(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, July 3, 2013

இன்று இவர்கள் - நாளை நாம் .. மரணத்திற்கு ஒவ்வொருவரும் ஆயத்தம் ஆக வேண்டும்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சகோதர சகோதரிகளே... 

நாள்தோறும் மரணசெய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது .. தூக்கத்தில் , பிரயாணத்தில் ,விபத்தில் , நோயில் என பல நிலைகளில் மரணம் ஒவ்வொரு மனிதனாக விழுங்கி கொண்டே வருகிறது ... நேற்று நம்மோடு இருந்தவர்கள் இன்று நிச்சியமாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது ... இன்று ஆட்டம்போடும் நாம் நாளை ,நாளை மறுநாள் இருப்போம் என்று அறுதியிட்டு கூற இயலாது .. இருப்போம் என்ற ஒற்றை நம்பிக்கையில் தான் காலம் கடந்து கொண்டு இருக்கிறது...



ஏதோ பிறந்தோம் , இறப்போம் என்பதெல்லாம் இறைமறுப்பாளர்கள் , இணைவைப்பாளர்கள் சொல்லி கொள்ளும் அர்த்தமற்ற வார்த்தைகள்.. நாம் அப்படியல்ல .. ஏன் பிறந்தோம் , எதற்காக படைக்கபட்டோம் , எப்படி வாழவேண்டும் , எப்படி மரணிக்க வேண்டும் , மரணித்த பிறகு நம்முடைய நிலை எப்படி இருக்கும் என்று உலகத்தின் அருட்கொடை நபி (ஸல்) அவர்களால் ஒவ்வொரு விஷயமும் விவரித்து வாழ்ந்து காண்பிக்கபட்ட சமூகம் நாம்...


நாம் மரணத்தை மிக அதிகம் அதிகம் நினைவுகூற வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ... உலக விஷயங்களில் , பொருளாதாரத்தை பெருக்குவதில் நாம் கொண்டுள்ள கவனம் - நாம் கொண்டுள்ள சத்தியமார்க்கத்தில் இல்லை இல்லவே இல்லை ... அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்...

இன்று முகநூலில் அடுத்தவரின் மரணச்செய்தியை படித்து கொண்டிருகிறோம் நாளை நம்முடைய மரணம் மற்றவர்களுக்கு செய்தியாக இருக்கலாம் -யாருக்கு தெரியும் ...
என்ன ஆரோக்கியமான உடலும் ,வயசும் இருந்தாலும் நம்முடைய தவனை வந்துவிட்டால் .. நாம் இறைவன் முன் நிறுத்தப்படுவோம்..

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் மரணத்திற்கு ஆயத்தம் ஆகவேண்டும் ...

சில தினங்களுக்கு முன்பு இரண்டு சகோதரிகள் , ஒரு சகோதார் கார் விபத்தில் மரணமடைந்தார்கள் ... அந்த அதிர்ச்சி முழுமையாக நீங்காத நிலையில்..




இன்று சகோதர் பஹுருதீன் அலி அஹ்மது அவர்கள் கத்தாரில் கார் விபத்தில் தீடீர் மரணம் அடைந்துவிட்டார்கள் ... அவருக்கு அல்லாஹ் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் மகத்தான கூலியை வழங்கி வெற்றி பெற செய்வானாக... அவருக்காக நாம் அனைவரும் கண்டிப்பாக துஆ செய்வோம்... அவரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை தருவானாக..

யா அல்லாஹ் எங்களை முஸ்லீம்களாக மரணிக்க செய்வாயாக ...
பரிபூரண ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை வழங்குவாயாக...
சொர்க்கத்தை எங்களுக்கு ஹலால் ஆக்குவாயாக ...

அல்லாஹு அக்பர் -

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...