சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு
அழைக்கும்..
சமீபத்தில் மீடியாக்களில் மிக பெரிய
விவாத பொருளாக மாறியிருக்ககூடிய செய்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக
மும்பையை சார்ந்த ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு கொடுத்த ஃபத்வா
(மார்க்க தீர்ப்பு).
அதவாது இரானிய இயக்குனர் மஜித் மஜிதி
இயக்கும் ‘முஹம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’ ( நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு)
என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின்
இயக்குனர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மும்பையைச் சேர்ந்த 'ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு ஃபத்வா
கொடுத்திருந்தது.
அந்த அமைப்பு கொடுத்த ஃபத்வாவில் இந்த
படத்தின் பெயரே எங்களுக்கு உடன்பட்டதில்லை, இந்த படத்தில் நபிகள் நாயகத்தை ஒருவேளை தவறாக சித்தரித்திருந்தால்
பலர் கேலி செய்யும் நிலை ஏற்படலாம்.. எனவே
இந்த படம் தடை செய்யபட வேண்டும் , இந்த படத்தை இயக்கிய மஜிதி மற்றும் ஏ.ஆர்.,ரஹ்மான் மீண்டும் கலிமா சொல்லி இஸ்லாத்திற்குள் வர வேண்டும்
என்று அந்த அமைப்பு மார்க்க தீர்ப்பு
கொடுத்துள்ளது.
இதற்க்கு ஏ.ஆர்.,ரஹ்மான் விளக்கமும் அளித்துள்ளார்.
இதில் பல விசயங்களை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்/
முதலில் ராஸா அகாடமி என்ற மும்பையை சேர்ந்த இந்த
அமைப்பிற்கு ஃபத்வா வழங்க தகுதி இருக்கிறதா.. இந்த அமைப்பு இந்திய முஸ்லிம்களின்
பிரதிநிதியா என்றால் கண்டிப்பாக இல்லை.. மேலும் இந்த அமைப்பு இஸ்லாத்தின்
அடிப்படைக்கு எதிரான சூபிசம் கொள்கையை பின்பற்றும் அமைப்பு.
சரி இவர்கள் ஃபத்வா கொடுக்கலாம் என்று
வைத்துகொள்வோம். முறையாக இஸ்லாத்தை பின்பற்றும் அமைப்பு என்று வைத்துகொள்வோம்.
இவர்கள் ஃபத்வா வில் ஏதாவது உருப்படியான வாதம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை
முரண்பாட்டின் மொத்த உருவமாகவே
இருக்கிறது. எப்படியெனில்...
**முஹம்மது - மெசஞ்சர் ஆஃப் காட் என்ற
திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அதில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி
தவறாக சித்தரிப்பு என்பது இவர்கள் அனுமானமே ஆகும் ஆகவே அனுமானங்களை வைத்து மார்க்க
தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன.
**முஹம்மது என்ற பெயரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி
படம் எடுப்பதே உடன்பட்டதில்லை
என்றால்.., ஏற்கனவே the message - the story of islam என்ற படம் 1976ல் வெளியாகி உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த படம்
முழுக்க முழுக்க அல்லாஹ்வின் தூதர்
நபி(ஸல்) அவர்களை பற்றியது தான். அதற்க்கு
எந்த எதிர்ப்பும் , இதுநாள் வரை இவர்கள் தெரிவிக்கவில்லை...
முஹம்மது என்று திரைபடத்திற்கு பெயரிடுவதே மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் செயல்
என்று எந்த அடிப்படையில் இவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குகிறார் என்று
தெரியவில்லை.
** மேலும் அந்த படத்தில் முஹம்மது நபி
(ஸல்) அவர்களின் உருவத்தை பிரதிபளிப்பது போன்ற ( நபி(ஸல்) இப்படி தான்
இருப்பார்கள் என்பது போன்று வேறு ஒருவரை நடிக்க வைப்பது) காட்சிகள் இருக்கிறது என்று இயக்குனரோ ,
அதன் தயாரிப்பாளரோ கூறியதில்லை...
**மாறாக அப்படியான எந்த காட்சியும்
இருக்காது என்று தான் இந்த திரைபடத்தை துவங்குவதற்கு முன்பே அந்த திரைப்பட
குழுவினரால் தெரிவிக்கபட்டது. மேலும் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றை தான்
திரைப்படமாக எடுக்க இருக்கிறோம் என்று கூறினார்கள்...ஏற்கனவே வந்த தி மெசேஜ்
படத்திலும் நபி(ஸல்)அவர்களின் கண்ணோட்டத்தில் காட்சி நகர்வது போன்று தான்
இருக்கும். தனியாக அந்த charaterல் யாரும் நடிக்க வைக்கப்படவில்லை
என்பது குறிப்பிடதக்கது.
**மஜிதி மற்றும் இசைஅமைப்பாளர் ஏ.ஆர்
இருவரும் சினிமா துறைவில் பல காலமாக இருந்துவருபவர்கள் என்பதை அனைவருக்கும்
தெரியும். அதிலும் குறிப்பாக சூபித்துவ கொள்கையில் இருக்கும் ராஸா அகாடமி என்ற
அமைப்பை பொறுத்தவரை இசை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைப்பாட்டில்
உள்ளவர்கள். இதே நிலைப்பாட்டில் தான் ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்கிறார்.
** தர்கா, தர்காவாக போகக்கூடிய ஏ.ஆர்
ரஹ்மானை பற்றி எதுவும் பேசாத இந்த அமைப்பு , இசையை ஆதரிக்கும் இந்த அமைப்பு , முஹம்மது என்ற படத்திற்கு இசை அமைத்த காரணத்திற்காக மீண்டும் கலிமா
சொல்ல வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்க என்ன அருகதை இருக்கிறது இவர்களுக்கு
என்று தெரியவில்லை.
**ராஸா அகாடமி இந்த அமைப்பு கேலிக்கூத்தான
மார்க்க தீர்ப்பை வழங்க காரணம் சுய விளம்பரத்திற்காக தான் என்பது தெளிவாக
தெரிகிறது. மேலும்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க
ராஸா அகாடமி ஃபத்வாவிற்கு மீடியா இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம்
வழக்கம்போல் மக்களின் சிந்தனை மாற்றத்திற்கும் TRPக்கும் தான்.
ஆகவே இதுபோன்றவை ஃபத்வா மார்க்கத்தை கேலிகூத்தாக்கும் செயல் எனவே இதை முஸ்லிம்களான நாம் புறந்தள்ளவேண்டும்.
இந்நிலையில் இந்த பத்வாவிற்கு
ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.
அதில் "முகம்மது: மெசஞ்சர் ஆஃப்
காட்’ படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில்
கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்.
நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர்
அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான்
பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.
நான் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம்
எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற
செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று
அல்லாஹ் என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது...? என்று அப்பாவி தனமாக எதிர்கேள்வி கேட்டு தனது நிலைப்பாடு சரிதான்
இதில் என்ன தவறை கண்டீர்கள் என்பது போல் விளக்கமளித்துள்ளார்.
அல்லாஹுடைய மார்க்கமான இஸ்லாத்தில்
செய்யகூடாது என்று தடுக்கப்பட்ட ஒன்றை ஏன் செய்யவில்லை என்று அல்லாஹ் எப்படி
கேட்பான் என்று நாம் ரஹ்மானுடன் எதிர்
கேள்வி வைக்கலாம். ஆனால் உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் புரிந்துள்ள
இஸ்லாத்தில் இசை ஹலால் தான். இவ்வாறு தான் அவர் புரிந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை அவர்
புரிந்துகொண்ட இஸ்லாத்தை அவர் நேசிக்கிறார் அதற்காக நேரம் ஒதுக்குகிறார் , மார்க்கத்திற்கு முக்கியதும் அளிக்கிறார் என்பதெல்லாம் சரி தான்.
எனினும் அவர் எந்த அளவிற்கு இஸ்லாத்தின் உண்மையான போதனைகளுக்கு நெருக்கமாக
இருக்கிறார் என்பது விவாதத்திற்குறியதே.
இசை இஸ்லாத்தில் ஹராம் என்பது
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாதா , யாரும் சொல்ல வில்லையா என்றெல்லாம்
நம்மில் பலர் பேசிகொள்வதுண்டு.
ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாத்தை தழுவ காரணமாக
இருந்தது சூபிசம் கொள்கைவாதிகள் தான் எனவே அதன் அடிப்படையிலே தர்கா –இசை பற்றிய பார்வை அவருக்கு இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானை விடுங்கள் நம்மில்
பலருக்கு கூட இசை மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதா இல்லையா என்ற தெளிவு இல்லை...
காரணம் பெரும்பான்மையானவர்கள் என்ன
நினைக்கிறார்கள் என்றால் இசை ஹலாலாக இருந்திருக்க கூடாதா என்றே எண்ணத்திலேயே இசைக்கு ஆதரவான ஆதாரத்தை இஸ்லாத்தில் தேடுகிறார்கள்.
சில விஷயங்கள் தெளிவாக இருந்தாலும் நம்
கண்களுக்கு புலப்படுவதில்லை காரணம் நம் உள்ளம் சத்தியத்தின் பக்கம் இல்லை, மன இச்சைபடியே செல்கிறது என்பதே உண்மை.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன