நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த காலமது. அன்று வல்லரசு நாடுகளில் ஒன்றான உரோமமப் பேரரசருக்கு ஒரு கடிதத்தை தமது தோழர் திஹ்யா இப்னு கலீபா அல்கல்ஃபீ அவர்கள் மூலமாக பஸராவின் கவர்னரிடம் கொடுத்து ரோமப்பேரரசரிட்ம் சேர்ப்பிக்குமாறு அனுப்பிவைத்தார்கள்.
அப்பொழுது ரோமானியப் பேரரசர் கைஸர் (ஹெர்கலிஸ்) சிரியா நாடு வந்திருந்தார்.சிரியாவின் தலை நகரில் (மஸ்ஜிதுல் அக்ஸாவில்) அவரது அவை கூடியது. அப்பொழுது அவரது அமைச்சர்களில் ஒருவர் ஒரு கடிதத்தை அரசரிடம் கொடுத்தார்.அதனைப் பெற்றதும் அப்பேரரசரின் தலையும் சுழன்றது. ஒரு நொடி நேரத்தில் எத்தனையோ எண்ணங்கள் அவரது உளக்கடலில் அலைமோதின.
அரபு நாட்டிலிருந்து இங்கு யாரும் வந்துள்ளனரோ? என்று விசாரித்தார் மன்னர் மன்னர். ‘ஆம்’ என்றார் அங்கு வீற்றிருந்த ஒருவர்.உடனே அவரை அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார் அரசர். அவ்வாறே அந்நாட்டிற்கு வாணிபத்தின் பொருட்டு வந்திருந்த குரை ஷpகள் சிலர் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் அண்ணல் நபியின் பெரும் பகைவர் அபூசுஃபயானும் நின்று கொண்டிருந்தார்.
உங்களுடைய நாட்டில் யாரோ ஒருவர் தம்மை ‘நபி’ என்று கூறிக் கொள்;கிறாராமே! இங்கு வந்திருப்பவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர் எவரேனும் உண்டோ? என்று வினவினார் அப்பேரரசர்.
“நான் அவரது நெருங்கிய உறவினர் தான்” என்று கூறிக்கொண்டே அவர் முன் வந்து நின்றார் அபூசுஃப்யான்.
அப்பொழுது அப்பேரரசர் மற்ற அரபிகளைப் பார்த்து, இப்பொழுது நான் அபூசுஃப்யானிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் அதற்கு மறுமொழியாக அவர் பொய் கூறுவாராயின் நீங்கள் என்னிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று எச்சரித்தார்.(அபூசுஃப்யான் பி;ன்னர் ஒருசந்தர்பத்தில் கூறும் பொழுது ‘ரோமானியப் பேரரசர் அன்று மட்டும் அவ்வாறு எச்சரிக்கை செய்திராவிட்டால் நான் நிச்சயமாக அவர் முன்னிலையில் பொய்யே சொல்லி யிருப்பேன்’ என்று கூறினார்.)அதன் பின் கைஸருக்கும் அபூசுஃப்யானுக்கும் இடையே பின் வரும் உரையாடல் நிகழ்ந்தது.
கைஸர் : தம்மை நபி என்று கூறிக்கொள்பவரின் குடும்பத்தகுதி என்ன?
அபூசுஃப்யான் : அரபு நாட்டின் மிக உயர்ந்த குடும்பம் அவரது குடும்பம்.
கைஸர் : இதற்கு முன்னர் எவரேனும் அவரது குடும்பத்தில் தம்மை ‘நபி’ என்று கூறிக்கொண்டனரா?
அபூசுஃப்யான் : இல்லை.
கைஸர் : வரது குடும்பத்தில் எவரேனும் அரசர்களாக இருந்துள்ளனரோ?
அபூசுஃப்யான் : இல்லை.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளா? செல்வந்தர்களா ?
அபூசுஃப்யான் : ஏழைகள்.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் பெருகிக் கொண்டு போகிறதா? குறைந்து கொண்டு போகிறதா?
அபூசுஃப்யான் : நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் செல்கிறது.
கைஸர் : அவர் எப்பொழுதேனும் பொய்யுரைத்ததை நீங்கள் கேட்ட துண்டா?
அபூசுஃப்யான்:ஒருபோதும் இல்லை.
கைஸர் : உடன்பாட்டுக்கு அவர் மாறு செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :இது வரையிலும் இல்லை.இப்பொழுது எங்களுக்கும் அவருக்குமிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் பார்க்கவேண்டும்.
கைஸர் :அவருடன் நீங்கள் போர் செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :ஆம்.
கைஸர் :அதன் முடிவு என்ன ?
அபூசுஃப்யான் :சில சமயங்களில் எங்களூக்குவெற்றி.மற்றும்சில சமயஙகளில் அவருக்கு வெற்றி.
கைஸர் : அவர் மக்களுக்கு என்ன உபதேசம் செய்கின்றார்?
அபூசுஃப்யான் : ஒரே இறைவனை வணங்குங்கள் என்றும்,அவனுக்குஇணைவைக்காதீர்கள் என்றும்,அவனைத் தொழுது தூய வாழக்கை வாழுங்;கள் என்றும்,உண்மை பேசுமாறும்,உறவினருடன் ஒற்றுமையாயி ருக்குமாறும் அவர் போதிக்கிறார்.
இப்பொழுது ரோமானியப் பேரரசரின் கண்கள் சுடர் விட்டன. அவருடைய முகத்தில் என்றுமில்லாத ஒளி தோன்றியது. அவர் அரபுகளைப்பார்த்து பின்வருமாறு கூறினார்.
அவர் உயர் குடியிற் பிறந்தோர் என்று கூறினீர்.தீர்க்கதரிசிகள் எல்லாம் இதுகாறும் உயர் குடியில் தான் பிறந்துள்ளனர்.
