(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, March 24, 2011

மருத்துவரின் இயலாமையும்,மருத்துவமனையின் வசதிகுறைவும்,கருவில் இறந்த இரண்டு குழந்தையும்

(நாகூரை சார்ந்த சகோதரர் ராஜிக் பாரித் என்ற சகோதரர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நமக்கு அனுப்பி அதை மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார் அதை ஏற்று இதை வெளியிடுகிறோம்)

என்னை அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன் எனது பெயர் ராஜிக் பாரித் நான் நாகூரை சார்ந்தவன். நான் எனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் இனி யாருக்கும் நிகழக்கூடாது என்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 மருத்துவமனையின் வசதி குறைவாலும்,மருத்துவரின் தவறான நடத்தையினாலும், தவறான அணுகுமுறையினாலும்  கடந்த 2005 மற்றும் 2010ஆம் ஆண்டு முறையே என்னுடைய முதல் குழந்தையையும் , மூன்றாம் குழந்தையையும் இழந்து தவிக்கிறேன்.

என்னுடைய மனைவி 2005 ஆம் ஆண்டு கருத்தரித்து இருந்தார் நாங்கள் நாகை Dr.Greta Arthur டாக்டரிடம் ஆரம்பத்திலிருந்து மருத்துவ ஆலோசனை பெற்றுவந்தோம். ஏழாவது மாதத்தில் திடீர் என்று இரத்தப்போக்கு ஏற்பட்டது உடனடியாக நாங்கள் Arthur மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். அப்போது அந்த மருத்துவமனையில் தேவையான SCAN செய்யும் வசதியில்லை ஆதலால் டாக்டரால் ரத்தபோக்கிர்காண காரணத்தை கண்டறியமுடியவில்லை. மறுநாள் ADVANCED SCANNING CENTERரில் SCAN செய்து பார்த்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்(இன்னாலில்லாஹ்..) மருத்துவமனையின் வசதிகுறைவால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை..

பிறகு 5 வருடம் கழித்து என் மனைவி மூன்றாவது குழந்தையை கருத்தரித்தார் முதல் ஏழு மாதங்கள் துபையில் வசித்தார் அங்கு நல்லமுறையில் மருத்தவ உதவியை பெற்றுவந்தார். ஏழாவது மாத இறுதியில் இந்தியாவிற்கு வந்து Dr.Greta Arthur டாக்டரிடம் TREATMENT தொடர்ந்தார். நாங்கள் மீண்டும் அதே டாக்டரை தொடர்பு கொண்டதற்கு காரணம் அவர் என் மனைவின் MEDICAL HISTORYயை நன்கு தெரிந்தவர் என்பதனால்.2nd of Sep.2010 என் மனைவி மருத்துவ ஆவணங்களை Dr.Greta Arthurரிடம் கொடுத்து விட்டார்.
பிறகு ஒருவாரம் கழித்து என் மனைவிக்கு கடுமையான காய்ச்சலும் , சளியும் ஏற்பட்டது உடனே 6th of Sep 2010 மருத்துவரை சந்தித்தார்.
டாக்டர் என் மனைவிக்கு மருத்துவ ஆலோசனைகளை கூறி  மீண்டும்  29th Sep சந்திக்க சொன்னார். blood and urine test எடுக்க 27th of Sep 2010 வருமாறு கூறினார்.  அது போல் அன்று blood and urine test எடுத்தோம் ஆனால் டாக்டர் மருத்துவமனையில் இல்லை. மருத்துவமனையில் உள்ள எந்த ஊழியர்களும் என் மனைவிக்கு இரத்த அழுத்தத்தை சோதிக்கவில்லை  மேலும் அவர்கள் யாருக்கும் முறையான முன்னுபவமில்லை என்றே எண்ணுகிறேன்.

அதே நாள் என் மனைவி உயர் இரத்தஅழுத்தம் மற்றும்  கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இரவு சரியாக  4.15 AM மணிக்கு மருத்துவமனையில் சேர்த்தோம்.Doctor என் மனைவிக்கு IV fluid மற்றும்  two units ரத்தம் ஏற்றினார். மேலும் இரண்டு மணி நேரத்தில் சுக பிரவசம் ஏற்படலாம் என்றும் கூறினார். பிறகு மணி 9.10 AM க்கு ultra scan னும் எடுத்தார்கள்.

அந்த நேரம் குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாக இருந்தது(heart rate is 149/minute).
மீண்டும் மணி 10.00AMக்கு என் மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்ப்பட்டது பிறகு டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாகவும் தன்னால் குழந்தையை காப்பற்ற முடியவில்லை என்றும்  கூறினார். டாக்டர் என் குழந்தையை காப்பாற்ற தேவையான நடவடிக்கையை முறையாக எடுக்கவில்லை என்றே எண்ணுகிறேன். ஒரு மணி நேரத்திற்குள்ளாக என் மனைவி இறந்தநிலையில் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை வெளிவந்ததற்க்கு பிறகும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. doctor did not remove the complete baby cord (Placenta) from her uterus.

