சில வாரங்களுக்கு முன்பு , தேனீ மாவட்டம் -தேவ நாயக்கன் பட்டி என்னும் ஊரில் ஒரு பள்ளியில் வட்டியை பற்றி பயான் செய்து இருக்கிறார் அந்த பள்ளியின் இமாம் , அவளவு தான் நீ எப்படி வட்டியை பற்றி பேசலாம் ( அதுல தானே எங்க பொழப்பு ஓடுது ) என்று அந்த இமாமை கொலை செய்யாத குறையாக அந்த ஊர் மக்களே அடித்து துவசம் செய்து விட்டார்களாம் ..
இது உலாமாக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் , அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாம் .இதனால் அந்த மாவட்ட உலமாக்கள் ஒன்று கூடி இனி அந்த ஊருக்கு எந்த உலமாக்களும் இமாமாக போக கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார்களாம்.ஆனால் இதையும் மீறி வறுமையால் சில இமாம்கள் அங்கு செல்கிறார்கள் என்று வருத்தபடுகிறார்கள் உலமாக்கள் .
( கண்டிப்பாக மீண்டு சத்தியமார்க்கம் அங்கே சொல்ல பட போவதில்லை)
இந்த செய்தியை நமதூரின் பள்ளிவாசல் இமாம் ஒருவர் சொல்லி வருத்தபட்டுள்ளார்..
என்ன கொடும இது , உண்மைய சொன்ன அடிக்கிறார்கள் , எதையும் சொல்வதற்கே பயமா இருக்கிறது என்று தனது தனிப்பட்ட குறையையும் சேர்த்து சொல்லி வேதனைபட்டாராம்.
பொதுவாக பள்ளி வாசலில் என்ன பயான் , என்ன தலைப்பு என்று முடிவு செய்வது - நிர்வாகிகள் தான் இமாமுக்கு முழு அதிகாரம் கிடையாது என்பது வேதனைக்கு உரிய செய்தி மேலும் பெரும்பாலான பள்ளிகளில் இமாமை நியமிக்கும் முன்பே - சில கட்டளைகள் பிறப்பிக்கபட்டு (வட்டி , வரதட்சனை , தர்கா பற்றி எதிராக பேசகூடாது)அதெற்கு உடன் பட்டால் இங்கே இருங்கள் என்கிறார்கள் .
இமாம்களை பொறுத்தவரை அவர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது - அவர்கள் ஊர் மக்களை வழிநடத்தகூடியவர்கள் அதலால் சத்தியத்தை அவர்கள் துணிந்து அல்லாஹ்விற்காக சொல்லவேண்டும் , எங்கே சத்தியம் சொல்லப்படுகிறதோ அங்கே எதிர்ப்பு வரும் , அடி விழும் இது தான் அவர்கள் சொல்வது சத்தியம் என்பதற்கு ஒரு சான்று . ஆகையால் சத்தியமார்க்கத்தை அதன் தூய வடிவில் சொல்ல அனைவரும் தலை பட வேண்டும்.
இந்த தேவ நாயகன் பட்டியில் மீண்டும் வட்டியின் கேடுகளை சொல்லியே ஆகவேண்டும் , அதற்க்கு இந்த உலமாக்கள் தயார் ஆகவேண்டும் ..
அவர்கள் அடித்தால் சத்தியத்தை மறைத்து கொள்வதா ? அல்லாஹ்வின் தூதரையே கல்லால் அடித்து துரத்திய உலகமிது , தியாகத்தில் வளர்ந்த மார்கமிது.. இனியும் சத்தியத்தை விட்டுகொடுப்பதர்க்கு இடமில்லை ..
உலமாக்கள் அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் நிச்சயாமாக இதற்க்கு இமாம்கள் பொறுப்பாளியாக இருக்கிறார்கள்.
(செய்தியை மின்னஜ்சலில் அனுப்பி தெரியபடுத்திய சகோதரருக்கு நன்றி )
NAGOREFLASH
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Friday, February 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன