(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, October 1, 2015

மாட்டுகறிக்காக , மனிதஉயிரை கொலை செய்த மிருகங்கள்.

பிஜேபி ஆட்சியில் நாடு நர மாமிசக் காடாகி விட்டது
பசுவைக் கொன்று சாப்பிட்டதாகப் வேண்டுமென்றே புரளியை கிளப்பி, திட்டமிட்டு முஸ்லிம் ஒருவரை  படுகொலை செய்துள்ளனர், அவரது மகனின் கண்களும் குருடாக்கப்பட்டுள்ளன.. நடவடிக்கை எடுத்த காவல்துறையின்மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...தாதரி (உபி) அக்.1  உத்தரப் பிரதேசம் மாநி லம் தாதரி நகருக்கு அரு கில் உள்ள ஒரு கிராமத் தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி தந்தை கொல்லப்பட் டார். அவருடைய மகனை  அடித்துக் கண்களைக் குருடாக்கிய கொடூரச் சம்பவமும் நடந்துள்ளது.  தாதரி நகருக்கு அருகில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் திங்கள் அன்று பசுமாடு ஒன்று காணாமல் போய்விட்ட தாகவும், அந்தப் பசுமாட் டின் மாமிசம் முகமது அக் லாக் வீட்டில் இருப்பதாக வும் சிலர் வேண்டுமென்றே கூறினர்.

இந்த நிலையில் முக மது அக்லாக் மற்றும் அவர்களது வீட்டில் உள் ளவர்கள் தான் பசுவை வெட்டி சமைத்து தின்று விட்டார்கள் என்றும், மீதமுள்ள மாமிசத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்கள் என்றும் அந்த ஊரில் உள்ள சில இந்து அமைப்பைச் சார்ந் தவர்கள் வதந்தி பரப் பினர்.

இதனை அடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில்  இந்து அமைப்பினர் மக்கள் அனைவரையும் கூடச் சொன்னார்கள். கூட்டத் திற்குப் பிறகு முகமது அக்லாக் பசுவை வெட்டிய தாகவும் அதைத் தின்று விட்டு மீதமுள்ள மாமி சத்தை தெருவில் வீசிய தாகவும், ஆகையால் பசு வைத் தின்ற குடும்பத் திற்கு தகுந்த தண்டனை தரவேண்டும் என்றும் மக் களை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட முகமதுவின் மகளான சாஜிதா பத்திரிகையாளர் களிடம் கூறும்போது எங்கள் வீட்டிற்கு திங்கள் கிழமை நள்ளிரவு காவிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பலர் கும்பலாக வந்தனர்.

கும்பலைக் கண்டு பயந்து கதவை மூடி விட்டோம். ஆனால் அந்த கும்பல் கதவைக் கோடரி மற்றும் கம்பிகள் கொண்டு தாக்கத் துவங்கி விட்டனர். சில நிமிடங் களில் கதவு உடைந்து விட்டது. உள்ளே வந்த சிலர் என் தந்தையை அடித்து வெளியே இழுத் துச் சென்றனர் பிறகு கோடரியால் தலையில் அடித்தனர். எனது மூத்த சகோதரனை செங்கலால் தாக்கினர்.

எனது தாயாரையும் அடித்தனர். பிறகு எனது ஆடைகளையும் கிழித்து எறிந்து என்னை அரை நிர்வாணமாக்கினார்கள் என்று கூறினார். இச்சம்பவம் நடந்த போது அந்த ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந் தனர். இந்தச் சம்பவத்தில் முகமத் அக்லாக் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். அவரது 26 வயது மகன் டானிசின் பார்வையும் பறிபோனது.  இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை ஆணையர் கூறும் போது, ஊரில் உள்ள கோவிலில் சிலர் கூடி வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.  சரியாக இரவு 10 மணியளவில் ஊரில் ஒன்று கூடிய மக்களில் சிலர் பசுவைத் திருடி அதைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதனை அடுத்து திரளான மக்கள் கையில் ஆயுதங் களுடன் அக்லாக் வீட் டிற்குச் சென்று தாக் குதல் சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனர்.    மொத்தம் 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் தலைமறைவாகியுள் ளனர் என்று கூறினார்.   இந்து அமைப்புகள் எதிர்ப்பு   காவல்துறையினர் 4 பேரைக் கைது செய்ததை எதிர்த்து ஊரில் உள்ள இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறை யில் இறங்கினர். காவல் துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தனர். காவல் துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர்.

வன்முறைச் சம் பவம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் சிறப்பு காவல்படையினரை சம்பவ இடத்திற்கு வரவ ழைத்தார். சிறப்புக்காவல் படையினர் ஊருக்கு வராமல் தடுக்க சாலை களில் சேதமேற்படுத்த முனைந்த கலவரக்காரர் கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆனால் வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களால்

தாக்கத் தொடங்கியதும் காவல் துறையினர் துப்பாக் கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். கல வரக்காரர்கள் தாக்கியதில் 3 காவலர்கள் காயமடைந்த னர்.   சிறப்பு கலவரக் கட்டுப் பாட்டு பிரிவு காவல்துறையி னர் 3000 பேர் அந்த பகுதி யில் முகாமிட்டுள்ளனர்.  கொலை செய்யப்பட்ட அக்லாக் என்பவர் மட்டும் தான் அந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர். சுமார் 400 குடும் பங்கள் அடங்கிய அந்த ஊரில் 2 முஸ்லீம் குடும்பம் மாத்திரமே உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக ஒரு குடும் பத்தினர் வெளியூர் சென்று விட்டனர்.  பசு மாட்டின் மாமிசம் அல்ல இந்த நிலையில் மாநில காவல்துறை ஆணையர் கூறும் போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மாமிசம் ஆரம்ப பரிசோதனையின் படி  அது பசு மாட்டின் மாமிசம் அல்ல என்று கூறினார்.

உலகளவில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிசாரா கிராமத்தில் மாமிசம் வைத்திருந்தார் என்ற வதந்தியை அடுத்து அடித்துக் கொலைசெய்யப் பட்ட முகமது அக்லாக் மற் றும் கண்கள் குருடாக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் அவரது மகன் டானிஸ் விவகாரம் உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்ற மோடி இந்தியா முன்னேறி வருகிறது, நான் பிரதமர் ஆன பிறகு உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க் கிறது என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இதைச் சொல்லிவிட்டு டில்லி திரும் பும் முன்பே மாட்டு மாமி சத்தை வைத்திருந்தார்கள் என்ற வதந்தியின் பெயரில் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பத்தையே அடித்து நொறுக்கியுள்ளனர். அனல் கக்கும் உ.பி. எம்.பி.,

இது குறித்து உத்தரப்பிர தேச சமாஜ்வாடி நாடாளு மன்ற உறுப்பினர் ஆஜம் கான் கூறியதாவது: மோடி பிரதம ரானதில் இருந்து அவரது பரிவாரங்கள் மிகவும் உற் சாகமாக இருக்கின்றன. அவர்களின் உற்சாகம் அள வுக்கு மீறிச் சென்று கொண் டிருக்கிறது. மனிதர்களின் உயிரை எடுப்பதுதான் மோடி பரிவாரங்களின் முழு நேரவேலையாகப் போய்விட் டது. இந்துத்துவா அரசியல் என்பது இப்படி முஸ்லீம் மக்களின் உயிரை எடுத்துத் தான் நடத்தவேண்டும் என் பது முசாபர் நகர் கலவரத்தி லேயே தெரிந்து விட்டது. ஆனால் உங்கள் பரிவாரத் தின் இந்த அராஜகப் போக் கால் இந்தியாவின் நற்பெயர் உலக அளவில் களங்கமேற் பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் வடு இன்னும் ஆறவில்லை. உங்கள் பரிவாரத்திற்கு நீங் கள் தலைமை வகிக்கின்றீர் கள். அப்படி என்றால் இவர் களின் இந்த கொடூர வன் முறைக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்கவேண்டும். ஊரில் தனியாக உழைத்து முன்னேறி வாழ்ந்த ஒரு இஸ்லாமியனை இப்படி வன்மம் வைத்து அடித்துக் கொலை செய்வது நீதியா? மோடி அவர்களே, அடக்கி வையுங்கள்

