(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, January 13, 2015

நாகூரில் எடுக்கப்பட்ட போலி கணக்கெடுப்பும் - பரபரப்பும்.

நேற்று முன்தினம் நாகூர் மைதீன் பள்ளி தெருவில் சிலர் வீடு வீடாக சென்று கணக்குக்கெடுப்பு நடத்துவதாக கூறிகொண்டு ஒவ்வொரு குடும்பத்தின் சுயவிபரத்தையும் உள்நோக்கத்தோடு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த சம்பவம் நடந்த அன்று வீடு வீடாக சென்று  நாங்கள் iodine / கல் உப்பு சோதிக்க வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளர்னர் ஆனால் வீட்டில் உள்ள ஓவ்வோருவரை பற்றியும் விசாரித்துள்ளனர் .. 


சிறுவர்கள் எத்தனை பேர் , பெரியவர்கள்  எத்தனை பேர் , வீட்டில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கிறதா ? வாகனம் இருக்கிறதா ? வெளிநாட்டில் யார் இருக்கிறார்கள் ? என்ன மொபைல் வைத்துள்ளீர்கள் போன்ற பல விபரங்கள் சேகரித்துள்ளனர். 





பிறகு அயோடின் உப்பு / கல் உப்பு ஆகிய இரண்டையும் ரசாயனத்தை வைத்து சோதிப்பது போல் பாவனை செய்துவிட்டு பிறகு தகவல் கொடுத்த வீட்டு பெண்களின் மொபைல் எண்களை வாங்கிகொண்டு சென்றுள்ளனர்.

இது மாலை ஆறு மணிக்கும் மேலாக ஒவ்வொரு வீடாக தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சந்தேகம் கொண்டு தெரு சகோதாரர்கள் விசாரிக்கையில் தாங்கள் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தான் இந்த தகவலை வீடு வீடாக சென்று கணக்கு எடுத்து வருவதாக கூறியுள்ளார்கள்.
இது மேலும் சந்தேகத்தை வலுபடுத்த,அதன்பிறகு இவர்களிடம் சோதனை செய்கையில் மற்ற  வீடுகளில் எடுத்த கணக்குகளும், நாகூரின் வரைபடமும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனைதொடர்ந்து இவர்கள் அனைவரும் நாகூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலதிக விபரம் விரைவில் இன்ஷால்லாஹ்.

படிப்பினை :

முதலில் மக்கள் நாம் தெளிவாக இருக்க வேண்டும் .. நம்முடைய சுயவிபரத்தை ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் எதற்கு கேட்கிறார் , அவர் எங்கிருந்து வருகிறார். அவருக்கு நம்மிடம் தகவல் திரட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா (அடையாள அட்டை ) என்பதை நாம் சோதிக்கவேண்டும். மேலும் அதிகாரபூர்வ கணக்கெடுப்புகள் நடைபெறுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு தெரியபடுத்த அது பத்திரிகையில் முன்கூட்டியே விளம்பரம் செய்யப்படும்.

இது போக தற்போது பி.ஜே.பி ஆட்சியில் இருப்பதால் உள்நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்பதை குறித்த விழிப்புணர்வை நாம் பெற வேண்டும். பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும்போது யாரேனும் கணக்கெடுப்பு , சேல்ஸ் என்று வந்தால் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...