(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, April 24, 2011

மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு...!!!



சவூதி அரேபியா:  மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள்  செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ்  அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது 


எனினும் இவ்விடங்களில் சுரங்கத் தொழிலை மேற்கொள்ள அரசு தரப்பு மேலதிக அனுமதியைத் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேய்ச்சல் நிலங்கள், மக்கள் வாழிடங்கள் என்று இப்பகுதி அமைந்துள்ளதே அதற்குக் காரணம் என்றும் அப்பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. 

சவூதி அரேபியாவில் தற்சமயம் மூன்று தங்கச் சுரங்கங்கள் செயற்படுகின்றன. அவற்றுள் அல் மஹத் அல் தப்பாப், அல் ஷுகைராத் ஆகியன மதீனாவில் அமைந்தவை என்பதும், அல் அமர் (அல் குவாவியா) என்பது ரியாத் பிராந்தியத்தில் அமைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இந்த மனித சமுதாயத்திற்கு அருட்கொடையாக கொடுத்தான் அதே போல்  அவர்கள் வாழ்ந்த பூமிக்கும் தனது அருளை வாரி இரைத்திருகிறான்... அல்லாஹுஅக்பர்.


 எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே...!
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

source : inneram.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...