      முதற்கட்டமாக நாம் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டியது மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ..

      Delete
  2. I HOPE ALL ARE WAITING FOR SOMEONE TO INITIATE ....WHO IS THAT?????MILLION RUPEES QUESTION... ORGANIZE ALL GROUPS EXPLAIN THE CAUSES... BETTER CONSULT WITH LAWYERS.......

    ReplyDelete
  3. I HOPE ALL ARE WAITING FOR SOMEONE TO INITIATE ....WHO IS THAT?????MILLION RUPEES QUESTION... ORGANIZE ALL GROUPS EXPLAIN THE CAUSES... BETTER CONSULT WITH LAWYERS.......

    ReplyDelete
  4. alhamdulillah excellent effort to explain the causes...i hope people are waiting for someone to initiate...organize all groups discuss.. then visit street by street...sure people will support with through all means...........

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும் .. தங்களின் கருத்துக்கு நன்றி சகோதரே .. இன்ஷாஅல்லாஹ் இந்த பிரச்சனையை முன்னெடுத்து செல்ல விரைவில் குழு அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. ஊர் மக்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பே இதற்க்கு மிகமுக்கியம்.. எதற்காக போராடுகிறோம் , ஏன் போராடுகிறோம் என்று மக்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...யார் தலைமை தங்குகிறார் , எந்த அமைப்பு என்பதை முன்னிறுத்தி பார்க்காமல் , என்ன தேவைக்காக போராடுகிறோம் என்று மக்கள் விளங்கி கலத்தில் இறங்க வேண்டும் .. கூடிய விரைவில் அதற்க்கு உண்டான சூழல் உருவாகும் என்று நம்புவோம்.

      Delete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...