(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, September 16, 2015

மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்ட பா.ஜ.க நிர்வாகி கைது!

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

சென்னை: மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று மாலை முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் கடும் மணல் காற்று மற்றும் பலத்த மழையின்போது கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் முறிந்து விழுந்தௌ சுமார் 107 ஹஜ் யாத்ரீகர்கள் சஹீதானார்கள்.

உலகையே அதிர்ச்சியடைய செய்த இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பா.ஜ.க நிர்வாகி, "மக்கா சம்பவம் சந்தோஷமான செய்தி" என்று பதிவிட்டிருந்தார். அதனை அவரது நட்பில் உள்ள சிலரும் ஆதரித்திருந்தனர்.


இந்த நிலையில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மத ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாகவும் இருந்த இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சில சமூக ஆர்வலர்கள் வேல்முருகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர் இந்த குரூர மனப்பான்மை கொண்ட பதிவு குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தார்.


இந்த புகாரின் அடிப்படையில், வேல்முருகனை காவல்துறை கைது செய்தனர். மேலும் இவர் மீது 153,295,(505(1)(C) மற்றும் (505) (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...