(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, May 3, 2012

சந்தனக் கூடு விபத்தில் சிக்கியவர்களுக்கு நிதியுதவி

நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் மின்சார அலங்கார வாகனத்தை இழுத்துச் சென்ற போது மேலிருந்த மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட மின்சார விபத்தில் சிக்கி தமிமுல் அன்சாரி, சபீர் என்கிற அப்துல் ஹமீது ஆகியோர் உயிரிழந்த நம்மால் மறந்திருக்க முடியாது.

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக இவ்விபத்து சம்பவித்ததாகவும், இதனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 இலட்சம் நிதியுதவி தமிழக அரசு வழங்கிட வேண்டுமென்று முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 இலட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000மும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000மும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தர்கா நிர்வாகமும் தனது பங்கிற்கு உயிரழந்த இரு சகோதர்களுக்காக தலா ரூபாய் 25000 வழங்கியுள்ளது.

இழந்த உயிர்களுக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் நிகராகாது. அல்லாஹ் அந்த சகோதரர்களின் பாவத்தை மன்னிக்கவேண்டும். இவர்களின் குடும்பத்தார்களுக்கு மனஆறுதலை அளிப்பாயாக..


யா அல்லாஹ்!  எங்களுடைய உயிர்களை கைப்பற்றும் போது பரிபூர்ண ஈமானோடு கைபற்றுவாயாக..
உன்னை போற்றி புகழ்தவனாக இருக்கும் நிலையில் எங்கள் இறுதி முடிவை அழகானதாக ஆக்குவாயாக ...இதுபோன்ற தேவையற்ற அனாச்சாரங்களை விட்டும் எங்களை காப்பாயாக..

நன்றி : இந்நேரம்.காம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...