(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, December 13, 2010

இந்திய இறையாண்மைக்கு எதிரான பள்ளிகள்

நாடுமுழுவதும் ஆங்காங்கே இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகள், சரஸ்வதி சிசு மந்திர் மற்றும் வித்யா பாரதி போன்ற பள்ளிகளை நடத்தி வருகின்றன. இவைகளைப் பற்றி முன்பு நான் அதிகமாகக் கவனம் செலுத்தியதில்லை. துவக்கத்தில் நுற்றுக்கணக்கில் இந்தப் பள்ளிகளில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரக் கணக்கிற்கு உயர்ந்துவிட்டன. இங்கே பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூட இலட்சக் கணக்கில் வளர்ந்து விட்டன.

அவர்களுக்கு வேண்டிய பாடத்திட்டங்களை அந்த அமைப்புக்களே தயாரித்துக் கொள்கின்றன. நமது நாட்டில் பள்ளிகளின் தேவைகளையும் பாடப் புத்தகங்களையும் அவர்களே அச்சிட்டுக் கொடுக்கிறார்களே என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆயினும் அந்த மகிழ்ச்சி என்னிடம் நீடிக்கவில்லை.

ஏனெனில், அந்தப் பள்ளிகளையும் அங்கு நடத்தப்படும் பாடத் திட்டங்களையும் நேரில் கண்டுபிடித்தபோது அதிர்ச்சி மட்டுமல்ல, பெரும் வேதனையும் அடைந்தேன். நமது கடந்த கால வரலாற்றையும் கலாச்சாரத்தையும் திரித்து எழுதியும் குறிப்பாக முஸ்-ம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது துவேசத்தையும் வெறுப்பையும் விரோதத்தையும் ஊட்டும் வகையிலும் அந்தப் பாடத்திட்டங்கள் அமைந்திருந்ததைக் கண்டதும்தான் என் மனம் நிலைகுலையும்படி ஆகிவிட்டது.


அங்கு நடத்தப்படும் பாடங்களின் தொடக்கமே பாரத்வர்சாவை அதாவது ஆரியத்தை, பச்சையாகச் சொன்னால் பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நம் நாட்டின் தென் பகுதியில் ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்தியாவில் பூர்வீகக் குடிமக்களாக திராவிடர்கள்தான் இருந்துள்ளனர் என்ற வரலாற்று உண்மை அங்கே மறைக்கப்பட்டிருந்தது. மேலும் யூதர்கள் மற்றும் ஜிப்சிகளை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரைத் தங்களுடைய ஆதர்ச தலைவனாகச் சித்தரித்திருக்கிறார்கள். ஆரிய ஜெர்மனியில் பிற இனத்தவர்கள் இருக்கக் கூடாது என்று உயிரோடு அழித்த கொடுங்கோல் பேய்தான் ஹிட்லர் என்றும் அவரைப் பற்றிப் பேசுவதே வெட்கக்கேடானது என்றும் தற்காலத்தில் வரலாறும் மக்களும் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனையைச் சேர்ந்தவர்கள் ஹிட்லரைத் தங்களின் தலைவராக எண்ணி வழிபாடு நடத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.அதுமட்டுமல்ல; புத்த மதத்தை மிகப் பெரிய அளவில் பரப்பியவரான பேரரசர் அசோகர் போதித்த அஹிம்சைக் கொள்கைகளை எல்லாம் கோழைத்தனமான செயல்கள்; முஸ்-ம்களை இராணுவத்தில் சேர்க்கக் கூடாது; ஏனெனில் அவர்கள் ஒரு கையில் கத்தியையும் மற்றொரு கையில் குர்ஆனையும் ஏந்துபவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கே.பி.ஹெட்கேவர் கூறிய வாசகங்கள் அந்தப் பாடப் புத்தகங்களில் இருந்ததைக் கண்டபோது ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் பிஞ்சு மாணவர்களை எப்படி எல்லாம் மூளைச் சலவை செய்து வரலாற்றையே மாற்றுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.


அந்தப் பாடங்களில் காணப்படும் விஷமத்தனமான விஷயங்களில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம். மக்காவில் கருங்கல்லால் செய்து நிறுவப்பட்ட சிவ-ங்கத்தை முஸ்-ம்கள் பெரிதும் போற்றி வழிபடுகிறார்கள் என்றும் டெல்-யில் உள்ள குதுப் மினாரை பேரரசர் சமுத்திரகுப்தர் கட்டி, பின்னர் அது விஷ்ணு ஸ்டம்பர் என்று அழைக்கப்படலாயிற்று என்றும் தாறுமாறான வரலாற்றுப் புரட்டல்களைப் புகுத்தியுள்ளனர். (இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குர்ஆனில் ஒரு சொல்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)


மேலும் பாபரி மஸ்ஜித் எப்போதுமே மசூதியாகக் கருதப்படவில்லை; ஏனெனில் அங்கே தொழுகை நடத்தப்படவே இல்லை (பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் உள்ள புகைப்படத்தில் மூன்று உயர் கோபுரங்களும் சுவர்களும் மெக்காவை நோக்கி இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.) 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவரான கே.எஸ். சுதர்சன் வெளியிட்ட அறிக்கையில் பிரபல வரலாற்று அறிஞர்களை எல்லாம் இந்துக்களின் விரோதி என்றும் அவர்கள் ஐரோப்பிய – இந்தியர்கள் என்றும் சொல்- அவர்களை எல்லாம் இழிவுபடுத்தினார்.

பழங்கால இந்தியாவில் இருந்த நம்முடைய இந்து மதத்தின் முன்னோர்கள் அணுசக்தி குறித்து நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் பரத்வாஜா மற்றும் ராஜா போன்ற முனிவர்கள் விமானங்களை கட்டுமானம் செய்வது பற்றி விளக்கியதோடு நில்லாமல் எந்த விதமான விமானம் எந்த அளவு உயரத்தில் பறக்கும் என்றும் விவரித்திருக்கிறார்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கதை அளந்திருக்கிறார். இவர் சொல்வதைப் பற்றி நாம் ஆச்சர்யப்படத் தேவையில்லை.


ஆனால், ஏ.பி. வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த முரளி மனோகர் ஜோஷி இதனை ஆதரித்ததுதான் ஆச்சரியம்! மேலும் சோதிடக் கலையைப் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்றும் ஜோஷி கூறினார். அவரைப் பொறுத்த வரையில் சோதிடம் வென்றுவிட்டது. ஆம்! அவரது எம்.பி., பதவியை அவரிடமிருந்து பறித்து மக்களிடம் இருந்த செல்வாக்கை இழக்கச் செய்துவிட்டது.


இப்படிப்பட்ட பள்ளிகளில் வரலாற்றையே திரித்தும் மறைத்தும் மாணவர்களிடம் போதிக்கும் செயலானது காந்தியக் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும். அதே நேரம் சாவர்க்கர் போன்றோரைத் தாங்கிப் பிடிக்கும் செயலுமாகும். மகாத்மா காந்தியைக் கொலை செய்ததில் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்து பின்னணியில் இருந்து செயல்பட்டவர்தான் இந்த சாவர்க்கர் என்பதை நீதிபதி கபூர் கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு குற்றவாளியின் உருவப் படத்தை பி.ஜே.பி. அரசு தனது

ஆட்சியின் போது நாடாளுமன்ற மண்டபத்தில் திறந்து வைத்தது. என்னை ஆர்.எஸ்.எஸ்.க்கும் பி.ஜே.பி.க்கும் எதிரானவன் என்று குற்றம் சாட்டுவதற்கு முன்னால் கீழே குறிப்பிடப்படும் ஒரு சிறிய புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

“ஆர்.எஸ்.எஸ்., பள்ளிப் பாடம் மற்றும் மகாத்மா காந்தி கொலை” என்ற தலைப்பில் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆதித்யா முகர்ஜி, மிருதுளா முகர்ஜி மற்றும் சுசீதா மஹாஜன் ஆகியோர் எழுதியுள்ள அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் எல்லாம் அவர்களுடைய உண்மையான உணர்வுகளை நிரூபிக்கின்றன. இவ்வளவுக்கும் அந்தப் புத்தகம் 80 பக்கங்கள்தான்.


இறுதியாக, உங்களைக் கேட்கிறேன். இளம் பிஞ்சுகளின் இதயங்களில் வெறுப்பையும் துவேசத்தையும் ஏற்படுத்தி மூளைச் சலவை செய்துவருவது இந்த நாட்டு நலனுக்கு நல்லதா? சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழலாம் என்று நாம் கண்டுவரும் இனிய கனவை திசை திருப்பிவிடாதா? ஆர்.எஸ்.எஸ். மதாஹியர்களின் கல்வி நிறுவனங்கள் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கலாமா?

(ஆதாரம்: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், நவ.7, 2008)

தமிழில்: அறந்தை அழகர்.
நன்றி : http://www.samooganeethi.org/?p=572

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...