(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, May 7, 2012

KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு


நாம் KFC வேணாம்பா என்று ஒதுங்கினால் அதெல்லாம் ஒன்றுமில்லை இந்த ஷாப்ல ஹலால் தான் ,அந்த ஷோப்ல ஹலால் தான் என்று வலுக்கட்டாயமாக அன்புத்தொல்லையில் நம்மை சாப்பிட வைத்து சந்தோசப்படுகிறார்கள் நம்மவர்கள்..

அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை ... கூடவே பெப்சி , கொக்க கோலா வேற ...

நாம் அதெல்லாம் வேணாம் என்றால் நாம் ஏதோ நவீன உலகத்தை விட்டு அந்நியப்பட்டு நிற்பதாகவே பார்கிறார்கள். நாம் சொல்வதேல்லாம் உணவில் ருசி தேவை தான் அதற்க்காக உடலுக்கும் ,உள்ளத்திற்கும் பயனளிக்காத உணவை ருசியை காரணம் கூறி சாப்பிடுவது சரியா ?

எனக்கு சாப்பிடுவதால் ஒன்றும் ஆகவில்லை என்று கூறுபவர்கள் - தங்களை ஏதும் பாதிக்காத வரை இபப்டி சொல்லிகொள்ளலாம் அல்லது பாதிப்பு ஏதும் வந்தால் இதனால் தான் வந்தது என்று அறியாமல் இருக்கலாம்.

கீழ்காணும் செய்தி KFC சாப்பிடுபவர்களை கொஞ்சம் யோசிக்க வைத்தால் சரி

கான்பெர்ரா: கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, (ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு) 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(கே.எஃப்.சி) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.

கே.எஃப்.சியின் ரெஸ்ட்ராண்டில் ட்விஸ்டர் வ்ராப்பரை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். மூளை பாதிப்படைந்தது. பேசும் சக்தியையும், நடக்கும் சக்தியையும் இழந்த அச்சிறுமி வீல்சேரில் நடமாடுகிறார். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின.

விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://abcnews.go.com/Business/video/kfc-to-pay-8-3-million-dollars-to-brain-damaged-girl-16228479 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...