(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, May 6, 2012

மத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாணவி!



இன்றைய கல்விமுறை அதுவும் இந்திய கல்விமுறை ஒரே ஒரு குறிக்கோளை 
கொண்டே கற்பிக்கபடுகிறது வேற என்ன .. "வருங்காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் அதற்கு படிக்க வேண்டும்" இது தான் எல்லோருடைய மனநிலையாக இருக்கிறது...


ஆனால் கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மூளையை செயல்படுத்தாமல்  ஒவ்வொரு தனி மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும். 


கல்வி மூலம் ஒருவருடைய ஒழுக்கம் ,நன்னடத்தை,வளர வேண்டும். எது சரி எது தவறு என்று பிரித்தறிய கூடிய சுய சிந்தனை அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.எதையும் எதார்த்த உலகத்தோடு பொருத்தி பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். இப்படி பட்ட கல்வியை தான் நம்முடைய மார்க்க நமக்கு கற்றுகொள்ள சொல்கிறது.


சரி அது இருக்கட்டும் இப்போது நாம் பார்க்க போவது 5ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான   ஐஸ்வர்யா பராஷர்   கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள்ளது மத்திய அரசு.






அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .


இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.


ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இச்சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .


இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.

இந்திய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது 1944 ம் ஆண்டு ஜூலை மாதம் 6 ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. - 


நன்றி : http://koodalbala.blogspot.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...