பொதுவா தராவிஹ் எட்டா – இருபதா என்று தான் பேசுவீங்க ...
இப்ப என்ன புதுசா இருபதா ? – இருபத்தி இரண்டா ? னு..
இது புது குரூப்பா என்று பயந்து விடாதீர்கள் ..சகோதர்களே
நாங்க சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிகொள்ளும் சகோதரர்களிடம் நாம் கேட்க்கும்
சந்கேகம் இது..
வஹாபி பயலுவோ நீங்க தௌஹீத் என்ற பெயரில் என்னத்த சொன்னாலும் அத படிக்க
மாட்டோம் , கேட்க்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துகொண்டவர்கள்.. தயவு செய்து
உங்கள் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் வேலையை தொடரலாம்...
இருப்பினும் சரி நீ என்ன தான் சொல்ற சொல்லு பாக்கலாம் என்று தொடரும்
நண்பர்களுக்காக இப்பதிவு...
உண்மையை சொல்லனும்னா... ஒரு பெரிய சந்தேகம் எங்களுக்கு ..
அதாவது இரவுத்தொழுகையை (தராவிஹ்) பொருத்தவரை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)
அவர்கள்
8 ரகாயத்தும் + வித்ரு 3 ரகாயத்தும், சில நேரங்களில் வித்ரு 9,7,5 அல்லது 1 ரகயாத்தும் தொழுதுள்ளார்கள்.
என்று ஆதாரத்தோடு சொல்லி வருகிறோம். நீங்கள் மறுத்து வருகிறீர்கள்.
நீங்கள் மறுக்கும்
அல்லாஹ்வுடைய தூதரின் வழிமுறை :
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள்
தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று
ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரீ 1147, 2013, 3569
ஆயிஷா (ரலி) அவர்கள், ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை' என்று விடையளிக்கிறார்கள்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், 'இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். மிம்பரில் இருந்த
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்'என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி 472, 473, 991, 993, 1137
சுன்னத் ஜமாஅத் என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி(ஸல்)
அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான்.
ஆனால் இவர்கள் தொழும் வித்ரு
தொழுகையாவது சரியா என்றால் .. அதுவும் நபிவழிப்படி இல்லை. வித்ரு தொழுகை தொழும் முறையில்
மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த
வேண்டியிருக்கிறது.
“வித்ரு தொழுகை
அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார்
நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார்
நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப்
(ரலி) நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா
1180
வித்ரு தொழும் முறை
நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற
ரக்அத்களில் அமர மாட்டார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: பைஹகீ
நபி (ஸல்)
அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற
ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸயீ 1698
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸயீ 1698
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறு ரக்அத்களிலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள். ( முஸ்லிம் 1341 திர்மிதீ 421 அபூதாவூத் 1141 தாரமீ 1535 )
“நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் மூன்று
ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள் என்று தெள்ளத்தெளிவாக இருக்க தற்போது சுன்னத்
ஜமாஅத் பள்ளி வாசல்களில் வித்ரு தொழுகை 2+1 என்று பிரித்து தொழப்படுகிறது. அதாவது
முதலில் இரண்டு ரகாயத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்த பின்னர் மீண்டும் தனியாக ஒரு ரகாயத்
தொழுகிறார்கள்.
(சில பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் ஷாபி ,ஹனபி
என்று வித்ரை தனி தனி ஜமாஅத் வைத்து தொழுகிறார்கள் – நமது ஊரிலும் நடக்கிறது அது வேறு விஷயம் )
அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைப்படி பார்த்தால்....
இவர்கள் பிரித்து தொழும் வித்ரு தொழுகையில்
கடைசியாக தொழுத ஒரு ரகாயத் தான் வித்ரு
தொழுகையில் சேரும் ... அப்போ சுன்னத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு ரகாயத் வித்ரு தான் தொழுகிறார்கள் மூன்று
அல்ல என்ற கணக்கு சரி தானே !!!
அப்படி பார்த்தால் நீங்கள் தொழும் இரவுத்தொழுகை (தராவிஹ்) வித்ரை சேர்க்காமல்
பார்த்தால் இருபதா ?,இருபத்தி இரண்டா ?? என்றால் இருபத்தி இரண்டு தானே .... ( என்ன ஒரு கண்டுபிடிப்பு (?!))
அப்போ இனி நீங்க 8 நாங்க 20 என்று சொல்லாதீர்கள் ..
நீங்க
8 நாங்க 22 என்று சொல்லுங்கள் பொருத்தமாக இருக்கும்..
அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை விட - தங்கள் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அது தான் முக்கியம் அதை விட்டு கொடுக்க மாட்டோம் அதை தான் பற்றி பிடித்துக் கொண்டிருப்போம் என்று இருந்தால் வேறு என்ன சொல்வது...
உங்களை பார்த்து தான் அல்லாஹ் கேட்கிறான் :
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த
இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம்
கூறப்பட்டால், அவர்கள்“அப்படியல்ல!
எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய
மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும்
இருந்தால் கூடவா?
31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக)
நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
பதில் சொல்லுங்கள் .....
சுபஹானல்லாஹ் ...
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியில் வாழ்ந்து நேர்வழியில் மரணிக்கும் பாக்கியத்தை தர வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன