(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, April 23, 2011

சென்னையில் டிராபிக் நெரிசலைக் குறைக்க வேண்டுமா ? -நான் சவால் விடுகிறேன்

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆர்வமுடன் களமிறங்கியுள்ள சாகுல் ஹமீது: சென்னை சாலைகளில், 13 ஆண்டுகளாக பழச்சாறு வியாபாரம் செய்கிறேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இங்குள்ள அனைத்து சாலைகளும் எனக்கு அத்துப்படி.




ஒவ்வொரு சிக்னல்களிலும், மணிக்கணக்கில் ஆய்வு செய்திருக்கிறேன். சென்னை போக்குவரத்தை சீராக்க, ஆயிரக்கணக்கான வரைபடங்கள் தயாரித்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஜெராக்சிற்கே செலவு செய்துள்ளேன்.

சொந்தப் பணத்தில், பாங்காங், மலேசியா, சிங்கப்பூர் சென்று, அங்குள்ள போக்குவரத்து விதிகளை ஆய்வு செய்துட்டு வந்தேன். நான் ஒரே ஆளாக இத்தனை வருடம் செய்த விஷயங்களைப் பற்றி, விசாரிக்கக் கூட இங்கு ஆள் இல்லை. நான் டிராக்பிக் போலீசாரை குறை சொல்லவில்லை. அவர்களை நெறிப்படுத்திக்க, அவர்களிடம் எந்த ஐடியாவும் இல்லை.

என்னிடம் நிறைய ஐடியாக்கள் உள்ளன; ஆனால், கேட்கத் தான் ஆள் இல்லை. தேவையற்ற சிக்னல்கள், 35 சதவீத சாலைகளை, ஒரு வழிப்பாதையாக மாற்றியது, மாநகர பஸ் ஓட்டுனர்களின் ஒழுங்கீனம் ஆகியவை தான், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணங்கள். 
நான் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, என் யோசனைகளைக் கேட்க போலீஸ் மறுக்கிறது.

இதற்காக, ஐகோர்ட் படியேறினேன். என் யோசனைகளைக் கேட்க வேண்டும் என உத்தரவு வந்து, ஒரு வருடமாகிறது. இன்னும் என் யோசனைகளைக் யாரும் கேட்கவில்லை.

நான் சவால் விடுகிறேன்... சென்னையில், எந்த இடத்தில் டிராபிக் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றாலும், நான் குறைத்துவிடுவேன். 10 நிமிடத்தில், 50 சதவீத நெரிசலைக் குறைப்பேன். அண்ணா மேம்பாலத்தில், வண்டியே நிற்காத அளவுக்கு செய்து காட்டுகிறேன். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், என் யோசனைகளை அங்கீகரித்தால்... இது சாத்தியம்!...



சந்தர்ப்பம் தருவார்களா ? போக்குவரத்து  காவல்துறை....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...