அவருடைய குடும்பத்தில் இதுவரை யாரும் தம்மை நபியென்று கூறிக் கொள்ளவில்லை என்றும் கூறினீர். அவ்விதம் இருப்பின் அவரைப் பின்பற்றி இவரும் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்கிறார் என்று எண்ணலாம். அவ்விதம் எண்ணுவதற்கு இடம் இல்லை.
அவருடைய குடும்பத்தில் இதற்கு முன் யாரும் அரசர்களாய் இருந்ததில்லை என்றும் கூறிகின்றீர். அவ்விதம் இருந்திருப்பின் இவரும் ஓர் அரசராவ தற்காக இவ்வாறு வேடம் புனைந்துள்ளார் என்று நான் எண்ணி இருப்பேன்.
அவர் பொய்யுரைப்பதில்லை என்றும் கூறினீர்.பொய்யுரைக்காத ஒரு மனிதர் எவ்வாறு இறைவனைப்பற்றிப் பொய்யுரைப்பார்?
அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளே என்றும் கூறுகின்றீர். இறைவனின் தூதர்களை முதலில் பின்பற்றுவோர் ஏழைகள் தாம்!
அவர் உடன்பாட்டை முறித்ததில்லை என்றும் கூறினீர். இறைவனின் திருத்தூதர்கள் ஒருபோதும் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடமாட்டார்கள்.
சிலபொழுது போரில் உங்களுக்கு வெற்றியும், சிலபொழுது அவருக்கு வெற்றியும் ஏற்பட்டதாகக் கூறுகின்றீர்.
இவ்வாறே வெற்றியையும்,தோலவியையும் மாறி மாறி வழங்கி இறைவன் அவர்களைச் சோதிப்பான். அவருடைய அறிவுரைகள் யாவும் எல்லோராலும் பின்பற்றத் தக்கவை.
நீர் கூறியது உண்மையாயிருப்பின் அவர் நிச்சயமாக இறைவனின் இறுதித் தூதரேயாவார். ஒரு காலத்தில் இந்நாடும் அவர் வயமாகும். இறைவனின் தூதர் தோன்றப்போகின்றார் என்பதை நான் அறிந்தே இருந்தேன்.
ஆனால் அவர் அரபு நாட்டில் தோன்றுவார் என்று நான் எண்ணவில்லை.எனக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிட்டின் நான் அவர்களுடைய கலடிகளிலே நின்று குற்றேவல்; புரிவேன். அதன் பின் அக்கடிதத்தைப் படிக்குமாறு பணித்தார் மன்னர்.
‘அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால், அவனுடைய அடியாரும் திருத்தூத ருமாகிய முஹம்மத், ரோமானியப் பேரரசர் ஹெர்குலிஸுக்கு எழுதும் கடிதமாவது :-
இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய திருத்தூதரைப் பின்னற்றி ஒழுகுபவர்களுக்கு இறைவனின் சாந்தி உண்டாவதாக!
வேதத்தையுடையோரே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்குஇணைவைக்கவும் மாட்டோம்.
நாம் நம்மில் ஒருவரை ஒருவர் கடவுளாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் என்ற பொதுக் கொள்கைக்கு வாருங்கள் என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ‘நாங்கள் முஸ்லிம்கள்’ என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்’ என்று கூறிவிடுங்கள். (குர்ஆன்-3.64) என்ற மறைவசனத்தை துவக்கமாகக் கொண்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. (புகாரி)
அல்லாஹ்வைத்தவிர்த்து வணக்கத்திற் குரியோன் வேறு யாருமில்லை என்றும், நான் எல்லா மக்களுக்கும் எச்சரிக்கை செய்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பெற்ற அவனது திருத்தூதர் என்றும் சான்று பகர்கின்றேன்.
நீரும் இஸ்லாத்தைத் தழுவிவிடும்;.அப்போது நல்வாழ்வு வாழ்வீர்! இல்லையேல் உம்முடைய குடிகளின் பாவங்களும் உம்மையே வந்து சேரும்.முடங்கல் எழுப்பிய முழக்கத்தைக் கேட்டதும் அங்கு வீற்றிருந்த பாதிரிமார் களின் மூளை கலங்கியது.
அதன் பின்னர் மன்னர், அபூஸுஃபயான் முதலானோரைப் போய்வருமாறு பணித்தார்.அபூஸுஃபயான் வெளியே வரும்பொழுது அடகடவுளே! மன்னாதி மன்னரும் முஹம்மதைக்கண்டு அஞ்சுகிறானே.அவருடைய மடலைச் செவியுற்று அவனுடைய அவையி லுள்ளோர் அனைவரின்; உள்ளமும் உடலும்; நடுநடுங்குகின்றனவே! ‘இதென்ன புதுமை!’ முனங்கிக் கொண்டு சென்றனர்.
பின்னர், அப்பேரரசர் தம் அவையினரை யெல்லாம் பார்த்து இஸ்லாத்தின் பெருமையினை எடுத்துரைத்து அதனைப் பின்பற்றின் தங்களுக்கு வளவாழ்வும், வான்புகழும் வந்து சேரும் என்றும் கூறினார்.
மேலும் பெருமானாரின் தூதர் திஹ்யாவுக்கு மன்னர் பெரும் பரிசில்களையும் செல்வத்தையும், உயர் ரக ஆடைகளையும் அளித்து கவுரவித்தார். மன்னர் மனத்திலே அக்கடிதம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது.(ஸீரத்துந்நபி, இப்னு ஹிஷாம்)
ஜசக்கல்லாஹ் : http://albaqavi.com/home/?p=241
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Saturday, January 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன