சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்...
சமீபத்தில் AMMA.COM என்ற பெயரில் நாகூர் முழுவதும் WIFI INTERNET (Nagore wifi) சேவை அறிமுகம் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த கட்டண சேவையை பெறுவதற்கு முன்பாக அதன் தரத்தை TRAIL செய்து பார்க்க விரும்புவோருக்கு சில தினங்களுக்கு இலவசமாக இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு அதன்படி இலவச சேவை வழங்கப்பட்டது.
இந்நிலையில் NAGORE LAWYER என்ற முகநூல் கணக்கின் மூலம் சகோதரர் ஒருவர் அதிர்ச்சியான செய்தியை amma.com நிறுவனரின் புகைப்படத்தை போட்டு வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி இது தான் :
மேற்கண்ட செய்தியை படிக்கும்போது.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது,
எனினும் இந்த நிறுவனத்தின் மீதான குற்றசாட்டை அதன் நம்பகத்தன்மையை நாம் கண்டிப்பாக ஆராய வேண்டும் அதன் பின்னரே நாம் எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டும்.
ஏனெனில் இந்த நிறுவனம் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்து வருகிறது ஆகையால் இது காழ்புணர்ச்சியினால் ஏற்படுத்தப்பட்ட குற்றசாட்டாக கூட இருக்கலாம்.. அல்லது அனுமானங்களாக கூட இருக்கலாம்.
தொலைத்தொடர்பு துறையில் இது போன்ற சந்தேகங்கள் வருவது இயல்பு தான் ஏனெனில் இதுபோன்ற இணையவழி திருட்டுகள் நடப்பதற்கு பல சாத்தியகூறுகள் இருக்கவே செய்கிறது.
அதே சமயம் இந்த குற்றசாட்டை முழுவதுமாக அலட்சியம் செய்ய முடியாது. காரணம் இது ஓவ்வொருவரின் அந்தரங்கத்தையும் எட்டிபார்க்கும் பாதகமான செயல்... ஆகவே நாம் என்ன சொல்கிறோம் என்றால்...
உடனடியாக அம்மா.காம் நிறுவனர் இந்த குற்றசாட்டிற்கு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும். உங்கள் நிறுவனத்திற்கு எதிராக முகநூலில் செய்தி வெளியிடபட்டுள்ளது. வெளியிடப்பட்ட குற்றசாட்டு பொய்யாக , இட்டுகட்டபட்டதாக கூட இருக்கலாம் ஆனால் குற்றசாட்டப்பட்ட விஷயம் ஒவ்வொரு தனிநபர் சம்மந்தபட்டது ஆகையால் நீங்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டிற்கான மறுப்பை வெளியிட வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும் அதுவே இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் வைக்கும் முற்றுபுள்ளியாக அமையும் என்ற கேட்டுகொள்கிறோம்.
உங்கள் மறுப்பை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பினால், அதை நாகூர் பிளாஷ் தளத்திலும் உங்களின் மறுப்பாக வெளியிடுகிறோம்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன