சுமார் பத்து வருடங்கள் இடைவிடாமல் ஒசாமாவை சல்லடை போட்டு தேடிவந்த அமெரிக்கா இன்று ஒசாமாவை சுட்டு வீல்த்திவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உண்மையில் தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கமுடியாது மரணபடுக்கையில் இருந்த ஒசாமா என்ற நோயாளியை தான் அமெரிக்கா வீழ்த்தி இருக்கமுடியும்.
இது அமெரிக்கா செத்தபாம்பை அடித்ததற்கு சமம் ....!!!
இதை தான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.
ஒசாமா கொல்லப்பட்டு விட்டார் என்று தெரிந்ததும் மீடியாக்கள் அவசர கோலத்தில் இலவசமா கிடைக்கிறதே என்று சுடப்பட்ட ஒசாமாவின் போட்டோ இது தான் என்று ஆளாளுக்கு வெளியிட சற்று நேரத்தில் மீடியாக்களின் சாயம் வெளுத்தது. அது சித்தரிக்கப்பட்ட போட்டோ என்பது சிறுபிள்ளை பார்த்தாலும் சொல்லிவிடும். போட்டோவிஷயத்தில் மீடியாக்கள் ஜகாவாங்கியது.
இது ஒன்றே சாட்சி மீடியாக்கள் எந்த லட்சணத்தில் செய்திகளை உறுதிசெய்கிறது என்பதற்கு.
இது இப்படியிருக்க அமெரிக்கா நடந்த தாக்குதல் சம்பவத்தை விவரிக்கும் போது.......
“நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.
மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். “இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.” இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார் என்று கூறியுள்ளது அமெரிக்கா.

ஒசாமா நேரடியாக தாக்குதலில் மோதினார் என்பது அமெரிக்காவின் நம்பர் ஒன் அண்டப்புளுகு....
“ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது என்று ஒசாமாவை கண்டுபிடித்த விதம் பற்றி அமெரிக்கா ஒருபுறம் சொல்லிக்கொண்டு..."
மறுபுறம் ஒசாமா நேரடியாக தாக்குதலில் இறங்கினார் என்று கூறுவது சிறுபிள்ளை தனத்தின் உச்சம்.
எதிர்த்து போர் புரியும் அளவிற்கு உடல்தாக்கத்துடன் இருந்த சதாம் ஹுசைனையே உயிரோடு பிடிக்க முடிந்த அமெரிக்காவிற்கு , உடல் உபாதைகளால் மரணப்படுக்கையில் இருக்கும் ஒசாமாவை உயிருடன் பிடிக்க முடியவில்லையா ?
மேலும் அமெரிக்கா கூறுகையில்..
“40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.
இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன.
இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன.
தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன. இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.”
இங்கே கேள்வி என்ன வென்றால் தொழில்நுட்ப கோளாறு என்றால்
ஹெலிகாப்டரை விட்டு விட்டு செல்லலாம் சரி ஆனால் அதை அழிக்க வேண்டிய அவசியம் என்ன ? தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அழித்துவிட வேண்டுமா ?
பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக என்பது அர்த்தமற்றது.
சும்மா இருகிறத குண்டுவீசி தாக்குவது தான் பாதுகாப்பா ?
ஆபரேஷன் வெற்றி-மேட்டர் ஓவர் பிறகு உளவு பார்பதற்கு அதுவும் அந்த தொழில்நுட்ப கோளாறில் இருக்கும் ஹெலிகாப்டரில் என்ன இருக்கு, அமெரிக்க அறிவு ஜீவிகளா...?
ஒருவேளை அந்த ஹெலிகாப்டரில் ஒசாமாவை வைத்து குண்டு வீசி தாக்கி தங்களின் வெறியை தீர்த்து கொண்டார்களா அமெரிக்க படைகள்.? இறைவனுக்கே வெளிச்சம்.
இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....
ஆனால் அமெரிக்கா சொன்னது உண்மைதானா ? சுட்டு கொண்டது ஒசாமா தானா என்பதை உலக மக்கள் உறுதி செய்ய முடியாதவாறு காரியத்தை முடித்துள்ளது அமெரிக்கா.
முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.
இஸ்லாமிய முறைப்படி??? அவரது உடல் கையாளப்பட்டதாகவும், உடல் அடக்கம் நடந்ததாகவும். அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் விளக்கம் தரவில்லை... கடலில் எந்த இடத்தில் உடல் வீசப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இதனால் உடல் உண்மையிலேயே கடலில் தான் வீசப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொருத்தவரை ஒசாமா உலக மகா பயங்கரவாதி அவரை பிடித்து உலக மக்களின் முன்பு தூக்கில் போட்டு இருக்கலாமே அமெரிக்க வழிமுறை படி ? சரி குறைந்தபட்சம் சுட்டு கொன்ற ஒசாமா உடலை உலக மீடியாக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கலாமே அதன் பிறகு கடலில் வீசி இருக்கலாமே ...
ஆஸ்திரேலிய மனித உரிமைக் கழக உயர் வழக்கறிஞர் ஜாஃப்ரி ராபெர்ட்சன் கூறுகையில்,"அநீதி மட்டுமின்றி நீதியை மறுக்கும் செயலாகும். நீதி என்பது சட்டத்தின் முன்பாக நிறுத்தி, குற்றங்களை நிரூபித்து, ஆதாரங்களின் அடிப்படையில் தண்டிப்பதாகும். சுருக்கமாக, இது சர்வதே சட்டங்களைமீறியச் செயல்" என்று சாடியுள்ளார்.
"இறந்தவரைப் புதைப்பது என்பது இஸ்லாமியர்களைப் பொருத்தவரை மார்க்கக்கடமை. அசாதாரண சூழல்களில் மட்டுமே மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆனால்,பின்லாடன் கொலையில் அப்படி எதுவும் அசாதாரண சூழல் நிலவியதாகத் தெரியவில்லை. தனது செயலுக்கு அமெரிக்கா உரிய காரணத்தை விளக்கவில்லையே அது மனித உயிர்களை விலங்குகளைப்போன்றே கருதுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது" என்று இந்தோனேசிய உலமா கவுன்ஸில் உறுப்பினர் அமிதான் தெரிவித்தார்

ஏன் இப்படி என்று சாதாரணாமாக எல்லோரிடத்தும் இக்கேள்வி எழுகிறது ? அதற்கு அமெரிக்கா சொல்லும் காரணம் ஒசாமா உடலை நிலத்தில் புதைத்தால் அது தீவிரவாதிகளின் நினைவு சின்னமாகிவிடுமாம். எப்படியேயெல்லாம் யோசிக்கிரானுங்க பாருங்க.
உண்மையில் உடலை கடலில் வீசியதற்கு அதுவல்ல விஷயம் உடலை புதைத்தால் பயபுள்ளைங்க நம்மாளுங்க தோண்டி பார்த்து அமெரிக்க முகமூடியை கிழித்து விடுவார்கள் என்ற பயமே.
ஒசாமா சுட்டுகொலை என்ற அமெரிக்காவின் அறிக்கையில் வழக்கம்போல் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருக்கிறது. பொய்யை மீண்டும் மீண்டும் உறக்க சொல்லும் போது அது உண்மையாகிவிடும் என்ற உக்தியை கையாள்வதில் அமெரிக்காவிற்கு நிகர் அமெரிக்காவே.
அமெரிக்க அரசும், மீடியாக்களும் செய்த ஏமாற்று வித்தைக்கு முஸ்லீம்கள் கூட பலியாகவிட்டது தான் அமெரிக்காவின் ஹிமாலய வெற்றி.
பல முஸ்லீம்கள் ஒசாமா பின்லேடன் தான் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தை இடித்தது என்று இன்னமும் நினைகிறார்கள்.ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக அமெரிக்கா ஒரு மெகா பொய்யை சொல்லி உலகமக்களின் உள்ளத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் ஒசாமாதான் இடித்தார் என்ற சிந்தனையை விதைத்து அருவடையையும் செய்து வருகிறது.
ஆனால் உண்மை உறங்காது என்ற ரீதியில் வீடியோ ஆவணங்கள், ஆதாரங்கள் தினம் தினம் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆதாரங்களை எடுத்துகொண்டு கேள்வி கேட்பது முஸ்லீம்கள் அல்ல. அமெரிக்க வாழ் மக்கள் தான் ...
கேள்வி கேள்வியாகவே இருக்கிறது பதில் மொவ்னமாகவே இருக்கிறது ..
உங்களுக்கு தெரியுமா இந்த வினாக்களுக்கான பதில் ?
Who Did 9/11 - OBL, Bush Or Mossad? The Evidences
இதை கிளிக் செய்து படியுங்கள்ஒபாமாவிற்கு கிடைத்த வாய்ப்பு :
எது எப்படியோ ஒசாமாவின் மரணம் – ஒபாமாக்கு ஜனனம்.
ஒபாமா நிர்வாகத்திற்கு பின்லேடன் மரணம் பெரும் பூஸ்டராக வந்து அமைந்துள்ளது. ஒபாமா அரசு மீது இருந்த அதிருப்திகளை அப்படியே இது துடைத்துப் போட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.
பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் மாட்டி்யிருந்த அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி இருந்து வந்தது. தற்போது அத்தனையையும் அமெரிக்கர்கள் மறக்கடிக்கும் வகையில் பின்லேடனின் மரணச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி விட்டன. மேலும் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸும், சிபிஎஸ்ஸும் இணைந்து எடுத்த சர்வேயில் ஒபாமாவுக்கு 46 சதவீத ஆதரவே கிடைத்தது. தற்போது இது கிடுகிடுவென உயரும் ஒபாமா நினைத்ததுபோல்.
.
குறிப்பு : இஸ்லாத்தை பொருத்தவரை தீவிரவாதம் , பயங்கரவாதம் போன்றவைகளை அடியோடு மறுக்கிறது ,எதிர்க்கிறது. அமைதியை நிலைநாட்ட சொல்கிறது ஆனால் துரதிஷ்ட விஷயமாக முஸ்லீம்கள் இன்று தீவிரவாதியாக சித்தரிக்கபட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையிலையே ஒரு முஸ்லிம் தீவிரவாத விஷயத்தில் ஈடுபட்டால் அவர் முஸ்லிம் என்ற அந்தஸ்தில் இருந்து விலகி சென்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
இதே அளவுகொள் தான் ஒசாமாவிற்கும் அவர் அநியாயமாக அப்பாவி மக்களின் உயிர்களில் விளையாடி இருந்தால்.. அவர் உலக மக்கள் சமூகத்தையே கொலை செய்த பாவத்திற்கு நிகராகும். எதை சொல்லியும் அவர் செய்ததை நியாபடுத்த முடியாது அவர் முஸ்லிம் என்பதால் அவர் செய்தது நியாயம் ஆகாது அதே சமயம் பச்சை பொய்களை சொல்லி பிழைப்பு நடத்தும் உலக மீடியாக்களின் செய்திகளை முழுமையாக நம்பி நாம் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை..
இறுதிதீர்ப்பு இறைவனிடத்தில் தான்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
பொய்களை பொறுக்கி அள்ளி ...
உண்மையை அறிய முயல்வோம்...
அசத்தியம் அழிந்தே தீரும்..!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன