தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று 13/04/11 நடந்தது.
நமது பகுதியில் பரவலாக எல்லோரிடத்திலும் வாக்களிக்கும் ஆர்வம் இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது.
நாகூரில் 80% வாக்குகளும்,மொத்த நாகை தொகுதியில் 82% வாக்குகளும் பதிவானதாக தகவல்கள் தெரிவிகின்றன.பலர் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குசாவடிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்த கூடாது , வாக்குசாவடிக்கு உள்ளே மொபைல் பயன்படுத்த கூடாது என்பன போன்ற பல கட்டுபாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து இருந்தது.
நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.சகோ. ஷேக்தாவூத் நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
இந்நிலையில் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் என்ன தான் முயற்சி செய்தும் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க முடியவில்லை.. இதுவரை நடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் நமதூரில் ஓட்டுக்கு பணம் வழங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
நேற்று பரவலாக நமதூரில் பல இடத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கியதாக தெரிகிறது. பணம் சரியாக பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும், பணம் வழங்குபவர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கியதாகவும் பலர் குறைபட்டு கொண்டனர்.
இதில் சிலர் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை ஆதலால் நாங்கள் ஒட்டுபோடவில்லை என்றும் கூறிக்கொண்டு இருந்தனர் வேடிக்கையாக...
ஆக ஒருவழியாக தேர்தல் முடிந்தது. அடுத்தமாதம் 13ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.அதுவரை காத்திருக்க வேண்டும்.. நமக்கு பிரச்சனையில்லை ஆனால் ஒட்டுமொத்த கட்சி வேட்பாளர்களுக்கும் முடிவு தெரியும் வரை தூக்கம்வராது.
நமது தொகுதியை பொருத்தவரை வெற்றி யாருக்கு என்று உறுதியாக கூறமுடியாத நிலைதான். ஆனாலும் இன்ஷால்லாஹ் சகோ. ஷேக்தாவூத் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பொறுத்திருந்து பார்போம்.
தமுமுக - மமக சகோதர்கள் இந்த தேர்தலில் சகோ. ஷேக் தாவூத்வை தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஜெயபாலுடன் கைகோர்த்து செயல்பட்டனர். வாழ்த்துக்கள் சகோதர்களே..
ஷேக்தாவூத் வெற்றிபெற்றால் ஊருக்கும் ,உங்களுக்கும் நல்லது..
ஜெயபால் வெற்றிபெற்றால் உங்களுக்கும் நல்லதல்ல, ஊருக்கும் நல்லதல்ல..
மொத்தத்தில் அவர் வெற்றி பெற்றால் கொல்லம்பள்ளிக்கும் நல்லதல்ல என்பது கௌதியா சங்கம் - கொல்லம் பள்ளி டிரஸ்ட் பிரச்னையை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்.
ReplyDelete/// அவர் வெற்றி பெற்றால் கொல்லம்பள்ளிக்கும் நல்லதல்ல /// என்னங்க இது ... இதெல்லாம் ஒரு வாதமா... நம்மடவன் ஒருத்தனும் முன்னேற முடியாது இப்படிலாம் பார்த்தா...
ReplyDeleteநீங்க சொல்றத பார்த்த சகோ.ஷேக் தாவூத் தொற்றுபோவது தான் நல்லது .. மனுஷன் நிம்மதியா இருப்பாரு.. நாம் ஊரு மக்கள் கேட்கும் கேள்விக்கு அவர் சும்மா இருக்குறதே நல்லது போங்க..