(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, September 15, 2015

எங்கள் நிறுவனத்தின் மீதான குற்றசாட்டை நிரூபிக்க முடியுமா "Amma.com" சவால்.

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..

Nagore Lawyer என்ற முகநூல் கணக்கின் ஊடாக சகோதரர் ஒருவர் NAGORE WIFI (AMMA.COM ) நிறுவனத்தின் மீது பல குற்றசாட்டை சுமத்தியிருந்தார்.
அந்த குற்றசாட்டுகள் அனைத்தும் அபாயகரமானவை..

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தையும் அதாவது NAGORE WIFI சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் மொபைலும் , கணினியும் சேவை வழங்கும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். எந்த ஒரு DATAவையும் அவர்கள் திருடமுடியும். தவறாக பயன்படுத்த முடியும் என்ற குற்றசாட்டை முன்வைத்தமையால் அதை நம் தளத்தில் வெளியிட்டு சம்மந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அதன்படி அந்த நிறுவனம் கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளது. மேற்கண்ட விளக்கத்தில் , இந்த குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யென்றும் இது தொழில்போட்டி மற்றும் காழ்புணர்ச்சியினால் செய்யப்பட்ட பிரச்சாரம் என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்த குற்றசாட்டை நிரூபித்து காண்பிக்க குற்றம் சுமத்தியவர்களால் முடியுமா ? என்றும் அந்த நிறுவனம் சவால்விட்டுள்ளது.

குற்றம் சுமத்தியவர்கள் நிரூபிக்க முன்வருவார்களா .. 

பொறுத்திருந்து பார்போம்...
=========================

இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)
மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

எனவே பிறரின் மீது வீண்பழி சுமத்தி , ஒரு முஸ்லீமின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிப்பவர்களும்...

ஒரு முஸ்லிமின்  மானத்தோடு விளையாடுபவர்களும் அல்லாஹ்வை அஞ்சிகொள்ளட்டும்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...