 என்னை பொருத்தவரை என்னுடைய குழந்தையை நான் இழந்ததற்கு காரணம் அவசரகால மருத்துவ உதவியை  செய்ய மருத்துவருக்கு  போதிய மருத்துவ அறிவில்லாமை மற்றும் மருத்துவமனை போதிய  வசதியில்லாமை  என்றே எண்ணுகிறேன்.

மேலும் என் மனைவியின் உடல்நிலை பற்றி எனக்கு முழுமையான ஆவணத்தை(reports) அவர் தரவில்லை. நான் உடனடியாக துபையில் இருந்து ஊருக்குவந்து டாக்டரை சந்தித்தேன். என்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தேன் என்னுடைய சந்தேகத்தை கேட்டேன். இரண்டு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் எனக்கு டாக்டர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் இரண்டு குழந்தையும் இறந்ததற்கு வேறு வேறு காரணம் இதற்கும் அதற்கு சம்மந்தமில்லை என்பதே.

Dr.Greata Arthur  எந்தவித அனுதாபத்தையும் எங்களிடம் காண்பிக்கவில்லை பிறகு சிறிய கடிதத்தை எழுதி Dr.Ramesh Babu MD. ரிடம் அனுப்பிவைத்தார் அவர் என் மனைவியின் உடல்நிலையை பார்த்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள நரம்பியல் நிபுணர் Dr.Vanjilingam மிடம் அனுப்பிவைத்தார் 02.10.10.

பிறகு சென்னை செல்லவேண்டி இருந்ததால் மனைவியை எப்படி அழைத்துசெல்வது என்பதுபற்றி எனக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டது Dr.Greata Arthur ரை சந்திக்க முயற்சித்தேன். பலமணி நேரம் காத்திருந்தோம் ஆனால் அவர் வேண்டும் என்றே சந்திக்காமல் புறக்கணித்தார். அவருக்கு சுகபிரசவ போன்ற சாதாரண மருத்துவ விஷயங்கள் தான் தெரிந்திருக்கிறது மற்றவை பற்றிய போதிய அறிவு இல்லையென்பதால் சரியாக அவர் எங்களிடம் ஒத்துழைக்கவில்லை.

பிறகு சென்னையில் என் மனைவிக்கு உடல் சம்மதமாக முழுமையான மருத்துவ ஆய்வை மேற்கொண்டதில் என் மனைவிக்கு Falciperum Malaria தாக்கி இருப்பது தெரியவந்தது. (Refer attached Chennai clinic Report).   
நாகப்பட்டினம் டாக்டர் என் மனைவிக்கு இந்த testகளை எடுக்கவில்லை என்பதும் இதற்கான மருந்துகளும் அங்கு இல்லை என்பது தெரிகிறது.(Postpartum period and Antipartum Period).

 மேலும் இதுபோன்று பிரசவ நேரத்தில் ஏற்படுவதற்கு என்ன காரணம் ? எதனால் ஏற்படுகிறது .. இதை தடுப்பதற்கு என்ன வழி என்று ஆய்வு
 செய்து பல டாக்டர்களிடம் கேட்டு தெரிந்ததில்.Preeclampsia என்ற நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.
(One of common abnormal pregnancy had happened to my wife. It is called Preeclampsia) 
அதை பற்றிய முழுவிபரம் இங்க கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

PLS CLICK FOR DOWNLOAD









If the infant is died there was “STILL BIRTH FORM” Is available we have to filled up and submitted to the government. Also they would ask detailed report to the doctor. Don’t accept this bloody postcard report. As I experienced this incident this is small initiative to create public awareness.
After countless effort I have tried to contact W.H.O. Stillbirth estimation director Dr.Joy Lawn and briefed about my two incidents. She sent to Register General in India Delhi and she replied.
"Dr.Joy Lawn (Director of Global Evidence and Policy) from World Health Organization. She has conducted Global estimation on Stillbirth at London last 14th April.
If any pregnancy women after delivery the baby dies that baby only counting most of the place, But during the labor or before full term if the baby dies not counted. Now World Health Organization started for counting on stillbirth"

 
ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனது மின்னஜ்ஜலுக்கு அனுப்புங்கள்
J.RAJIK FAREED
Dubai
U.A.E.
Any Feedback pls contact me : My personal email id : rajik_fareed@yahoo.co.in.

2 comments:

  1. Dr.Greta Arthur is not experience doctor she is run clinc with time only. dr. greta arther is dont advice to take scan for pergant girl month between 4 to 9. she ll advice take scan only in 9th of month only. ur case not only she do like many more. muslims only consulte this doctore hindu people dont like this doctor. after ur complaint muslim people ll change to other doctors or atleast take advice from other doctor for second option. what about ur second child? ll born from which hospital?

    ReplyDelete
  2. Assalamu alaikkum ,hello razik are you doctor? your not educated

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...