குஜராத்தில் கொலைக ளைச் செய்த போதே அமை தியாக இருந்த உங்களுக்கு இது எல்லாம் பெரிதாகவே தெரியாது. ஆனால் இந்தியா போன்ற மாபெரும் குடியரசு நாட்டில் இது போன்ற செயல்கள் தற்போது தொடர்ந்து நடந்துவருவது மிகவும் அபாயகரமானது. உங்களின் பரிவாரங்களை அடக்கிவையுங்கள் என்று கூறினார். மேலும் 2017இல் நடை பெற இருக்கும் உத்தரப் பிர தேச தேர்தலுக்கு முன்பு பாஜக இதைவிடக் கொடூர மான செயல்களைச் செயல் படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை முகமது அக்லாக்கை இந்து அமைப்புகள் கொலை செய்த விவகாரம் தொடர் பாக பேசிய உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசும் போது, அக்லாக் கொலையா னது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும், கொலையான முகமது அக்லாக் குடும்பத்தி னரின் வீடு முற்றிலும் சேத மடைந்துள்ளது. அவர்க ளுக்கு முதல்வர் நிவாரண உதவியாக ரூ10 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். பலத்த காயத்துடன் மருத்துவமன யில் சேர்க்கப்பட்ட அவரது மகன் டானிஸின் அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை கள் எடுக்க உத்தரவிட்டுள் ளேன் என்றார்.

பாஜ.க. எம்.எல்.ஏ. ஆணவப் பேச்சு

உத்தரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான சிறீசந்த சர்மா என்பவர் கூறும் போது மக்களின் உணர்வு களை மதித்து நடக்கவேண் டும், ஊர் மக்கள் இந்துக்கள். இந்துக்கள் பசுவைத் தெய்வ மாக மதிப்பவர்கள், அவர் களுக்குப் பசுவைக் கொலை செய்து அதை சாப்பிடுவ தைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும், என்றார். அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகர் சிங் கூறியதாவது:

ஊரில் ஒருவர் மாட்டி றைச்சியைத் தின்பதைப் பார்த்துக் கொண்டு அமைதி யாக இருந்து அதற்காக காவல்துறையை எதிர்பார்ப் பது என்பது மக்களால் இய லாத காரியம், இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கும் போது காவல்துறை யால் என்ன செய்யமுடியும்? என்றார். ஊரில் பட்டறை வைத்து பிழைப்பு நடத்தும் முகமது அக்லாக் சமீபத்தில் விளைநிலமும் வாங்கியுள் ளார். மிகவும்  ஏழைக் குடும் பமாக இருந்த தனது குடும் பத்தை தனி மனிதனாக உழைத்து வீடுகட்டி, தற் போது நிலமும் வாங்கியுள் ளார். அவருடைய மகன் தற் போது விமானப் படையில் பொறியாயளராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி, மற்றும் 70 வயது தாயாரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு அங்குள்ள  கோவில் ஒன்றி லிருந்து முகமது அக்லாக் கையும் அவர்களது குடும்பத் தையும் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்யுங்கள் என்று அறி வித்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஊர் கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் விசா ரணை செய்து வருகின்றனர்.

இதற்கான விலையை விரைவில் இவர்கள் கொடுத்தே தீரவேண்டும்.


நன்றி : விடுதலை..

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...