நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிட்ட வேட்ப்பாளர் சகோ .ஷேக் தாவூத்க்கும் – அதிமுக வேட்ப்பாளர் ஜெயபாளுவிற்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து கடும் போட்டி நிலவியது.
நாகை தொகுதியில் வாக்களித்தவர்களின் நிலவரம் :
ஆண்கள் 57864
பெண்கள் 62424
மொத்தம் 120288 + தபால் ஓட்டுக்கள் 452 = 120738
வாக்கு சதவீதம் 79.24 %
இதில் ஜெயபால் 61870 வாக்குகளையும்
ஷேக் தாவூத் 56127 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் ஜெயபாலுவின் வெற்றியை உறுதி செய்தது துல்லியமாக 5743 வாக்குகளாகும்..
முதல் ஆறு சுற்றுவரை முன்னணியில் இருந்த ஷேக்தாவூத் பிறகு பின்தங்கி இறுதியில் சுமார் 5743 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது .
இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் 5000 வாக்குகள் என்ற வித்தியாசத்தில் தான் இருக்கும் என்றும், குறிப்பாக
சுமார் 40000/- திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட நாகை தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் முஸ்லீம்கள் கையில் தான் இருக்கிறது என்றும் முன்னர் கூறியிருந்தோம்.
அதை அப்படியே நாகை தொகுதியின் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது
சகோ. ஷேக் தாவூத்தை வீழ்த்திய 5000 வாக்குகளும். நம் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் தான் என்பது தெளிவாக தெரிகிறது.
முஸ்லீம்கள் வாக்குகள் ஜெயபாளுவிற்கு விழுந்தது தெளிவாக தெரிகிறது.
“நமக்கு ஆப்பு வைக்க வேற யாரும் வேணா நம்மாளுங்கலே போதும்”
ஜெயபால் வெற்றிபெற்றதற்கு மமக வினருக்கு தான் நாம் முதலில் வாழ்த்து சொல்லவேண்டும். அயராமல் ஜெயபால் வெற்றிக்காக உழைத்தார்கள். மமக தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.
சென்ற தேர்தலில் வெற்றிபெற்ற M.L.A மாரிமுத்து இருக்குற இடம் தெரியாமல் போனகதைத்தான் ஜெயபாளுவிற்க்கும்.. ஒரு வேலை நாகை தொகுதி MLA வை யாருக்கும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு முதலில் தமுமுக அலுவலகத்திற்கு சென்றால் அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறோம்.
என்ன தமுமுக –மமக தொண்டர்களே செய்வீர்களா..?
முதலில் நீங்கள் இனி அதிமுகவுடன் இருப்பதே சந்தேகமாசே ?
இப்போது அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கிறது
கூட்டணி ஆட்சியிலயே அம்மா பிறகட்சிகளை மதித்தது கிடையாது இப்ப தனி ஆட்சி வேற ... உங்க நிலைமையை பொறுத்திருந்து பார்போம்.
சகோ.ஷேக்தாவூத் அவர்களுக்கு சொல்லிகொள்கிறோம்..
நீங்கள் அரசியலில் இறங்கியதை பெரும்பாலான ஊர் மக்கள் விரும்பவில்லை . நீங்கள் அரசியலில் இறங்குவதாக எடுத்த முடிவு தவறான முடிவு.
உழைத்து தொழில் செய்து முன்னேறிய நீங்கள், மக்கள் பணத்தை பறித்து வயிருவலக்கும் அரசியல்வாதிகளின் குட்டையில் விழுந்தது துரதிஷ்டமானது.
கோடிகணக்கில் பணத்தை செலவழித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றபிறகு வட்டியும் –முதலுமாக கோடிகணக்கில் மக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். நீங்கள் அதற்குத்தான் தேர்தலுக்கு போனீர்களா ? கண்டிப்பாக இல்லை என்பது உங்களை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.
உங்களுக்கு தேர்தலில் சீட்டு கொடுத்ததுக்கு காரணம் உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தான். அதை கட்சி மேலிடம் உத்தரவுப்படி வாரி இறைத்துவிட்டீர்கள்.. நீங்கள் வாரி இறைத்த கோடிக்கணக்கான பணத்திற்கு எந்த புண்ணியத்தையும் நீங்கள் பெற முடியாது.
முஸ்லிம் ஒருவர் அதுவும் நம் ஊரை சார்ந்த சகோதர் என்ற காரணத்திற்காக உங்களுக்கு தேர்தலில் வாக்களித்தோம் வாக்களிக்க சொன்னோம். யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதைவிட உங்களுக்கு வாக்களிப்பது ஊருக்கு நல்லது என்பதற்காக தான்.
நீங்கள் வெற்றிபெற்று இருந்தால் எங்களுக்கு நல்லது தான்.
ஆனால் உங்களுக்கு அது நல்லதாக இருக்காது.
எங்களை பொருத்தவரை நீங்கள் தோற்றது ஒரு வகையில்....
இல்லை இல்லை பலவகையில் உங்களுக்கு நல்லது தான்.
அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடி இருக்கிறான் என்று நினையிங்கள்.
இனி நீங்கள் யாருக்கும் கை கூப்பி வணக்கம் சொல்ல தேவையில்லை.
இனி எந்த சிலைக்கும் மாலை போட தேவையில்லை..
இனி எந்த கட்சி தொண்டரின் மரணத்திற்கும் மலர்வளையம் வைக்க தேவையில்லை..
இனி எந்த கோவிலிலும் நின்று பரிவட்டம் கட்ட தேவையில்லை..
இனி எவனுக்கு பணத்தை இறைக்க தேவையில்லை..
இனி எவனது தவறையும் நியாயப்படுத்த, ஜால்ரா அடிக்க தேவையில்லை.
இதுதான் உங்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றியாக இருக்க முடியும்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால் – ஒருவேலை நீங்கள் வெற்றி பெற்று இருந்தாலும். நீங்கள் எதிர்கட்சி என்பதால் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது அல்லது செய்யவிடமாட்டார்கள். அந்த வகையில் தோல்வியை நன்மையை நாடி சகித்துகொள்ளலாம்.
அத்தோடு இந்த அரசியல் முகத்தை தூக்கிஎறிந்துவிட்டு உங்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்பதே நாகூர் வாழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்க முடியும்.இன்ஷாஅல்லாஹ்.
Dear Abdullah, The History always Repeats. Because of THOUHEED group our NIzamudeen got low vote, when he was stand second time. Our own people never listen,appreciate because we are all following Allah!!!. Example you asking in this blog.we need UNITED JAMAATH to our Village?or not?. From this we can understand our people's mentality. OUR PEOPLE SHOULD UNDERSTAND THE REAL LIFE. WE PRAY to THE ALMIGHTY TO GIVE HIDHAYATH TO OUR PEOPLE.
ReplyDeleteDisturbed.
ஷைக் தாவுத் மாமா சிலவு செய்த இந்த கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பங்கை கோயம்புத்தூர் கலவரத்தில் சிக்கி, குழந்தைகளை, குடும்பத்தை பிரிந்து, தங்களுடைய இளமை வாழ்கையை சிறையில் கழித்து கொண்டு இருக்கும் எனதருமை சகோதரர்களுக்கு, அவர்களுடைய உச்ச நீதி மன்ற முறையீட்டு செலவுகளுக்கு கொடுத்து இருந்தால் ... எத்தனை குடும்பம் மனதார வாழ்த்தி இருக்கும் ... சுப்ஹனல்லாஹ் !!!
ReplyDeleteஹ்ம்ம்ம் .... அல்லாஹு தா'லா மிகப்பெரியவன் ...
"இப்போது அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கிறது கூட்டணி ஆட்சியிலயே அம்மா பிறகட்சிகளை மதித்தது கிடையாது இப்ப தனி ஆட்சி வேற ..." என்று சொல்லியிருக்கும் நண்பரே! இதுவரை அ.தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் தனி ஆட்சி அமைத்திருக்கிறதேயொழிய கூட்டணியாட்சி அமைத்தது கிடையாது.
ReplyDelete