(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, June 28, 2013

விபத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்திப்போம்..

பொறையாறு அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை டேங்கர் லாரி - கார் மோதிக் கொண்டதில் நாகூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் ஊர் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாகை மாவட்டம், நாகூர் தைக்கால் தெருவைச் சேர்ந்த செய்யது அகமது (52),இவரது மனைவி ஜுலைகான் நாச்சியார் (45), செய்யது அகமதுவின் சகோதரி ஜீனத் (42) ஆகியோர் சென்னையிலிருந்து காரில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை நாகூர் சமரசநகர் அப்துல் கபூர் மகன் யூசுப் (28) ஒட்டினார்.
பொறையாறு அருகே நண்டலாறு சோதனைச் சாவடிக்கு முன்பாக உள்ள மரவாடி அருகே வந்தபோது காரைக்காலிலிருந்து சீர்காழி நோக்கி வந்த டேங்கர் லாரி, கார் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.
இதில் காரில் இருந்த ஜுலைகான் நாச்சியார், ஜீனத், ஓட்டுநர் யூசுப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) பலத்த காயமடைந்த செய்யது அகமது பொறையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...சவூதியிலிருந்து வந்த ஜீனத்தை நாகூருக்கு செய்யது அகமது அழைத்து வந்தபோது இவ்விபத்து நேரிட்டது.

மூவரின் உடல் இன்று காலை நாகூருக்கு கொண்டு வரபட்டு மாலை 4:30மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கு மறுமை வாழ்வு வெற்றி பெற நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மனதைரியத்தை கொடுக்கவேண்டியும் நாம் பிரார்திப்போமாக...

விபத்தில் உருக்குலைந்த கார் :
அல்லாஹ் மரணித்த சகோதர சகோதரிகளின் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் வெற்றிபெற செய்வானாக....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...