(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, December 13, 2010

ஆஷுரா நோன்பு

"நபி (ஸல்) அவர்கள் மதினா வந்த போது யூதர்கள் ஆஷுரா நோன்பு நோர்ப்பதைக்கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள். இது மூசா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றிய நாள். கொடியவன் பிர் அவுன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாள். அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நோன்பு நோற்கிறோம், என்று பதிலளித்தார்கள்.

(உங்களை விட) நான் மூஸாவுக்கு அதிகம் நெருக்கமானவன், என்று கூறி விட்டு, அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும் படி கட்டளையிட்டார்கள்.""

நூல் : புஹாரி

(மற்றொரு அறிவிப்பில், ஆஷுரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம், விரும்பியவர்கள் விட்டு விடலாம், என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இது சுன்னத் தான். கட்டாயம் இல்லை என்பதை அறியலாம்)ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தது முஹர்ரம் பத்தாம் நாளில் என்றாலும், ஒரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு வைத்து யூதர்களுக்கு மாறு செய்வேன், என்று கூறியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் இரு தினங்களுமே சுன்னத்தான நோன்பை வைப்பதற்கான நாள் தான் என்பதை அறியலாம்.

ஆதாரம் : புஹாரி 1917

ஆஷுரா நோன்பு வைப்பது கடந்த ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 
நூல் : முஸ்லிம் 1977

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...